333. குருவை மதிக்கும் குணம்.

 

bi_teachersi_07_sep_4_120533

 

குருவை மதிக்கும் குணம்.

ண்புடை பெற்றவர் வளர்ப்பு
அன்புடை குருவின் கவனிப்பு
இன்புறும் சூழல் விரிப்பு
தென்புடை பண்பு முளைப்பு.

குருவை மதிக்கும் குணம்
அரும்பில் விரியும் மணம்.
விரும்பின் முயற்சியிலும் தினம்
வருமே மதிக்கும் குணம்.

டங்காத் தன்மையும் பெரும்
அகமகிழ்வற்ற நிலையும் தரும்.
அனுபவத்தில் மதியாமை வரும்.
அவமானமும் நிறைந்து வரும்.

வாழ்வுப் பாதையைச் செப்பனிடும்
வயிர(வைர) வழிகாட்டிகள் உயர்த்திடுமெம்
வண்ணமய முகவரிக்கு ஆதாரம்
வரமாய் அமையும் நற்குருவாம்.

குருவை மதித்துப் பணிந்து
அருமை அறிவை அணிந்து
பெருமையாய் உயர்ந்து கணிப்பில்
சிகரம் தொடலாம் நற்குருவால்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-9-2014.

மலர்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்.

 

imagesCACGHBJY

332. நிலையற்ற வாழ்வு

ShifaNaturopathicHealingCentreMumbai_1494 (1)

நிலையற்ற வாழ்வு

தற்காக ஒன்றைப் பற்றுகிறோம்!
எதற்காக ஒன்றை நேசிக்கிறோம்!
எதற்காக ஒன்றைப் பறிகொடுக்கிறோம்!
இதற்காக ஒரு உலக வாழ்வா?

துடிக்கத் துடிக்க உயிர் பிரிவதும்
வெடித்து வெடித்து மனம் அழுவதுவும்
படித்துப் படித்துப் பலர் கூறியும்
நடிப்பு நடிப்பே இவ் வாழ்வு.

ல்லாம் பொய்யெனும் வாழ்வில்
எல்லாம் மெய்யெனும் நீள்வு.
கல்லான இதயமில்லாததால் வாழ்வு
பொல்லாத வேதனைகளில் ஆழ்வு.

ழிகின்ற உடலிற்கும் உயிரிற்கும்
பொழிகின்ற கருத்தும் கவனமும்
விழிகளால் பொழிகின்ற கண்ணீரும்
அழிவதில்லை ஒழிவதில்லை என்றும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-11-2004…ல் ஏதோ ஒரு துன்பமான நேரத்தில் எழுதியது.

 

 

0032

Next Newer Entries