58. அருவி

800px-Iguazu_Décembre_2007_-_Panorama_7

 அருவி

அரு – ஒர் உருவம் அற்றது.
வி – மிகுதி, மாறுபாடு, அழகு.
அருவி –ஒர் உருவமற்ற அழகு.
கருவி இது சிறந்த இயற்கைக்கு.
மருவி மலையால் வீழ்தல் வசீகரம்.
திருவினையாற் பெறலாம் ஆரோக்கியச் சுவாசம்.
வெருவும் இதன் ஆர்ப்பரிப்பும் வீழ்தலும்.
நருவிசாகவும் ஆர்ப்பரிப்பாகவும் பல சொரூபங்கள்.

(திருவினை – நல்வினை. வெருவும் – அச்சம். நருவிசாக –நாகரீகமாக)

அருவியாய் விழும் அன்புப் பேச்சு
சுருதியாய் இதயத்துள் நுழைவது நீச்சு.
பெருமை உற்பத்தி மின்சாரம் ஆச்சு.
செருகும் கற்பனை, ஏறும் கவிமூச்சு.
அருவி நீளம் பாயும் வீராங்கனை – வீரன்.
தருக்குடை அருவி அகப்பட்டது சுருட்டும்.
நிருத்தமுடை நீர் மூலிகைகள் கழுவியாடும்
தரும் ஆனந்தக் குளிப்பு உடலாரோக்கியம்.

(நீச்சு – நீந்தல். செருகும் – சிக்கும். நிருத்தமிடும் – நடனம்)

உன்னத இயற்கையின் கவிதை அருவி.
கண்ணாடிப் பளிங்கு நீர்ப் பாலருவி.
எண்ணற்றோர் எழுதிப் பாடி ஆடுகிறார்.
என்ன ராகம்! தாளம்! வசப்படுத்துகிறாய்!.
உன் தரிசனம் மயங்குகிறேனெனை மறக்கிறேன்.
சின்னக் குழந்தை மலையூற்றுக் காடாடிப்
பென்னம்பெரிய பேரருவியாகிப் பின்
என்ன மாதிரிக் கடலில் சங்கமம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-11-2014.

T 11-11-2014

imagesCAX5K52V

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  நவ் 10, 2014 @ 23:00:57

  ‘கோ’ வினின்று
  ‘ஓ’ வென்று அலறிக்கொண்டு
  மண்மகளின் பாதம் நனைக்கும்
  அருவிக்கு அற்புதமான கவிதை வேதாம்மா…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  நவ் 11, 2014 @ 00:54:24

  அருவி
  அருமை
  சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 11, 2014 @ 01:48:47

  ரசித்தேன் சகோதரி….

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  நவ் 11, 2014 @ 02:23:00

  என்ன ராகம்! தாளம்! வசப்படுத்துகிறாய்!.
  உன் தரிசனம் மயங்குகிறேனெனை மறக்கிறேன்.

  அருமை

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 11, 2014 @ 10:52:52

  You, Kannan Sadhasivam and Mani Kandan like this.

  Mani Kandan :-
  அருவி சங்கமிப்பு அருமை . மீச்சிறப்பான சொல்லாடல்

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றியுடன் மகிழ்வும்.
  இனிய நாள் அமையட்டும்.

  மணி ஹரி :-
  அருமையான பதிவு
  Vetha Langathilakam:-
  மணி ஹரி !…..மிக்க நன்றியுடன் மகிழ்வும்.
  இனிய நாள் அமையட்டும்.-

  சி வா :-
  அருமை வேதாம்மா..

  Tamil Susai:-
  மருவி –தழுவுதல், வசீகரம்-ஈர்ப்பு, நருவிசு-முழுதும் all,entire, சொரூபம் -வடிவம்,

  Vetha Langathilakam:-
  Mikka nanryTamil Susai…திருமகள் அகராதியில் நருவிசு என்பதற்கு – நாகரிகம், சிக்கனம், துப்பரவு…என்று உள்ளது.
  இந்த 3 வகையாகவும் எனது வாழ்வில் என் அம்மம்மா- அம்மப்பா
  அப்பப்பா, அப்பம்மாவிடம் பேச்சு வழக்கில் அன்றாட வாழ்விலும் அறிந்துள்ளேன்.
  Just now · Like

  மறுமொழி

 6. yarlpavanan
  நவ் 14, 2014 @ 05:18:59

  “அரு – ஒர் உருவம் அற்றது.
  வி – மிகுதி, மாறுபாடு, அழகு.
  அருவி – ஒர் உருவமற்ற அழகு.
  கருவி இது சிறந்த இயற்கைக்கு.
  மருவி மலையால் வீழ்தல் வசீகரம்.” என
  அருவி பற்றி வடித்த
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 7. Kavignar valvai Suyen
  நவ் 14, 2014 @ 17:43:39

  உருவம் அற்ற மிகையில் அருவி நதியாய் வீழ்கிறேன் வசீகரம் கொள்கிறாய் என்னில் நீ – மூலிகை காட்டையே கழுவி வருகிறேன் உன் ஜீவனுக்கு மருந்தாய் என்னை ஏற்றுக்கொள், உன் ஜீவனாய் என்னை எண்ணிவிடாதே வளைந்தோடி விலகிச் செல்கிரது அருவி நதி – வேதா அக்கா நதியின் ஓட்டம் என்னை நாணம் கொள்ள வைத்தது, அருமையான பதிவு… தமிழில் உறைந்து தமிழானேன் நான்..

  மறுமொழி

 8. கோவை கவி
  பிப் 18, 2015 @ 13:19:55

  Parithi Ramaswamy:-
  உன்னத இயற்கையின் கவிதை அருவி.
  கண்ணாடிப் பளிங்கு நீர்ப் பாலருவி.
  எண்ணற்றோர் எழுதிப் பாடி ஆடுகிறார்.
  என்ன ராகம்! தாளம்! வசப்படுத்துகிறாய்!.
  உன் தரிசனம் மயங்குகிறேனெனை மறக்கிறேன்.
  சின்னக் குழந்தை மலையூற்றுக் காடாடிப்
  பென்னம்பெரிய பேரருவியாகிப் பின்
  என்ன மாதிரிக் கடலில் சங்கமம். = Ms Vedha Langathilagam
  18-2-2015

  Vetha Langathilakam:-
  Nanry..

  மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 10, 2017 @ 11:09:10

  Dhavappudhalvan Badrinarayanan A M அருமை. இனிய நாள் வாழ்த்துக்கள்.
  11 November 2014 at 00:06
  Subajini Sriranjan அற்புதமான கவி…
  11 November 2014 at 06:30 ·

  R Thevathi Rajan ஆஹா…அருவி நீரில்லா அருவி

  வார்த்தைகளாய் இங்கே கொட்டுதே

  கொட்டுவதால் பயன் பெற்றோர் ஏராளமாய்

  தமிழ் தாகம் தீர்க்க வந்ததே தாராளமாய்

  என்றுமே வற்றா(த)து இந்த தமிழ் அருவி

  வேதா எனும் வாயிலில் தோன்றிய

  இந்த அருவியோ சற்றும் தன்னிலை மாறாது

  இயல்பாய் ஓடியே ஓடுமிடம் எல்லாம்

  தமிழே உன்புகழ் பாடியே செழிக்கட்டும்

  இவ்வையகமும் இந்த தமிழ் அருவியால்…

  வாழ்த்துகிறேன் அருவியை அற்புதமாய்

  இங்கே அனுப்பிவைத்த வேதா அவர்களையே…
  11 November 2014 at 08:24 ·

  R Thevathi Rajan ஆஹா…அருவி நீரில்லா அருவி

  வார்த்தைகளாய் இங்கே கொட்டுதே

  கொட்டுவதால் பயன் பெற்றோர் ஏராளமாய்

  தமிழ் தாகம் தீர்க்க வந்ததே தாராளமாய்

  என்றுமே வற்றா(த)து இந்த தமிழ் அருவி

  வேதா எனும் வாயிலில் தோன்றிய

  இந்த அருவியோ சற்றும் தன்னிலை மாறாது

  இயல்பாய் ஓடியே ஓடுமிடம் எல்லாம்

  தமிழே உன்புகழ் பாடியே செழிக்கட்டும்

  இவ்வையகமும் இந்த தமிழ் அருவியால்…

  வாழ்த்துகிறேன் அருவியை அற்புதமாய்

  இங்கே அனுப்பிவைத்த வேதா அவர்களையே…
  11 November 2014 at 08:24 ·

  மறுமொழி

 10. கோவை கவி
  நவ் 10, 2017 @ 11:20:00

  சி வா :- நீர் அருவி இங்கே கவி வடிவில் மனம் தழுவி..
  மனதோடு துன்பங்கள் அதைக்களுவிச்சென்றது..
  மிக அருமை வேதாம்மா..
  11 November 2014 at 13:50 ·

  Parithi Ramaswamy :- அழகாக சொன்னீர்கள்
  12 November 2014 at 00:26 ·

  Verona Sharmila அருமை
  12 November 2014 at 03:58 ·

  Sujatha Anton:- ரி ஆர் ரி வானொலியில் தங்கள் குரலிலும் அருவியாக கொட்டிய
  கவியை கேட்டேன். அருமை…அருமை… தமிழ் அழகு. வாழ்க தமிழ்!!!
  12 November 2014 at 07:48 ·

  Gowry Sivapalan :- உன்னத இயற்கையின் கவிதை அருவி.

  கண்ணாடிப் பளிங்கு நீர்ப் பாலருவி.

  எண்ணற்றோர் எழுதிப் பாடி ஆடுகிறார் . அழகாகச் சொன்னீர்கள்
  12 November 2014 at 12:29 ·

  Vetha Langathilakam:- Siva,, Parithy.R, Sharmila, Syjatha, Gowry …அனைவருக்கும் மிக்க நன்றி
  தங்கள் கருத்த மகிழ்வு தந்தது.
  இறையாசி நிறையட்டும்
  13 November 2014 at 22:05 ·

  Vetha Langathilakam :—சகோதரர்கள் மகேந்திரன் பன்னீர்செல்வம்; தவப்புதல்வன்
  இருவருக்கும் மிக்க நன்றி
  தங்கள் கருத்து மகிழ்வு தந்தது.
  இறையாசி நிறையட்டும்.
  13 November 2014 at 22:07 ·

  Srikumar Balasingam அருவியாய் பாய்கின்றன…
  தங்கள் கவி வரிகள்…..,
  23 November 2014 at 11:40 ·

  Vetha Langathilakam mikka nanry Sri…Have a good day..
  23 November 2014

  Janaki Gunabalasingam ஆகா … அருமை … எனது புதிய கல்வித்தளமாக உங்கள் முகப் பதிவு … மாணவியாகத் தொடர்வேன் …. அருவியின் பாடல் அமுதம்.
  23 November 2014 at 14:59

  மறுமொழி

 11. கோவை கவி
  நவ் 10, 2017 @ 11:22:23

  Ramadhas Muthuswamy:- மிகவும் அருமை!
  “அருவி பறந்திடுமே ஆறாகும் பார்வை
  துருவிய தேங்காயே தான்!”
  ——- “முரசு”
  25 November 2014 at 08:04 ·

  Vetha Langathilakam:- oh!..another discribe… nanru..nanru… துருவிய தேங்காயே தான்!” …thank you…
  25 November 2014 at 08:20

  Puducherry Devamaindhan ஓங்காரம்.
  25 November 2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: