337. பனி.

51884_1599666428751_179239_o-pp

பனி.

தீ கண்டால் தீர்தல்
மீ அழகுப் பனி
வீ ஒரு வகையில்.
சீ என்பாருமுளர்.

திரவநிலை மாறிய
திண்மநிலை நீர்.
திரமாய் ஒளியூடுருவும்.
கிறீன்லாந்து, அன்டார்டிக்காவிலதிகம்.

நுனிப்புல்லில், பூக்களில்
நனியழகு வைரம்.
தனியுறைநிலை நீர்
துனி குளிர்.

ஞ்சுப் பனியாய்,
பனித்தூறலாய்,
ஆலங்கட்டி மழையாய்
ஆச்சரியப் பொலிவு.

ற்சிற்பம்,
மணற்சிற்பம்,
பனியிலும்
செதுக்கும் கலை.

றைவாய் நடப்பது
பனிப்போர் என்பார்.
மனநிலை குளம்பியோரையும்
அவருக்குப் பனியென்பார்.

(மீ – மேன்மை. வீ – மலர். திரமாய் – வலிமையாய். நனி – மிகுதி
தனி – ஒப்பின்மை. துனி – வெறுப்பு. தீர்தல் – அழிதல்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-9-2014.

cloudbar550

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  செப் 22, 2014 @ 00:38:44

  அருமையான கவிதை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  செப் 22, 2014 @ 03:35:43

  பஞ்சுப் பனியாய்,
  பனித்தூறலாய்,
  ஆலங்கட்டி மழையாய்
  ஆச்சரியப் பொலிவு

  அருமையாய் பனியை பொழிய வைத்த கவிதை.!

  மறுமொழி

 3. கோமதி அரசு
  செப் 22, 2014 @ 03:55:58

  கற்சிற்பம்,
  மணற்சிற்பம்,
  பனியிலும்
  செதுக்கும் கலை.//
  பனியின் கொடுமையை பொருட்படுத்தாமல் சிலையை செதுக்கி இன்பம் காண்பர்.
  பனி கவிதை அருமை.

  மறுமொழி

 4. மகேந்திரன்
  செப் 22, 2014 @ 19:22:15

  கவிதையில் பனியின் அழகு…
  மற்றும் ஓரெழுத்து சொல்லாற்றல்
  அதனை கையாண்ட விதம்
  மிகவும் அழகு வேதாம்மா…

  மறுமொழி

 5. சிவகுமாரன்
  செப் 25, 2014 @ 02:34:17

  அழகிய கவிதை .அருமையான சொற்பிரயோகம் . நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  செப் 25, 2014 @ 10:25:03

  சொற் சிலம்பு ஆட்டத்தை கவிதையில் கண்டேன். இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. yarlpavanan
  அக் 03, 2014 @ 23:15:59

  சிறந்த பா வரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 04, 2014 @ 08:58:52

  Muruguvalli Arasakumar :-
  பனித்துளியின் கவிதை அற்புதம் ..

  Sujatha Anton :-
  பனித்துளிகளாக துளிர்த்த கவிநயம் அருமை. வாழ்த்துக்கள்.!!!!
  September 22
  Kalaimahel Hidaya Risvi :-
  பனித்துளியில் கவித் துளி
  September 24
  Gowry Sivapalan :-
  மறைவாய் நடப்பது
  பனிப்போர் என்பார்.
  மனநிலை குளம்பியோரையும்
  அவருக்குப் பனியென்பார்.

  Vetha Langathilakam :-
  கருத்திட்டவர், விரும்பியவர்கள்,
  வாழ்தியவர்கள் எல்லோரிற்கும்
  மிக மகிழ்வுடன் மிகுந்த நன்றி.
  September 25

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: