84. கவிதை பாருங்கள் – காதல் குன்றாத் தகைமை

316191_170152986407866_100002394972739_317520_590432677_n-øø,,,

காதல் குன்றாத் தகைமை

கடகடவென ஓடும் ஓட்ட வாழ்வில்
சடசடவென முறியும் இல்லற அமைதி
வெடவெடவென நடுங்கும் உறவு நெருக்கம்
தடதடவென ஆடும் நேசம் பாசம்.

படபடக்கும் மனதால் தினம் தினம்
தொடவிடாது நகரும் எரிச்சல் சினம்.
சிடுசிடுத்து வெடி வெடித்துக் குளப்பும்
கடுகடுப்பான சொற் குமிழ்கள் வளையங்கள்

எங்கு பார்த்தாலும் மழைக் காளான்களாய்ப்
பொங்கி வெடிக்கும் நவீன இணைகள்.
பங்கு கொண்டு சமரசம் செய்யவியலாத்
தொங்கு பாலமான புரிந்துணர்வுக் கனதி.

நான்கு தசாப்தங்களிற்கும் மேலான என்
தேன் கூட்டு வாழ்வில் பொறுக்கியது இந்த
நான்கு தர இரண்டு (8) பட வரிகள் ( photo poem)
வான் குருவியின் கூடாக உருப்பெற்றதிங்கு.

பா வானதி 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-10-2014.

2686814t0wzzlw0rl

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  அக் 29, 2014 @ 02:46:23

  காதல் எப்போதுமே வற்றாத ஜீவ நதியே

  மறுமொழி

 2. yarlpavanan
  அக் 29, 2014 @ 09:19:21

  சிறந்த ஓசை நயம் கொண்ட
  இனிய பாவரிகள் படிக்கச் சுகமானது
  தொடருங்கள்

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 29, 2014 @ 14:27:03

  You, Mani Kandan, சி வா and 2 others like this.

  சி வா:-
  ஆகா.. அருமை அருமை வேதாம்மா..
  எட்டுத் தலைமுறை அனுபவங்களை
  எட்டே வரிகளில் அடக்கிவிட்டீர்கள்…

  Mani Kandan :-
  அருமையான பதிவு

  Vetha Langathilakam :-
  திருமணமாகி வாழத் தெரியாமல் அல்லாடுகிறார்கள்.
  திருமணம் புரியாமலே வாழ்வது சிறந்ததோ என்று……

  You, சிவரமணி கவி கவிச்சுடர், Ma La, Muruguvalli Arasakumar and 5 others like this.

  Ma La:-
  அருமை கனதி என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் விளங்கவில்லை …
  Jeyam RamaChandran:-
  Ada ada!
  Vetha Langathilakam:-
  @ Ma La…கனதி – பாரம், இறுமாப்பு (கனம் என்று கூறுவோமே….)
  Ma La:-
  சூப்பர்

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 29, 2014 @ 14:40:07

  Gowry Sivapalan:-
  உறவும் பிரிவும் தொடரும் வாழ்க்கைப் பயணம். இதில் வேண்டியதைப் பெறாச் சிலர் விரும்பியவாறு வாழ்வை அமைத்துக் கொள்ளுகின்றார்கள்

  பாலகன் பாலகன் and Polikainews Visinthan like this.

  பாலகன் பாலகன்:-
  மட மட வென்று வந்து விழுந்த எழுத்துக்கள் அருமை வேதா…

  Vetha Langathilakam :-
  Mikka nanry….

  மறுமொழி

 5. சசிகலா
  அக் 30, 2014 @ 05:16:17

  தலைப்பே அழகான கவிதை…வரிகளும் சிறப்பு.

  மறுமொழி

 6. Kavignar valvai Suyen
  நவ் 16, 2014 @ 21:37:37

  இனிய வாழ்வில் சிதைவுகள் வரலாம் தேறுதல் கொண்டால் மாறுதல் உண்டு ஆறுதல் பெறும் நெஞ்சம் அமைதியுறும்… காதல் குன்றா வாழ்விற்கு அஞ்சலில் அனுபவம் தந்தீர்கள் சகோதரி, அருமை…

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 28, 2017 @ 10:07:21

  Kandiah Murugathasan //பங்கு கொண்டு சமரசம் செய்யவியலாத்
  தொங்கு பாலமான புரிந்துணர்வுக் கனதி// அருமை
  28 October 2014 at 23:38
  Vetha Langathilakam :- பார்த்த கேட்ட இல்லறங்களின் தாக்கம் வரிகளாக….
  மிக்க நன்றி…
  28 October 2014 at 23:40 ·

  Malini Mala:- பங்கு கொண்டு சமரசம் செய்யவியலாத் தொங்கு பாலமாய் புரிந்துணர்வுக் கனதி,……. உண்மைதான். ஆழமான அவதானிப்பில் எழுந்த கனதியான வரிகள்
  29 October 2014 at 07:35
  Vetha Langathilakam :- மகிழ்ந்தேன் . மிக்க நன்றி மாலினி .மா
  29 October 2014 at 10:09 ·

  Velavan Athavan:- இனிய வாழ்வில் சிதைவுகள் வரலாம் தேறுதல் கொண்டால் மாறுதல் உண்டு ஆறுதல் பெறும் நெஞ்சம் அமைதியுறும்… காதல் குன்றா வாழ்விற்கு அஞ்சலில் அனுபவம் தந்தீர்கள் சகோதரி, அருமை…
  29 October 2014 at 22:27
  Vetha Langathilakam :- மகிழ்ந்தேன் . மிக்க நன்றி…Sujen….
  29 October 2014 at 15:22

  Sujatha Anton :- அருமை…அருமை… வாழ்க தமிழ்.!!!
  30 October 2014 at 21:10

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 28, 2017 @ 14:45:37

  சுதா பத்மநாதன்:- அழகு
  28-10-2017
  Vetha Langathilakam:- Nanry

  Vairamuthu :- அருமை
  28-10-2017
  Vetha:- Thank you

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: