336. வகையின்றி வாழ்தல்..

imagesCAMC2V0Z

வகையின்றி வாழ்தல்…

நினைவெனும் பகலில்
நனையும் இன்பத்தில்
அனைத்தும் உருவாகுதல்
கனைதல் பாக்கியம்.

நிறை நித்திரை
குறைந்து களைப்பை
இறைத்து ஆரோக்கியம்
அறைகூவல் இழப்பு.

மிகையாகும் களைப்பு
முகையவிழும் இராத்தூக்கம்.
வகையாய் மலரும்
நகை நிம்மதி.

கையாகும் பாறையென
புகையாகும் புன்னகை.
சிகை சிலிர்த்துத்
தசைகளை இயக்கு!

வாழ்வுக் கூத்தில்
வகையின்றி வாழ்தல்
தாழ்வுனை நெருங்குதல்
இகழ்வு! மாற்றிடு!

பா ஆக்கம வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14.9.2014
(கனைதல் – நெருங்குதல்)

reflection-swirl-2

Advertisements

15 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. மகேந்திரன்
    செப் 14, 2014 @ 23:03:14

    குறைகள் தவிர்த்து
    வாழும் வாழ்க்கைக்கு
    நல்ல பல சூத்திரங்கள் வகுத்து
    வகையுடன் வாழ்ந்தால்
    வாகை சூடலாம் என உரைக்கும்
    அழகான கவிதை வேதாம்மா..

    மறுமொழி

  2. Rajarajeswari jaghamani
    செப் 15, 2014 @ 03:16:17

    வாழ்வுக் கூத்தில்
    வகையின்றி வாழ்தல்
    வருந்த வைக்குமே..!

    மறுமொழி

  3. chandra
    செப் 15, 2014 @ 03:33:31

    பகையாகும் பாறையென
    புகையாகும் புன்னகை.
    சிகை சிலிர்த்துத்
    தசைகளை இயக்கு!

    Arumai sagothari

    மறுமொழி

  4. கோமதி அரசு
    செப் 15, 2014 @ 06:21:44

    எப்படி வாழ வேண்டும் என்று அழகாய் சொல்கிறது கவிதை.
    வகையின்றி வாழ்தல் தீமை.
    அருமை கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  5. தென்றல்சசிகலா
    செப் 15, 2014 @ 06:45:55

    நல்லதொரு அறிவுரை பகிர்வுக்கு நன்றி தோழி.

    மறுமொழி

  6. கோவை கவி
    செப் 15, 2014 @ 19:37:38

    Loganadan PS :-
    அற்புதம் அருமை அபாரம்

    Alvit Vincent :-
    வகையாக வாழும் வழி சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    Vetha Langathilakam:-
    Mikka nanry dear L.PS and A.V. Glad.

    மறுமொழி

  7. sujatha anton
    செப் 16, 2014 @ 19:34:50

    அருமை… தூக்கம் கெடும்போது மனிதனின் ஆரோக்யமும் குலைந்துவிடும். நல்ல
    தூக்கம் ஆரோக்யத்திற்கு வழி சமைக்கும். வாழ்த்துக்கள் ”கவிதாயினி வேதா”

    மறுமொழி

  8. yarlpavanan
    செப் 17, 2014 @ 06:46:54

    அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
    http://wp.me/pTOfc-b9

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: