56. இயற்கையினிமை.

10420273_1424845334447534_5618955619808144416_n

இயற்கையினிமை.

இதயத்தமைதி வேண்டி இயற்கையை நாடினால்
உதய சூரியனும் அந்திச்சந்திர ஒளிக்குளிர்மையும்
மதிய வெயில் ஒளியும் மனதிற்கிதமாகும் இயற்கை
நிதியம் என்ற மனப்பதிவு கண்களிற்குத் தக்க தரிசனம்.

இளங்கொடி யசைவில் ஓயாதிழைந்து பேசும்
இளந் தென்றலினிமைச் சுகமிதயத்திற்குத் தரும்
வளம் அளப்பரிய அற்புத உள உடல்நலச் சஞ்சீவி.
விளம்புதலற்ற விசால அனுபவம் வெகு சுகம் சுகம்.

அளப்பரிய அற்புத வானவில்லனுபவம் ஆழ்மனதிற்கிதம்.
இளம்பிறை அழகொளி நீலவான் பின்னணியில்
தளம் பதித்தென் மனக்குளத்தைப் பளிங்கு நீராக்கி
குளப்பம் நீக்கி நற்குணம் தருமமுத அனுபவம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-10-2014

imagesCACSXL03

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  அக் 06, 2014 @ 00:47:03

  ஆஹா!படமும் இயற்கையை வர்ணிக்கும் கவிதையும் அருமை.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  அக் 06, 2014 @ 01:58:06

  யார் சொன்னது ,தனிமையில் இனிமை காண முடியுமா என்று ?இதோ இயற்கை இனிமை !

  மறுமொழி

 3. chandra
  அக் 06, 2014 @ 06:16:07

  arumai.. arumai..

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 06, 2014 @ 12:05:23

  Mani Kandan :-
  தளம் பதித்தென் மனக்குளத்தைப் பளிங்கு நீராக்கி
  குளப்பம் நீக்கி நற்குணம் தருமமுத அனுபவம். / அசத்தல் /சகோதரி Vetha.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 06, 2014 @ 20:09:34

  Alvit Vincent :-
  இயற்கை நாம் தேடும் அமைதியைக் கொடுக்க வல்லதுதான்.

  மறுமொழி

 6. sujatha anton
  அக் 07, 2014 @ 18:25:49

  அளப்பரிய அற்புத வானவில்லனுபவம் ஆழ்மனதிற்கிதம்.
  இளம்பிறை அழகொளி நீலவான் பின்னணியில்
  தளம் பதித்தென் மனக்குளத்தைப் பளிங்கு நீராக்கி
  குளப்பம் நீக்கி நற்குணம் தருமமுத அனுபவம்.

  அனைத்து கவிவரிகளும் அருமை….அற்புதமான கவி ஆக்கம். வாழ்க
  தமிழ்.!!!!

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 10, 2014 @ 01:29:50

  வணக்கம்
  அழகிய படத்திற்கு அற்புதமான கவி கண்டு மகிழ்ந்தேன்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: