342. உறக்கம்

553470_397835983588509_1359575696_n

உறக்கம்

ஆழ்வினை (முயற்சி) நிறைந்து தேனீயாய் ஆடியோடி
நாள் முழுதும் உழைத்த உடல்
தேள் கழலும் உடலுபாதையால் சோர்ந்திடும்
மீளத் தெம்பு தருதல் உறக்கம்.

உறங்கியெழும் உற்சாகம் மறுநாளின் வினையூக்கி.
இறங்கிய நிலவொளியில் இசைக் குளிப்பு
நறவமருந்திய வண்டுச் சுறுசுறுப்பு இணைப்பு
கறங்கும் (சுழலும்) சிறு மழலை இதழ்ச்சிரிப்பு

மனவமைதியின் ஆளுமையே நிறை தூக்கம்
கனமற்ற சாரல் உடல் நனைக்கும்,
இனமான நீரோடை கால் தழுவுமுணர்வே
அனந்த வீரியம் நிறைக்குமாழ்ந்த தூக்கம்.

பிறை நிலவாம் அன்பின் ஈரமுத்தம்
அறை கூவாத மனம் இறைமை.
குறையற்ற கொடுப்பனவு அன்பு மழை
நிறைந்த தூக்கம் இறை ஆசீர்வாதம்.

(நறவம் – தேன்    அனந்த – அளவற்ற.)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-11-2014.

borddd

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  நவ் 06, 2014 @ 00:12:33

  உண்மைதான் தூக்கம் இறை ஆசிர்வாதம்தான்

  மறுமொழி

 2. கோமதி அரசு
  நவ் 06, 2014 @ 00:43:42

  பிறை நிலவாம் அன்பின் ஈரமுத்தம்
  அறை கூவாத மனம் இறைமை.
  குறையற்ற கொடுப்பனவு அன்பு மழை
  நிறைந்த தூக்கம் இறை ஆசீர்வாதம்.//

  நீங்கள் கவிதையில் சொன்னது போல் நிறைந்த தூக்கம் இறை ஆசீர்வாதம் தான்..

  தூக்கம் இல்லையென்றால்
  பாய் விரித்து தூங்குபவனும் வாய் விரித்து தூங்குகிறான்!
  பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதி இல்லை !
  என்று கவிஞர் பாடியது போல் புலம்ப வேண்டும்.

  மறுமொழி

 3. ramani
  நவ் 06, 2014 @ 01:05:22

  ஆம் நிறைந்த தூக்கம்
  இறைவனின் ஆசியே
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 06, 2014 @ 02:11:42

  தூக்கம் இறைவனின் கருணையோ

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 06, 2014 @ 02:40:14

  அருமை அருமை சகோதரி…

  மறுமொழி

 6. சசிகலா
  நவ் 06, 2014 @ 06:56:33

  நல்ல ஆரோக்கியமே உறக்கமென்பதை அழகாய் உணர்த்தும் வரிகள்.

  மறுமொழி

 7. sujatha anton
  நவ் 06, 2014 @ 16:08:43

  உறக்கம் தழுவிய சிறந்த கவிப்படைப்பு. அருமை. வாழ்க தமிழ்.!!!

  மறுமொழி

 8. மோகன்ஜி
  நவ் 06, 2014 @ 16:42:54

  கவிதையின் சுகத்தில் கண் சொக்குது தூக்கத்தில் …..

  மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 06, 2014 @ 20:43:23

  Mageswari Periasamy:-
  அருமை சகோதரி. நிறைய சொற்கள் எனக்கு பரீச்சயமாகிறது இந்தப் பதிவினை வாசிக்கையில். சிறந்த தமிழ் ஆளுமை தங்களுக்கு. பாராட்டுக்கள்.
  Subajini Sriranjan:-
  அழகான படைப்பு!!
  இலக்கிய இன்பம் கண்டது போல் ஒரு உண்ரவு……….
  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி மகேஸ்வரி, சுபாஜினி
  இத்துடன் வீருப்பமிட்டவர்களிற்கும்.
  அனைவருக்கும் இறையாசி கிடைக்கட்டும்
  Alvit Vincent:-
  படுத்தவுடன் தூங்கிப் போய் விடுபவர்கள் வரம் பெற்றவர்களே.

  Vetha Langathilakam:-
  A.V..I am…..Thanks god…..

  Vetha Langathilakam:-
  Thank you dear A.V and Sujatha.

  You, Mani Kandan and Abdul Majeeth like this.

  Mani Kandan:-
  அருமையான சொல்லாடல். மீச்சிறப்பான வரிகள்.
  7-11-2014

  Vetha Langathilakam :-
  Mikka nanry dear M.K. God bless you all.

  You, Ma La and 2 others like this.

  Ma La:-
  நறவமருந்திய வண்டு போதையின் களிப்பால் சுறுசுறுப்பானதோ புத்துணர்ச்சியான காலை வணக்கம் Vetha Langathilakam மா இந்நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்

  Vetha Langathilakam:-
  Good morning!……Mikka nanry Ma La……. Have a good day

  மறுமொழி

 10. ranjani135
  நவ் 07, 2014 @ 17:17:21

  அந்தக் குழந்தையின் தூக்கம் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. கூடவே உங்கள் இனிய கவிதையும்.
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 11. மகேந்திரன்
  நவ் 07, 2014 @ 20:59:53

  இனிய வணக்கம் வேதாம்மா…
  நல்லுறக்கம் நல்வரமே…
  அருமையான ஆக்கம் வேதாம்மா…

  மறுமொழி

 12. கோவை கவி
  நவ் 08, 2014 @ 08:04:31

  Gowry Sivapalan:-
  நிறை தூக்கம் இறை ஆசீர்வாதம். மன அமைதியின் ஆளுமை நிறை தூக்கம். சரியாகச் சொன்னீர்கள்.

  மறுமொழி

 13. srichandra
  நவ் 09, 2014 @ 16:50:32

  ஆஹா அருமை

  மறுமொழி

 14. Kowsy
  நவ் 06, 2016 @ 12:10:20

  நிச்சயமாக மனஅமைதி ஆளுமையை நிறை தூக்கம்

  மறுமொழி

 15. கோவை கவி
  நவ் 06, 2017 @ 10:40:36

  Alvit Vasantharany Vincent படுத்தவுடன் தூங்கிப் போய் விடுபவர்கள் வரம் பெற்றவர்களே.
  6 November 2014 at 17:04 ·

  Sujatha Anton உறக்கம் தழுவிய சிறந்த கவிப்படைப்பு. அருமை. வாழ்க தமிழ்.!!!
  6 November 2014 at 17:08 ·
  Vetha Langathilakam A.V..I am…..Thanks god…..
  6 November 2014 at 20:01 ·
  Vetha Langathilakam :- Thank you dear A.V and Sujatha.
  6 November 2014 at 20:01

  Gowry Sivapalan நிறை தூக்கம் இறை ஆசீர்வாதம். மன அமைதியின் ஆளுமை நிறை தூக்கம். சரியாகச் சொன்னீர்கள்.
  7 November 2014 at 14:25 ·
  Vetha Langathilakam:- Thank you gowry.
  15 November 2014 at 00:02 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: