35…பிழையறு!

2088870-12299-frame-of-fresh-fruits-and-berries-ææ

இதை இங்கு வாசித்தேன்.
அதை தங்களுடனும் பகிர்கிறேன்.
படவரிகளை நான் எழுதினேன்.
அது பற்றி வாசிக்கத் தேடிய போது இது கிடைத்தது.
அனுபவியுங்கள்.

http://selvamperumal.blogspot.dk/2011/11/pgsr-bahasa-tamil.html……

மொழிச் சிதைவை களையும் வழிமுறைகள் 

1.   தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தமிழாசிரியர்கள் மொழிப்பற்றினை தமிழ் மாணாக்கர்களிடம் விதைக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் பயிலாமல் தமிழ் மொழியைப் பிழையற பேசும் வண்ணம் புதிய குமுகாயம் இந் நாட்டில் உருவாக வேண்டும். தமிழ் மொழியின் தூய்மையான பேச்சைக் கேட்டு அனனத்து தமிழ் மக்களும் தமிழ் மொழியின் இனிமையை தங்கள் குழந்தைகள் அறிய முனைப்பு காட்ட வேண்டும். தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும். தமிழ் மொழி தன் ஊடே கொண்டிருக்கும் அற்புதங்களையும் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். ‘எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்’ எனும் திருமொழியை தமிழ் இனம் உணர தமிழாசிரியர்கள் பெரிதும் பங்காற்ற வேண்டும். மொழி அழிந்தால் இந்நாட்டில் தமிழ் இனம், கலை, கலாச்சாரம் அழியும் எனும் உணர்வை அனைவரும் உணர மொழிச்சிதைவைக் கண்டித்து தமிழாசிரியர்கள் ஊடகங்களில் கண்டணங்களைத் தெரிவிக்க வேண்டும். சிறந்த படைப்புகள் தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும், தமிழ் இணைய தளங்களிலும் உலா வர அதிக நாட்டமுடையவர்களாக தமிழாசிரியர்கள் இருக்க வேண்டும். செந்தமிழின் சிறப்புகளையும் தூய தமிழ் படைப்புகளையும் அனைவரும் கற்றுக் கொள்ள வழி வகுக்க வேண்டும். தூய தமிழில் அனைவரும் பேசும் முறையினை அறிமுகம் செய்திடல் வேண்டும்.  தமிழர்களிடையே தூய தமிழ் மொழிப் பற்றினை ஓங்கச் செய்வது தமிழாசிரியர்களின் தலையாய கடமையாகும்.  
  
2.   தமிழினம் மொழிச் சிதைவை உணராமல் கொடுந்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பகட்டான தமிழ் இனம் இந் நாட்டில் வாழ்ந்து பாடையிலேறும் முன் பண்பட்ட தமிழினமாக, மொழி வளம் கொண்டவர்களாக வாழ்ந்து வீழ்வது உத்தமம் எனும் நிலையை அடைய வேண்டும். இனமானம் கொண்ட குமுகாயம் மலர வேற்று மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். வேற்று மொழி மோகமுடைய மனப்போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். செம்மொழிஎன்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்மொழி, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து நிற்கவேண்டுமென்றால் தூய  தமிழில் தமிழ் படித்தவர்கள் தமிழில் பேச வேண்டும். இந்நிலை நீடித்தால்செம்மொழியாகிய தமிழ், காலப்போக்கில் இலக்கியவழக்கில் தனித் தமிழாகவும் பேச்சு வழக்கில்கலப்புமொழியாகவும் மாறித் தன் தனித்தன்மையைஇழந்துவிடும் என்பதை தமிழ் படித்தவர்களாவது உணர வேண்டும். …..(தொடர்கிறது……)……  

வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-10-2014

lotus-border

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Joseph Viju
  அக் 27, 2014 @ 10:22:54

  தமிழ்ப் பற்றும் அது காக்கும் முனைவும் கொண்ட தங்களின் பகிர்வு அருமை.
  மின்னஞ்சல் பெயர் எல்லாம் கட்டாயமாக்கப் பட்டிருப்பதால் மட்டுமே பலமுறை தங்கள் தளம் வந்தும கருத்திடாமல் திரும்ப நேர்கிறது.
  நன்றி

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  அக் 27, 2014 @ 11:27:58

  செம்மொழிஎன்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்மொழி, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து சிறக்க அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

  மறுமொழி

 3. yarlpavanan
  அக் 27, 2014 @ 11:41:15

  “செம்மொழி என்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ் மொழி, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து நிற்க வேண்டுமென்றால் தூய தமிழில் தமிழ் படித்தவர்கள் தமிழில் பேச வேண்டும்.” என்ற கருத்தை வரவேற்கிறேன்.

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 4. ranjani135
  அக் 27, 2014 @ 12:57:51

  தமிழ் மொழியை சிதைக்காமல் மாணவர்களுக்குச் சொல்லித்தர ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியம். தமிழ் மொழி வாழ்வாங்கு வாழ நல்ல வழிகளை முன் வைத்துள்ளீர்கள், சகோதரி, பாராட்டுக்கள்!

  மறுமொழி

 5. ramani
  அக் 27, 2014 @ 12:59:18

  மிகச் சிறந்த அற்புதமான அவசியமான பதிவு
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  மறுமொழி

 6. Bagawanjee KA
  அக் 27, 2014 @ 17:10:18

  பிழையறு என்று நீங்கள் சொல்லி இருப்பது பொருத்தமானதே !

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  அக் 27, 2014 @ 21:54:19

  \\தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும்.\\
  மிகவும் உண்மையான வரிகள். தமிழின் சிறப்பை அறியாது அதை சிறுமைப்படுத்துவோர் யாவரும் உணர்ந்து திருந்துதல் வேண்டும். தமிழராய்ப் பிறந்து தமிழென்னும் தீங்கனிச்சாற்றின் சுவையறியாமல் வாழ்வதும் ஒரு வாழ்வா? சிந்திக்கவைக்கும் வரிகள். நன்றி தோழி.

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 28, 2014 @ 07:35:37

  Manikandan Nagarajan:-
  தீந்தமிழ் தேனாறு ஓடுகிறது தங்கள் வரிகளில்……பகிர்வுக்கு மிக்க நன்றி…….!!!!!!

  Gowry Sivapalan:-
  உள்ளபடி பேறு கொள்வாய் ஏறு

  Vetha Langathilakam:-
  Nanry…Makilvu..dear M.K and Gowry Sivapalan

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 28, 2014 @ 07:41:03

  Mullai Adhavan:-
  தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும்.\ நன்றாகச் சொன்னீர்கள்

  Sharmila Dharmaseelan:-
  அருமை அருமை
  Muruguvalli Arasakumar:-
  நிதர்சனம்..சிந்திக்கவைக்கும் வரிகள்

  தென்றல் சசி கலா :-
  அழகு…
  Sujatha Anton:-
  அருமை இறுதி எழுத்துக்கள் மேலும் அழகூட்டியுள்ளது. வாழ்க தமிழ்!!!

  Vetha Langathilakam:-
  Thank you all of you….Klik the link and read more….

  Velavan Athavan ஓடுகின்ற தமிழாற்றில் பிழை இன்றி அள்ளிக் கொள் புள்ளிகள் நூறுண்டு பேறு பெற்று ஏறு உன் வாழ்வுயரும் அழகுத் தமிழின் ஆராதனை கண்டேன் அருமை தொடரட்டும் நிந்தன் பணி…. சகோதரி..
  October 28 at 10:49pm · Unlike · 1

  Vetha Langathilakam Nanry Sujen…..makilchchi….
  October 28 at 11:36pm · Like · 1

  Mani Kandan:-
  பிழையறுக்கிறது பா. அருமை .
  5-11-14

  Vetha Langathilakam:-
  Mikka nanry dear…M.K….Have a very good day….
  Just now · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: