34. தமிழ் வல்லாண்மை.

10494665_683233265086101_5352445299418082750_nff

தமிழ் வல்லாண்மை.

நறுமணத்தால் தன்னை அடையாளம் காட்டும் மல்லிகை.
பெறுமதி வரிகளால் சிம்மாசனமிடுவது தமிழ் வல்லமை.
வரிகளின் சுடரில் வையகம் பார்க்கும் சொல்லமைவு
வரிகளால் கவிஞன் தனக்காய் கவி இருக்கை செய்வான்.

விருப்பாய் மகிழ்வாய் மனம் தழுவி விரியும்
அருவருப்பில்லாத் தென்றல் இணையும் இன் வரிகள்
உருத்தாய் நர்த்தனமாடும் நங்கையின் நளின அழகாய்
கருத்தைக் கவர்ந்து கரும்பு பிழிந்த சாறாய்த்தமிழ்.

ஈன்ற பொழுதிருந்து மனிதமனம் மகா சமுத்திரம்.
தோன்றிடும் இலக்கண நோய்க்கு மருந்து இலக்கியம்.
ஆன்றோர் தமிழ் மனதைத் தொட்டுத் தூக்கிடும்.
ஊன்றிடும் காகித வயலில் எழுத்து விதைகள்.

புலவர் மரபுகள் புறம் தள்ளியும் இலக்கியக் களிரேறுவார்
பலமுகப் பரிமாணங்கள் தமிழ்ப் பாலருந்திக் காட்டுவார்.
அலசலாம் குறும்தொகை மொழியை தமிழ்வேர் ஆழந்தொட்டு
விலங்கிட்டுத் தோளேறி விரலால் புத்துலக வாயில் காட்டலாம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-10-2014.

Nyt billede

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  அக் 20, 2014 @ 02:14:08

  தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. Bagawanjee KA
  அக் 20, 2014 @ 02:35:27

  #இலக்கண நோய்க்கு மருந்து இலக்கியம்.#
  இந்த நோய்க்கு நானும் நிரந்தர அடிமை !

  மறுமொழி

 3. தி.தமிழ் இளங்கோ
  அக் 20, 2014 @ 05:46:53

  என்னதான் இருந்தாலும் இப்போது சந்த இன்பத்தோடு மரபுக் கவிதைகள் பாடுவோர் குறைந்து வருவது கவலைப்படும் விஷயம்தான்.

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 09, 2014 @ 19:26:24

  You, Eugin Bruce, Ganesalingam Ganes Arumugam, Velavan Athavan and 19 others like this.

  Subajini Sriranjan:-
  இலக்கிய இன்பம் கண்டேன் ..,,,
  அழகாய் தொகுத்து கவியாய் மலரந்தது
  தமிழ்………,
  Natarajan Mariappan:-
  Azhagu Kavithai..last 4 lines awesome
  Natarajan Mariappan Thodarattum ungal sorkaalam sakothari.

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி சகோதரி சுபாஜினி – நண்பர் நடராஜா மாரியப்பன்.
  (கவிதை எழுதும் போது சில கவிதை 2 நிமிடம் 4 நிமிடங்களில் அமையும்
  சில கவிதை எழுதப் பல நாட்கள் எடுக்கும். நாம் நல்லது என்று விரும்புவது தூக்கி வீசப்படும்.
  இதன் கருத்தாவது யாருமே பார்த்துக் கருத்திட மாட்டார்கள்.
  உதாவாத அர்த்தமற்ற வரிகளிற்கு ஓகோ என்று கருத்த வரும்.
  ஆச்சரியப்பட வைக்கும். இது நான் நல்லதென்று கருதியதே.
  கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 09, 2014 @ 19:26:41

  கவின் மகள்:-
  நறுமணத்தால் தன்னை அடையாளம் காட்டும் மல்லிகை.
  பெறுமதி வரிகளால் சிம்மாசனமிடுவது தமிழ் வல்லமை.
  Arumai

  Ratnam Kavimahan:-
  தமிழை போற்றிட வார்த்தைகள் இல்லை……….. தமிழே இல்லா கவியும் இல்லை

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி சகோதரி கவின் மகள், சகோதரர் இரட்னம் கவிமகன்.

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 09, 2014 @ 19:28:45

  சி வா:-
  Arumayaga chonneergal Vetha Langathilakam amma..

  ***
  விருப்பாய் மகிழ்வாய் மனம் தழுவி விரியும்
  அருவருப்பில்லாத் தென்றல் இணையும் இன் வரிகள்
  உருத்தாய் நர்த்தனமாடும் நங்கையின் நளின அழகாய்
  கருத்தைக் கவர்ந்து கரும்பு பிழிந்த சாறாய்த்தமிழ்
  ***
  Alvit Vincent:-
  தமிழ்க்கவிக்கு வாழ்த்துக்கள்.

  Velavan Athavan :-
  கொடி மல்லிகையானாலும் அரசுரிமைச் செங்கோலேந்தி வல்லமையொடு வையகம் காத்துயர தீந் தமிழ் பாவில் சிம்மாசனம் செய்தான் காளிதாசன் அவ்வழியே நின் தமிழ்த் தேன் அமிழ்தொடு உண்டு மகிழ்ந்தேன்…… சகோதரி வேதா அருமையான பதிவு…

  Vetha Langathilakam:-
  சிவா – அல்விற் வின்சென்ட் – வல்வை சுயேன். மிக்க நன்றி . மகிழ்ந்தேன் தங்கள் கருத்துக் கண்டு. இங்கு முகநூலில் கருத்துகளிட குழு குழுவாக மக்கள் உள்ளனர்.
  ஒரு இடத்தில் கருத்திட்ட சிலர் வேறு இடத்தில் இடமாட்டினம்.
  இதிலும் பிரிவுகள் உள்ளது போலத் தெரிகிறது.

  Sujatha Anton :-
  ஈன்ற பொழுதிருந்து மனிதமனம் மகா சமுத்திரம்.
  தோன்றிடும் இலக்கண நோய்க்கு மருந்து இலக்கியம்.
  ஆன்றோர் தமிழ் மனதைத் தொட்டுத் தூக்கிடும்.
  ஊன்றிடும் காகித வயலில் எழுத்து விதைகள்.
  அருமை…..தங்கள் எழுத்துப்பணி நீண்டு வளர்கின்றது. வாழ்க தமிழ்!!

  Vetha Langathilakam:-
  Nanry SUjatha…Have a good day…

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 12, 2014 @ 07:19:18

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: