343. எண்ணக் குமிழிகள்….

402745_291656827565812_100001644914484_808628_387984486_npp

எண்ணக் குமிழிகள்….

ன்றாடம் எழுதி எழுதி
அவசர வரிகளாய் அமைப்பது
அழகு(அறிவு)க் கவிதை யென்கிறாய்!
அகப்படும் வார்த்தைகளை வரிசையாக
அடுக்கியடுக்கிப் பகிரங்கப் படுத்தல்
அகநகைக் கிடமான கேடு!
அற்புத வரிகள் அங்கீகாரமுடைத்து.
அகப்பணி (மனசிந்தனை) இதையினம் காட்டல்.

டும் கானமயில் கண்டு
அசையும் வான்கோழி யாகாது
அங்கவீனமற்ற மொழி ஆளுமை
அச்சாணியாதல் அதி அவசியம்!
அறிவீன மழித்துப் புலமையுயர
அறிவு புடமிடுதல், அகவிருள் (அறியாமை)
அழித்தல், அகவாயில் (மனம்) திறத்தல்
அவசியம்! அறிவு விண்ணப்பம்.

ருத்தமுடை வரிகளுள் உள்ளிறங்கல்
அதிர்வுகள் அனுராகம் (விழைதல்) எழுப்பும்.
அன்னணம் (அவ்விதம்) ஆர்வம், ஆவல்
அனலாயத்;, தென்றலாய்த்; தூண்டப்படும்!
அடுத்த கவிதைக் குமிழெழுப்பும்!
அபத்தம் (தவறு) கூறவியலா நிலை
அவலம்! அறிவித்தால் அபவாதம்! (பழிச் சொல்)
அபூர்வ வரிகளிற்காகச் செயற்படலாம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-11-2014.

493789nfy8xzi1n4

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  நவ் 13, 2014 @ 11:23:10

  எண்ணகுமிழிகள் கவிதை அருமை.

  மறுமொழி

 2. ramani
  நவ் 13, 2014 @ 12:27:04

  எண்ணத்தில் விளைந்த அமுதத் துளிகள்
  அற்புதக் கவிதையாக…
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. kowsy
  நவ் 13, 2014 @ 15:54:09

  அங்கவீனமற்ற மொழியே ஆளுமைக் கவிதை எனும் எண்ணக் குமிழி எடுத்தியம்பியமை அருமை

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 14, 2014 @ 02:12:37

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. yarlpavanan
  நவ் 14, 2014 @ 05:14:32

  சிறந்த பாவரிகள்
  நல்ல வழிகாட்டலும் கூட
  தொடருங்கள்

  மறுமொழி

 6. Kavignar valvai Suyen
  நவ் 14, 2014 @ 23:08:31

  இலக்கணம் கொண்ட புலமையும் வரவிலக்கணம் பிசகிய பாமரர் கூற்றும் தமிழே – தமிழே நீ வாழ்க அதிர்வுகளோடு அனுராகம் பகர்ந்து ஆளுமை அகலாமலே அறிவு ஜீவிதம் தரும் தமிழ் புலமையே … அருமையான இலக்கண மலர் ஆய்ந்து கவி மாலை கோர்த்துள்ளீர்கள் – சகோதரி வேதா வாழ்க தங்கள் நற்பணி…

  மறுமொழி

 7. sujatha anton
  நவ் 15, 2014 @ 17:50:58

  அருத்தமுடை வரிகளுள் உள்ளிறங்கல்
  அதிர்வுகள் அனுராகம் (விழைதல்) எழுப்பும்.
  அன்னணம் (அவ்விதம்) ஆர்வம், ஆவல்
  அனலாயத்;, தென்றலாய்த்; தூண்டப்படும்!
  அடுத்த கவிதைக் குமிழெழுப்பும்!
  அபத்தம் (தவறு) கூறவியலா நிலை
  அவலம்! அறிவித்தால் அபவாதம்! (பழிச் சொல்)
  அபூர்வ வரிகளிற்காகச் செயற்படலாம்

  அழகு தமிழ். அருமை. தமிழ் மணம் கமழ்கின்றது. வாழ்க தமிழ்.!!!

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  நவ் 21, 2014 @ 00:33:03

  \\ஆடும் கானமயில் கண்டு
  அசையும் வான்கோழி யாகாது
  அங்கவீனமற்ற மொழி ஆளுமை
  அச்சாணியாதல் அதி அவசியம்!\\
  மிகவும் உண்மை.

  ஆதங்கம் தெறிக்கும் வரிகளும் அழகுதமிழில் இங்கே ரசிக்கவைக்கும் அற்புதம். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 9. chandra
  நவ் 22, 2014 @ 15:59:13

  //அருத்தமுடை வரிகளுள் உள்ளிறங்கல்
  அதிர்வுகள் அனுராகம் (விழைதல்) எழுப்பும்.
  அன்னணம் (அவ்விதம்) ஆர்வம், ஆவல்
  அனலாயத்;, தென்றலாய்த்; தூண்டப்படும்!
  அடுத்த கவிதைக் குமிழெழுப்பும்!
  அபத்தம் (தவறு) கூறவியலா நிலை
  அவலம்! அறிவித்தால் அபவாதம்! (பழிச் சொல்)
  அபூர்வ வரிகளிற்காகச் செயற்படலாம்!// உண்மை அருமை சகோதரி

  மறுமொழி

 10. தனிமரம்
  நவ் 22, 2014 @ 20:31:29

  அருமையான கவிதைக்கு பொருள் சொல்லும் பா.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: