341. மகாபாரதம்.

629_mahabharat-wallpaper-5ll

மகாபாரதம்.

மகாபாரதம் இராமாயணம் இருபெரும் இதிகாசங்கள்.
வியாசம் (விரித்தல்), மிக நீண்டதான பாரதம்.
மகாசக்தியாம் இந்துசமயப் பிரதான நூலொன்று.
தகாத சூதாட்டக் கொடுமை விவரணம்.
தவறுக்குத் தண்டனை உறுதி – தேவையென்றும்
தருமம் வெல்லுமெனும் நீண்ட காவியம்.
குருவம்சப் பங்காளிகள் நிலவுரிமைப் போர்.
குருவம்ச அத்தினாபுர ஆட்சிப் பிணக்கம்.

வியாசமுனிவர் சொல்ல விநாயகர் எழுதியது.
வில்லிபுத்தூரார் (வைஷ்ணவர்) தமிழ் இலக்கியமாக்கியது.
வியாசர் விருந்து உரைநடை இராஜகோபாலாச்சாரியாரது.
வியப்பு! கதைக்குள் கதை கூறுமமைப்புடையது.
சகோதரர் பாண்டு, திருதராட்டினன் பிள்ளைகள்
இடையிலான போர் மையக் காப்பியம்.
அருச்சனனைப் போருக்கிணங்க வைக்கும் உபதேசமே
உலகமகா கீதோபதேசமானது இக் காவியத்திலே.

வேதத்தின் தத்துவங்கள், கருத்துகள் விளக்க
வேதங்கள் நான்கெனும் தேவமொழியைத் தெளிவாக
வேதவியாசர் ரிக், யசுர், சாமம்
அதர்வணமாகத் தெளிவாகச் செப்பனிட்டார் நமக்காக.
இவைகளின் பொருள் விளங்க மகாபாரதத்தை
இயற்றினாராம். ஐந்தாம் வேதமெனவுமிதைக் கூறுவர்.
ஆன்மா திரௌபதையாக, ஐந்து புலன்களை
ஆன்மா மணந்து வாழுமுருவகக் கதையென்பார்.

ஒரு இலட்சத்து இருபதாயிரம் சுலோகங்களாலானது.
பதினெட்டு இலட்சம் சொற்கள் அமைந்தது.
எழுபத்தி நாலாயிரம் பாடலடிகள் நிறைந்தது.
கௌரவர் பாண்டவர் பிணக்கு குருசேத்திரப்போரானது.
தர்மம் நீதி நேர்மையென்று கூறிக்கூறி
சர்வமும் சூழ்ச்சிக்குள் சூழ்ச்சியாய் மகாபாரதம்.
வர்மம் (வன்மம்) பழிக்குப்பழியே இங்குணர்ந்தேன்.
மர்மமான போர்க் கவசங்கள் தந்திரங்கள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-11-2014

10737791_771888509544924_1380567544_o

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  நவ் 03, 2014 @ 05:00:52

  இதிகாசங்களின் பகிர்வுகள். அருமை.1

  மறுமொழி

 2. karanthaijayakumar
  நவ் 03, 2014 @ 05:27:52

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. kowsy
  நவ் 03, 2014 @ 15:32:54

  உண்மை போர்முழுவதும் சூது . அவை ஒவ்வொன்றிற்கும் காரணம்.

  மறுமொழி

 4. bagawanjee
  நவ் 03, 2014 @ 15:54:00

  ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல் மகாபாரத தொடரை தொலைக்காட்சியில் பார்ப்பவர்களை நான் அதிசயமாய் பார்ப்பது வழக்கம் 🙂

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 04, 2014 @ 10:32:46

  You, சி வா and Senthamizh Selvan like this.

  சி வா:-
  ஒரு மிகப் பெருங் காப்பியத்தை
  தஙகளின் சீர் மிகு கோப்பியமாகப்
  படைத்தது பிரமிப்பு.. …See More
  4-11-14

  Vetha Langathilakam:-
  ஆம் அப்படியும் கூறலாம் சிவா.
  இந்தத் தமிழ் சமக்கிருதம், கலப்பு. இந்த விவாதங்கள்
  இதை மாற்றுவது.(ஒரு நாளும் நடக்கப் போவதில்லை. இது என் கருத்து)
  அடுத்து தமிழே பாவனையின்றிப் போகிறது.
  இப்போதும் பல நாட்டு மொழிகளோடு கலக்கிறது.
  இதைப் பேணுவோர் பேணட்டும் அதாவது கலக்கும் தமிழ்.
  அவர்களுக்கு நன்றி.

  சி வா:-
  சரி தான் அம்மா.. தங்களிடம் உறுதிப் படுத்தவே வினவினேன்.. தவறெனில் மன்னிக்க..
  Mani Kandan:-
  ஒரு இலட்சத்து இருபதாயிரம் சுலோகங்களாலானது.
  பதினெட்டு இலட்சம் சொற்கள் அமைந்தது.
  எழுபத்தி நாலாயிரம் பாடலடிகள் நிறைந்தது.நல்ல தகவல் நன்றி. அக்கா..

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி, மகிழ்ச்சி இங்கு விழுந்த கருத்திடல்களிற்கு.
  தங்களிற்கு இறை ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.
  இதை எழுத பல நாட்கள் எடுத்தது எனக்கு.
  தரும் கருத்துகளே ஒரு ஊட்டச் சத்தாகிறது.
  நன்றி…நன்றி…

  கவி. அகிலன் :-
  அருமை
  Vetha Langathilakam:-
  Nanry and happy Kavi.Ahilan. God bless you all.

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 03, 2017 @ 10:17:02

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள்!
  3 November 2014 at 17:20 ·
  Vetha Langathilakam:- Nanry sakothary…..Alvit .V மகாபாரதக் கருத்திற்கு – மகிழ்ச்சி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: