339. ஓ!…இசையே!…

illustration music and waves

ஓ!…இசையே!…

சொற்கள் அமைவாய் விழ விளையும்
சொல்லோசை நயம் இயல்பாய் நுழையும்.
ஓசை (ஒலி) இராக ஒழுங்காதல் இசை.
ஓசை, லயம் இணைவு இசையோசை.

உழைப்பாளி குரலோசை தாளத்தோ டிணைந்து
களைந்தது களைப்பு, விளைவு ஆனந்தேசையானது.
நாட்டுப் பாடல், நாடோடி இசையது.
நாட்டுப்பாடல் இசை ராகத்தின் ஆணிவேர்.

ஐம்பொறிகளில் மகோன்னத இன்னதிர்வு தெளிக்கும்.
ஐயமில்லை உணர்வு கிளறி ஊக்குவிக்கும்.
ஐசுவரியம் ராகப் பிழிவின் இன்னூற்று.
ஐக்கியமாகும் இசை சீவராசிகளின் உயிர்நாடி.

இனிய ஏழு சுரங்கள் சரிகமபதநி.
இசை ஏறுமுகமாக அசைந்து ஆரோகணமாகி
இறங்க அவரோகணமாய் இசை பிறக்கிறது.
இசை யிணைவு ஆதிப் பழங்குடியிலிருந்து.

இசை மென்னலைக ளிணைந்து பேரலையாகிறது.
அசைந்து உணர்வை ஆட்டிப் படைக்கிறது.
தசையையும் நெகிழ்த்தும் ஈர்ப்புடை மாயமது.
இசை உயிரினங்களை இசையவைப்பதா லிசையானது.

(கவிதை எழுதி முடிய ஒரு ஆவலில் ”..கேளுங்கள் ஒரு கவிதை..” என்று கணவருக்கு வாசித்துக் காட்டி என்ன தலைப்பு வைக்கலாம் என்றேன்”….ஓ! இசையே!..” என்றார். நான் நினைத்தது இசை என்று மட்டுமே. ”..ஓ! இது நல்லாயிருக்கே…” என்று தலைப்பிட்டேன். அவருக்கு நன்றி.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-9-2014.

15574709

45

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dr.M.K.Muruganandan
  அக் 01, 2014 @ 01:05:14

  “சொற்கள் அமைவாய் விழ விளையும்
  சொல்லோசை நயம் இயல்பாய் நுழையும்…”
  நன்றாக இருக்கிறது

  மறுமொழி

 2. karanthaijayakumar
  அக் 01, 2014 @ 02:08:22

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  அக் 01, 2014 @ 02:08:32

  இனிய இசைக்கவிதை அருமை.

  மறுமொழி

 4. கோமதி அரசு
  அக் 01, 2014 @ 02:40:06

  இசை உயிரினங்களை இசையவைப்பதா லிசையானது.
  கவிதை மிக அருமை .

  மறுமொழி

 5. chandra
  அக் 01, 2014 @ 03:41:03

  ஓ… என்பதே இசையின் வெளிபாடே தங்களின் இசை பா அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. இளமதி
  அக் 01, 2014 @ 05:49:04

  இசையால் வசமாகா இதயம் எது?..
  பாடலும் நினைவிற்கு வந்தது சகோதரி!..

  ”இசை” மிக அருமை! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. yarlpavanan
  அக் 01, 2014 @ 16:19:04

  “சொற்கள் அமைவாய் விழ விளையும்
  சொல்லோசை நயம் இயல்பாய் நுழையும்.” என்பது
  பாப்புனைவோர் கருத்திற்கொள்ள வேண்டிய ஒன்று

  மறுமொழி

 8. மகேந்திரன்
  அக் 02, 2014 @ 02:02:59

  செவியில் நுழைந்து
  உயிரில் கரையும்
  இன்னிசைக் கவிதை வேதாம்மா…

  மறுமொழி

 9. sujatha anton
  அக் 02, 2014 @ 21:01:28

  இசை மென்னலைக ளிணைந்து பேரலையாகிறது.
  அசைந்து உணர்வை ஆட்டிப் படைக்கிறது.
  தசையையும் நெகிழ்த்தும் ஈர்ப்புடை மாயமது.
  இசை உயிரினங்களை இசையவைப்பதா லிசையானது

  அருமை….அருமை… இசையில் இணைந்து நம்மையும் அசைய வைக்கின்றது
  தங்கள கவிநயம். இனிமையாக இசைக்கின்றது. வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 13, 2014 @ 19:02:19

  J Mohaideen Batcha :-
  பார்த்தேன், படிதேன்.. ரசித்தேன். அருமை! Vetha Langathilakam
  Vetha.Langathilakam:-
  mikka nanry brother…

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 01, 2017 @ 15:14:30

  Muruguvalli Arasakumar இசையின் பயணம் மிகவும் அருமை அருமையான தலைப்பு …வாழ்த்துகள் சகோதரி…..
  1 October 2014 at 09:18 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா:_ இனிய ஏழு சுரங்கள் சரிகமபதநி.
  இசை ஏறுமுகமாக அசைந்து ஆரோகணமாகி
  இறங்க அவரோகணமாய் இசை பிறக்கிறது.
  …இசை யிணைவு ஆதிப் பழங்குடியிலிருந்து.
  1 October 2014 at 11:23

  Verona Sharmila:- அருமை பதிவு
  1 October 2014 at 18:02 ·

  Gowry Sivapalan :- அருமை
  1 October 2014 at 19:15 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: