57. மழைத்தானம்.

rainforest

மழைத்தானம்.

வானம் பொத்தலாகிப் பொழியும் நீரை
தானமா யெமக்கு வானமே தருகிறதோ!
குழை கழுவி நீ கும்மியடிக்கிறாய்!
மழையே மழையே மகிழ்ந்து வருவாய்!
வெட்டவெளித் தூசி கழுவிக்
கிட்டே வா கடதாசிக் கப்பலிட!

விண்ணிலிருந்தி வழுவி நிலம் நாடும்
மண்ணிற் கொரு மணம் கூடும்.
கண்கள் கழுவிக் குளிர்மை தரும்
மழை, களைப்புப் போக்க நிலத்திற்கு
இழையிடும் – நீரினால் புத்துணர்வுச் சேதிக்கு
அழைப்பிடும், உடலுள உற்சாகத்திற்கும்.

றுக மூடிய வீட்டினுள் இன்பமாய்
இழுத்துப் போர்த்தித் துயிலலாம் வருவாய்!
உழவ னுள்ளம் உவகை யுணருது!
கிழவர்கள் குமரராய் ரசிக்கிறார் மகிழ்ந்து!
மழையில் நனைய மழலைகள் துடிக்கிறார்!
மதா பிதாவினர் தடுத்தாட் கொள்கிறார்!

த்தளம் கொட்டி மின்னலோடு வந்து
கைத்தலம் பற்றுவாய் பூமாதேவியை!
மின்னல் இடியால் மொத்த சீவன்களை
என்னமாய்க் கலக்குவாய்! அம்மம்மா பயங்கரம்!
அளவற்ற உன் பெருக்கினால் ஐயகோ!
அல்லோகல்லோலம் வெகு தாழ்வு இடங்களில்!

முதல் மழையில் நனையாதே! நனையாதே!
மூக்குச் சிந்தும் அவதி அவதி!
முக்காலமும் அம்மாவின் கார உரை.
அழகு மழையை ஆசைதீர ரசித்தேன்
அழகு வெள்ள நீரோட்டமங்கு தான்
அப்பப்பாவின் நாற்சார வீட்டில் தான்!

பா ஆக்கம்
பா வானதி வேதா இலங்காதிலகம்
டென்மார்க்.
23-10-2014.

மழை பற்றிய மேலும் எனது 3 இணைப்புகள் கீழே…
1.https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/

2.https://kovaikkavi.wordpress.com/2013/12/14/54-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

3.https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/

imagesCAX5K52V

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  அக் 24, 2014 @ 02:55:01

  வான(தி )ம் தந்த தானத்தை ரசித்து மகிழ்ந்தேன் !

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  அக் 24, 2014 @ 03:18:53

  மத்தளம் கொட்டி மின்னலோடு வந்து
  கைத்தலம் பற்றுவாய் பூமாதேவியை!

  படமும் கவிதை வரிகளும் அருமை.பாராட்டுக்கள்.!

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 24, 2014 @ 05:49:28

  You, Mani Kandan and தேவதா தமிழ் like this.

  Mani Kandan:-
  மின்னல் இடியால் மொத்த சீவன்களை
  என்னமாய்க் கலக்குவாய்! அம்மம்மா பயங்கரம்!

  Vetha Langathilakam:-
  Mikka nanry….dear M.k & தேவதா தமிழ்

  மறுமொழி

 4. yarlpavanan
  அக் 25, 2014 @ 04:47:43

  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 25, 2014 @ 13:45:04

  Ratnam Kavimahan:-
  பார்த்தேன் பகிர்ந்தேன் Vetha Langathilakam அக்கா புதுக்கவியில் உங்கள் கவித்துளி பொழிகிறது மழைத்துளியாய் நன்றி அக்கா.
  http://www.puthukkavi.com/?p=127

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 27, 2014 @ 06:49:55

  புதுச்சேரி தேவமைந்தன்:-
  practical poesy.
  October 25

  Muthulingam Kandiah:-
  அந்த நாள் ஞாபகங்களை அழகுற நினைவலையில் காணச் செய்தமை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி

  Prema Rajaratnam:-
  “மழையில் நனைய மழலைகள் துடிக்கின்றார்
  மாதா பிதாவினர் தடுத்தாட் கொள்கின்றார்,,,”

  இயற்கையின் கொடையைப் பற்றி,நீங்கள் கண்ட அநுபவத்துடன் சேர்த்து,வடித்த அருமையான கவிதை.!!!

  Vetha.Langathilakam:-
  Thank you all of you

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: