சோழா 1

Birthday-Border-6

சோழா.

தோழனாய் உடன்பிறப்பாய் வெற்றிக்கு
சோழா அன்புத் தம்பி
வேழம் அருந்திய இன்பம்
வாழ்த்துடையெம் இரண்டாவது பேரன்.

எங்கள் மகனின் இரண்டாவது
தங்க மகன் சோழா.
மங்களமாய் சாந்தி பெற்ற
சிங்கன் வெற்றிச் சோழா.

பரந்து விரிந்த சோழ
இராச்சியம் பதினாறு நூற்றாண்டு.
இராஐராஐ சோழன், இராஜேந்திர
சோழனல்ல வெற்றித் தம்பியிவன்.

மும்முடிச் சோழனல்ல
எம் பேரன் சோழா.
சம்பத்துகள் நிறைந்து சுகத்தோடு
கம்பீரமாய் வாழ்க! வாழ்க!

( வேழம் . கரும்பு. சம்பத்து – செல்வம், பொன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-9-2014

images 2356

56. இயற்கையினிமை.

10420273_1424845334447534_5618955619808144416_n

இயற்கையினிமை.

இதயத்தமைதி வேண்டி இயற்கையை நாடினால்
உதய சூரியனும் அந்திச்சந்திர ஒளிக்குளிர்மையும்
மதிய வெயில் ஒளியும் மனதிற்கிதமாகும் இயற்கை
நிதியம் என்ற மனப்பதிவு கண்களிற்குத் தக்க தரிசனம்.

இளங்கொடி யசைவில் ஓயாதிழைந்து பேசும்
இளந் தென்றலினிமைச் சுகமிதயத்திற்குத் தரும்
வளம் அளப்பரிய அற்புத உள உடல்நலச் சஞ்சீவி.
விளம்புதலற்ற விசால அனுபவம் வெகு சுகம் சுகம்.

அளப்பரிய அற்புத வானவில்லனுபவம் ஆழ்மனதிற்கிதம்.
இளம்பிறை அழகொளி நீலவான் பின்னணியில்
தளம் பதித்தென் மனக்குளத்தைப் பளிங்கு நீராக்கி
குளப்பம் நீக்கி நற்குணம் தருமமுத அனுபவம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-10-2014

imagesCACSXL03

23. இன்று காந்தி உதித்த தினம்

photo

இன்று காந்தி உதித்த தினம்

வாரா வாரம் நவஜீவனிற்கு எழுதியது
நேரான வாழ்வின்  சத்திய சோதனை
பாரமான தொடர்ச்சியான தொரு வரலாறு.
ராஜீயத்துறையில் காந்தி செய்த சோதனைகள்
ஆன்மீகத் துறையிலவர் நடத்திய சோதனைகள்
பாராட்டும் காந்தியின் சுயசரிதையாக அமைந்தது.
காந்தியின் இலட்சியம் தன்னைத் தானறிதல்,
கடவுளை நேருக்கு நேராகக் காணல்,
மோட்சத்தை அடைதல் என்றதாக இருந்தது.
இவற்றிற்காகவே வாழ்கிறேன், நடமாடுகிறேன், நான்
பேசுவன, எழுதுவன, முனைவனவிக் குறிக்கோளுடையதே.
முதியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் விளங்கிடும்
வகையில் மதவிடயங்கள் மட்டுமே இணைப்பதென
சத்திய சோதனையை காந்தி எழுதினார்.

இது வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2.10-2014

வேறு

காந்தி மகாத்மா காந்தி.
காந்தி எனும் சொல்லில்
சாந்தி எனும் அல்லல்
நீந்திய நிலை உலகில்
வந்ததே இல்லையே ஏன்!

அகிம்சா மூர்த்தியாய் பாதி
விகித மனிதரும் மானிலத்தில்
முகிழ்த்தல் பூமி நந்தவனமாய்
ஆகிட ஒரு வாய்பன்றோ!
ஆகிடவில்லையே ஏன்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-10-2013.

 

 

0032

Next Newer Entries