2. உயிரோவியம்

viral

உயிரோவியம்

உயிர்த் துடிப்புடை உயர் எழிலோவியம்.
உலக அழுக்குப் பாசி படராத
உன்னத உணர்வசையும் இசை ராகம்.
உலக நிலாமுற்றத்தி லுறவாட உகந்ததாய்
உதிரும் கர்ப்பநிலை மென் சருமம்
உரிதல், வளர்தல் வனப்புடை பூரிப்பு.
உறக்கம் உங்கு உண்ணுதல் தன்வினையாகி
உயிர்ப்புடை புத்தெழில் தருதல் விந்தை!

ஓலி நர்த்தனங்களை இன் கவிதையாக
பொலிவு உன்னிப்பாய் உள்ளெடுக்கும் நளினம்!
அம்மா அப்பா குரல் பரிச்சயம்
அம்மம்மா!..இது என்ன புதியதென்று
செம்மை அவதானம் எம் குரலொலியால்.
ஓவ்வொரு அசைவும் மென்னலையாக மனதைக்
கவ்வி சாரலாய், நீரோடையாய் உணர்வை
வவ்வுதல் (பற்றுதல்) உன்னத மழலை இன்பம்.

பொத்திய கரங்களுள் போதிய தன்னம்பிக்கை
மொத்தமாய்ப் பொதிந்தது மறைவான செய்தியோ!
மொத்த இயக்கங்கள் முழுதாக முதிர்வடைய
வித்தைகள் காட்டுவேன் வியந்திடச் செய்வேன்
சித்திகள் பெற்றிடச் சிறப்பாய் முயலுவேனென
முத்துக்களாய்ச் சிந்தும் தெய்வீக மொழியோ!
உத்தமப் பேரர்கள் சோழா, வெற்றியும்
வித்தக உலகில் வெற்றிகள் குவிக்கட்டும்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
11-10-2014

643630yr2vtei28b

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  அக் 13, 2014 @ 00:58:03

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  அக் 13, 2014 @ 04:30:25

  வித்தக உலகில் வெற்றிகள் குவிக்கட்டும்!
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 13, 2014 @ 05:35:58

  sivamindmoulders.blogspot.in –
  இந்த இணைப்பில் உள்ள siva ram என்பவர் பிறரின் ஆக்கங்களைத் தனது வலையில் தனது பெயரில் போட்டுள்ளார்.
  உங்களது ஆக்கம் இங்குள்ளதா? சென்று பாருங்கள்.
  இது திருட்டுத் தானே!
  எனது புகையெனும் பகை – கவிதையும் இங்குள்ளது.
  அதன் இணைப்பு….http://sivamindmoulders.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 13, 2014 @ 06:18:53

  Mani Kandan in பாவலர்கள் தெரு – Fb :-
  சித்திகள் பெற்றிடச் சிறப்பாய் முயலுவேனென
  முத்துக்களாய்ச் சிந்தும் தெய்வீக மொழியோ! மீச்சிறப்பு

  Vetha Langathilakam:-
  Nanry sakothara. God bless you all.

  Malini Mala :-
  உத்தமப் பேரர்கள் சோழா, வெற்றியும்
  வித்தக உலகில் வெற்றிகள் குவிக்கட்டும்! வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:-
  Nanry malini..God bless you all.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 13, 2014 @ 06:30:27

  Ratha Mariyaratnam :-
  பத்திரமாய் இரத்தினப் பேழையில்
  வைத்துக் காத்திட எண்ணும் மனம்
  அத்தகை புதுமை ,மென்மை
  எத்துணை இன்பச் சுனை
  அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி
  அந்தச் சின்னஞ் சிறிய உருவத்திற்குத் தான்
  எவ்வளவு சக்தி
  Vetha. Langathilakam:-
  ராதா ஆச்சரியமாக உள்ளது கருத்திடலிற்கு!!!!
  மிக்க நன்றி…

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 13, 2014 @ 19:06:40

  You, சிவரமணி கவி கவிச்சுடர், Malini Mala and 2 others like this.

  சிவரமணி கவி கவிச்சுடர்:-
  மிக அருமை

  Vetha Langathilakam:-
  Nanry sivaramany…

  மறுமொழி

 7. sujatha anton
  அக் 14, 2014 @ 20:37:58

  பேர்த்தியின் அற்புத வரிகளால் உயிரோவியம் அழகு பெற்றுள்ளது. நல்லதோர் வீணை…. அருமை.. வாழ்க வளமுடன்.!!!! வாழ்க தமிழ்.!!!

  மறுமொழி

 8. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  அக் 15, 2014 @ 00:57:59

  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 9. kowsy
  அக் 16, 2014 @ 10:24:35

  பொத்திய கரங்களுள் போதிய தன்னம்பிக்கை
  மொத்தமாய்ப் பொதிந்தது மறைவான செய்தியோ!
  மொத்த இயக்கங்கள் முழுதாக முதிர்வடைய
  வித்தைகள் காட்டுவேன் வியந்திடச் செய்வேன்
  சித்திகள் பெற்றிடச் சிறப்பாய் முயலுவேனென
  முத்துக்களாய்ச் சிந்தும் தெய்வீக மொழியோ!
  உத்தமப் பேரர்கள் சோழா, வெற்றியும்
  வித்தக உலகில் வெற்றிகள் குவிக்கட்டும்!

  சோழா வாழ்வில் உயர்வடைவாய். பாட்டி உன்னத அறிவுரை தந்தமர்வார். பேதம் இன்றி நீ வளர்வாய். உன் பார்வைகள் நன்மைக்கு நலம் பல சேர்ப்பாய்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: