33. இது திருட்டுத் தானே!…அல்லது என்ன பெயர்!

1483187_645065675545434_389759903_n

இது திருட்டுத் தானே!…அல்லது என்ன பெயர்!

sivamindmoulders.blogspot.in –
இந்த இணைப்பில் உள்ள siva ram என்பவர் பிறரின் ஆக்கங்களைத் தனது வலையில் தனது பெயரில் போட்டுள்ளார்.
உங்களது ஆக்கம் இங்குள்ளதா? சென்று பாருங்கள்.
இது திருட்டுத் தானே!
எனது புகையெனும் பகை – கவிதையும் இங்குள்ளது.
அதன் இணைப்பு….http://sivamindmoulders.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Vetha.Langathilakam.

Denmark.

13-10-2014

download

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 13, 2014 @ 06:20:50

  Sharmila Dharmaseelan :-
  இப்படி நடப்பது கவலைக்குரிய விடயம்..

  Malini Mala :-
  எனது கவிதைகள் வேறு இணைப்பிலும் சஞ்சிகைகளிலும் பார்த்தேன். என்ன செய்வது.

  Jeeva Kumaran:-
  adap paavikaale!
  October 11
  Malini Mala:-
  இங்கு மாத்திரமல்ல இங்கு நாம் எழுதும் கவிதைகள் சில வேறு சஞ்சிகைகள் , பத்திரிகைகளில் வேறு பெயர்களில் பிரசுரமாகி இருக்கின்றன. . எதைத் திருடுவது என்ற விவஸ்தையே இல்லாத மனிதர்கள்.
  October 11
  சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி:-
  வெவஸ்தை கெட்டவனுங்க!!!
  October 12

  Kannan Sadhasivam:-
  எனக்கும் நிகழ்ந்திருக்கு…. சின்ன பசங்க…. என்ன செய்ய?
  October 12 at 7:13am · Unlike · 1

  Gowry Sivapalan:-
  இதுபோல் எனக்கும் நடந்தது எனது கட்டுரையை தனது கட்டுரை யாய் வானொலி யில் வாசித்த சம்பவம் நீங்கள் அறிந்ததே

  Vetha Langathilakam Suba !.. வலையிலும் கருத்துகள் வந்துள்ளன.
  பார்ப்போம்!….
  கெடுவான் கேடு நினைப்பான்.
  கருத்திற்கு மிக்க நன்றி…சகோதரி.

  மறுமொழி

 2. தி.தமிழ் இளங்கோ
  அக் 13, 2014 @ 09:03:37

  ஆமாம் சகோதரி திருட்டுதான்! உங்கள் ஆதங்கம் புரிகின்றது! அந்த வலைத் தளத்தில் தென்றல் மு.கீதா, மைதிலி கஸ்தூரி ரெங்கன் (மகிழ்நிறை) ஆகியோரது கவிதைகளையும் தனது பெயரில் வெளியிட்டு இருக்கிறார். இன்னும் யார் யாருடைய படைப்புகளை யெல்லாம் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.அவர் மற்றவர்களது படைப்பை தன் பதிவில் வெளியிடும்போது ந்ன்றி என்று சொல்லி அந்த படைப்பாளியின் பெயரைப் போட்டு இருக்க வேண்டும். தன்னுடைய படைப்பாக காட்டி இருப்பதை என்னவென்று சொல்வது?

  எனது பதிவுகளிலும் இதுபோல் சிலர் திருட்டு வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பதிவுத் திருட்டைக் கண்டித்து நானும் ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். யாரும் திருந்துவதாய்த் தெரியவில்லை.

  மறுமொழி

  • angelin
   அக் 13, 2014 @ 17:04:01

   மதுரை சரவணன் ஸ்ரீ சந்திரா மாதவன் இளங்கோ என பலரின் பதிவும் இருக்கு அங்கே

   மறுமொழி

   • angelin
    அக் 13, 2014 @ 17:28:28

    அண்ணா இளங்கோ அண்ணா அந்த நபர் அருணா செல்வம் வெள்ளூர் ராமன் சார் ..ஊழியனின் குரல் ,அப்புறம் தமிழ் முஹில் பிரகாசம் சுரேஷ் கடல் பயணங்கள் என அனைவரின் பதிவையும் சுட்டிருக்கார்

  • கோவை கவி
   நவ் 12, 2014 @ 12:04:31

   நன்றி சகோதரா தி.தமிழ் இளங்கோ, Angalin தகவல்களிற்கு.
   பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

   மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  அக் 13, 2014 @ 11:26:20

  இது திருட்டுதான். அவரது ‘பதிவில்’ தங்களது கண்டனத்தைத் தெரிவியுங்கள்.

  மறுமொழி

 4. angelin
  அக் 13, 2014 @ 12:42:02

  அக்கா வர வர எல்லாரும் சுலபமா முன்னேற பாக்கிறாங்க சமீபத்தில் இன்னொருவருக்கு இப்படி நேரிட்டு அவர் மெசேஜ் அனுப்பி கேட்டபின் இப்போ அந்த நபர் எல்லா பதிவிலும் தோழியின் பெயரையும் வலை லிங்கையும் இணைக்கிறார்
  இப்படி பிறர் உழைப்பில் வாழரவங்களை என்ன சொல்றதின்னே தெரியலை copy cats இவங்கல்லாம்

  மறுமொழி

 5. chandra
  அக் 13, 2014 @ 13:24:39

  சரியாக சொன்னீர்கள் சகோதரி அவரிடம் மறுமொழி சொல்ல சொல்லி கேட்டேன் இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. அவரின் வலைதளத்தை முடக்க வழியுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

  மறுமொழி

 6. Bagawanjee KA
  அக் 13, 2014 @ 17:44:16

  இது சரியா என்று அந்த சிவராமன் தான் சொல்லணும் ,மனசாட்சி இருந்தால் !

  மறுமொழி

 7. karanthaijayakumar
  அக் 14, 2014 @ 02:08:29

  சிவராமன் குறித்த மூன்றாவது பதிவு தங்களுடையது சகோதரியாரே
  சகோதரி தென்றல் கீதா அவர்களும், தமிழ்வாசி முகிலின் பக்கங்கள் பிரகாஷ் அவர்களும் , தங்களுடைய பதிவை இவர், தன்னுடைய பதிவாக வெளியிட்டுள்ளார் என் று வருத்தப்பட்டிருந்தார்கள், தாங்கள் மூன்றாவது.
  சிவராவன் அவர்களது செயல் வருத்தத்திற்குஉரியது
  இனிமேலாவது அவர் தன் செயலை மாற்றிக் கொள்ள வேண்டும்

  மறுமொழி

 8. இளமதி
  அக் 14, 2014 @ 06:05:54

  திருட்டு என்பதை சுத்தமாக மறந்தவர் – மறைத்தவர் போல இருக்கே!

  என்ன செய்யலாம்?…
  வருத்தமாக இருக்கிறது சகோதரி!

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 14, 2014 @ 06:52:56

  புதுச்சேரி தேவமைந்தன்:_
  வாராந்தரி ஒன்றில் எனது கவிதைகள் 1976 இல் பிறருக்குப் பரிசு வாங்கித் தந்தன. 2005 முதல் என் blogs இலிருந்து. ..மரத்துப் போய் விட்டது. “என் குதிரையைப் பலரறிய அவன் இழுத்துப் போகிறான்!” என்று சோவியத் பாவலர் Razul Gamsatov எழுதினார்.

  மறுமொழி

 10. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  அக் 15, 2014 @ 00:57:00

  தங்கள் குமுறல் பலருக்கு உண்டு
  தங்களைப் போல் பலரும் வெளிப்படுத்துகின்றனர்.
  ஆனால்,
  பதிவுத் திருடர்கள்
  இன்னும் திருந்துவதாய்த் தெரியவில்லை!

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 15, 2014 @ 05:50:36

  செ. இரா. செல்வக்குமார்:-
  இதைக் கண்டிக்க வேண்டும். இச்செய்தி கேட்டு வருந்துகின்றேன். முனைவர்ப்பட்ட ஆய்வுரையைக் கூடக் களவாடுகின்றார்கள். அண்மையில் அமெரிக்காவில் உள்ள தமிழன்பரின் மனைவியின் ஆய்வை இன்னொருவர் திருடி அதை மீட்கப் பாடுபட்டனர். விழிப்புணர்வு வேண்டும். தவறு செய்பவர்க்ளை அம்பலப்படுத்த வேண்டும்.

  Vetha Langathilakam :-
  @..செ. இரா. செல்வக்குமார்……..எனது வலைக்குப் போட்டேன் ஆக்கமாக.
  அது தமிழ்மணம் எல்லாம் நாறும்.
  அதை விட நாள் தோறும் கருத்திடுகிறேன்.
  எந்தக் கருத்தும் தனது மின்னஞ்சலுடன் stop….
  வெளியாக்குவது இல்லை.
  பார்ப்போம்..

  Giritharan Navaratnam :-
  முகநூலில் இது போன்ற இலக்கியத்திருட்டு அதிகமாகக் காணப்படுகின்றது. மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. முக்கியமான பதிவுகளை உங்களது வலைப்பூவில் பதிவு செய்தபின்னர் முகநூலில் பதிவு செய்யுங்கள். முகநூல் நிறுவனத்துக்கும் அறிவியுங்கள். அதற்கு முன்னர் இலக்கியத்திருட்டு செய்தவருக்கும் தகவல் அனுப்பி உங்கள் கண்டனத்தை ஒருமுறை தெரிவியுங்கள்.

  Vetha Langathilakam:-
  done…..Nanry….to all of you.

  மறுமொழி

 12. பி. தமிழ் முகில்
  அக் 15, 2014 @ 20:12:14

  கவியே ! அவர் பலரது பதிவுகளை எடுத்து தான் அந்த வலைப்பூவையே உருவாக்கி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் தான் எனது கவிதை அங்கிருப்பதை சகோதரி ஏஞ்சலின் அவர்கள் சொன்னார். அங்கு சென்று பார்த்தால், இதற்கு முன் பார்த்த, படித்த பல நண்பர்களின் பதிவினையும் அங்கு கண்டேன்.

  அவரது வலைப்பூவில் மற்றும் கூகுள் பிளஸ் ல் பின்னூட்டம் இட்டிருந்தேன். ஆனால், அவரிடமிருந்து பதில் இல்லை.

  மறுமொழி

 13. கோவை கவி
  அக் 17, 2014 @ 20:11:49

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: