3. சிறு மழலை வினையூக்கம்.

chola-1 086

சிறு குழந்தைகள் ஒரு மாதக் குழந்தை பசிக்கு அழும்.
சிறுநீரால் நனைந்தவுடன் அழும். தூக்கம் வர அழும்.
உயிரெடுக்கும் அழுகை…ஏதோ பூச்சி கடித்தது போல.
இந்தத் தேவைகள் நிறைவடைய அமைதிச் சிரிப்பு. ஆனந்த விளையாட்டு.
மூத்த பேரன் வெற்றி வளர்ந்து வேற மாதிரி விளையாட்டு. இப்போது இரண்டாவது பேரன் சோழாவின் ரசனை இது.

சிறு மழலை வினையூக்கம்.

உங்கு உண்ணவும்
உச்சா போனாலும்
கண்ணயரவும் காட்டும்
கடிகாரம் அழுகையழுகை.
உயிரெடுக்கும் அழுகை- (அதன் அருத்தம்)
உடனே செய்!
உரியதைச்செய்!
உனக்குத் திருப்புவேனிதை!

”..சின்ன மூக்கு!
சின்னக் கைகள்!..”.
சொன்னார் வெற்றி.
வெற்றிரசனையொரு பக்கம்
சோழா ரசிப்பின்று.
இறுக்கியணைத்தால் மூடுமிமை.
இடைப்பஞ்சு அகற்ற
இதமான விளையாட்டு.

ஒருமாத நிறைவு
அருமை முறுவல்.
மன்மதச் சிரிப்பு!
என்ன விந்தை!
சின்னத் தேவதையழைப்போ!
என்ன காதலது!
மின்னுமுலக இணைப்பன்றோ
சின்ன மழலை வினையூக்கம்!

பா ஆக்கம் பா வானதி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

30-10-2014

baby-items

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  அக் 31, 2014 @ 01:24:56

  இரசித்ததை இரசிக்கும்படி
  கொடுத்தவிதம் அருமை
  கூடுதலாக இரசித்தேன் நானும்
  இந்த நிலையில் இருப்பதால்…
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  அக் 31, 2014 @ 04:04:08

  மின்னுமுலக இணைப்பன்றோ
  சின்ன மழலை வினையூக்கம்!

  ரசிப்பின் வெற்றி..!

  மறுமொழி

 3. yarlpavanan
  அக் 31, 2014 @ 15:43:58

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 01, 2014 @ 08:00:17

  SK Sharma, Mani Kandan .Thendral Jv Singer, வித்யா கேசவராஜா, கவிஞர் வைமுதாவின் காதல் கவிதைகள,..and Rathina Vel like this

  Mani Kandan :-
  அழகு. அருமை

  Vetha Langathilakam:-
  mikka nanru dear M.K

  மறுமொழி

 5. சிவா
  நவ் 01, 2014 @ 10:13:05

  ஹா ஹா ஹா…

  பிஞ்சுப் பாதங்கள்..!!
  கண்டிடவே மா தவம்
  செய்திட வேண்டுமம்மா..

  எய்யூறில்லாச் சிரிப்பிற்கு
  உலகையே விலை கொடுத்தாலும்
  போதாது..

  விரல் நீட்ட இறுகப்
  பற்றும் அப் பிஞ்சு..
  மனதோடு பறக்கும்
  பனி மஞ்சு..

  மழலை போல ஒரு
  பொக்கிசம் உலகினில்
  இருக்குமோ..
  இருப்பினும் யாவருக்கும்
  கிடைக்குமோ…

  மறுமொழி

 6. karanthaijayakumar
  நவ் 01, 2014 @ 15:54:11

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 7. ranjani135
  நவ் 01, 2014 @ 16:33:19

  குழந்தையை மிக அழகாக ரசித்திருக்கிறீர்கள். உங்கள் ரசனை கவிதையின் ஒவ்வொரு வரியிலும் வழிகிறது. ‘உயிரெடுக்கும் அழுகை!’ ஒவ்வொரு பெற்றோரும், பாட்டி தாத்தாக்களும் உண்மையில் உணரும் உணர்வு இது! அதையும் ரசனையுடன் எழுதியிருப்பது சிறப்பு. பாராட்டுக்கள்!

  மறுமொழி

 8. T.N.MURALIDHARANt
  நவ் 02, 2014 @ 08:29:58

  மழலையின் அழகை நாங்களும் கவிதை வடிவாக ரசித்தோம்

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 31, 2017 @ 10:00:33

  Puducherry Devamaindhan:- ‘இடைப் பஞ்சு’ அரிய கலைச்சொல். பெயரன்களுடன் பாவாழ்வு நடத்தும் எங்கள் கோவைக்கவி நெடிது வாழ்க 🙂
  2 November 2014 at 08:51 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: