4. குழந்தைத் தூக்கம்….

smiling_newborn_baby_girl_tenafly_newborn_photographer-ll

குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கும் போது அமைதியாக அருகிலிருந்து பார்த்து ரசித்த காட்சி கவிதையாக..
நமது இரண்டாவது பேரன் சோழா தூங்கும் போது நான் ரசித்தது.
திடீரென தூக்கத்தில் அழுவினம். நான் கூறுவேன்
உன்னைக் கிணற்றில் போட்டு விடுவேன் என்று தேவதை மிரட்டுகிறாளோ என்று.
வீட்டில் சிரிப்பார்கள்…மருமகள் விழுந்து விழுந்து சிரிப்பா..
அந்த மாதிரி வீரிட்டுக் கத்துவார்கள்.
அது போலச் சிரிப்பதும் அற்புதம் தான்.

அவர்கள் உணர்வுகள், நரம்புகளின் தொழிற்பாடில் கண்சிமிட்டுவது ஒவ்வொரு கண்ணாக மாறி மாறிச் செய்வதும் சிரிப்பும் ஒவ்வொரு பக்கமாகச் விரிப்பதும் அழகு தான்.
இதோ ரசியுங்கள் என்னைப் போல…
படம் கூகிள் படம்.

குழந்தைத் தூக்கம்….

னவெனும் மாயா உலகில்
தினமும் பாதி நாளில்
மனமாரத் துயின்று உலவுகிறேன்.
எனது நித்திரை யுலகின்
கனவுத் தேவதையே வருவாய்!
உனதும் எனதுமான உலகிது
கண்சிமிட்டும் விண்மீன் பூங்காவில்
எண்ணிக் கொண்டு உலாவுவோம்!

ண்சிமிட்டி விளையாடுவோம்! என்னருகாய்
சின்ன தேவதையே வா!
முதலொரு கண்சிமிட்டு! அப்படியே
மாறி மறு கண்சிமிட்டுவோம்!
ம்….இனிப் போதும்!
சிரிப்புகள்; சிந்துவோம்!…. வா!
சிரிப்போம்!… சத்தமிடாமல் சிரிப்போம்!
ம்ம்….போதும்!…போதும்!

பூந்தோட்டம் போவோமா!..வா!…
கடற்கரை செல்வோமா!…ஏய்!
என்னைத் தனியே விட்டு
எங்கே போகிறாய்! ஏன்
என்னை அழ வைக்கிறாய்!
உன் விளையாட்டு இதுதானா!
நான் உன்னோடு கோபம்!
போ! ஓடிப்போ!….அம்மா!……(அழுகை)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-11-2014

t85402-blue-spk-half-20p

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavignar valvai Suyen
  நவ் 15, 2014 @ 13:16:26

  அறியா பிஞ்சிலும் தேவதைகளின் கிசுகிசுப்பு
  வண்ண மயத் தேர் ஏற்றி
  விண் நட்சத்திரங்களை எண்ண வைத்து
  உலா அழைத்து போகும் விந்தை இனிமை
  பிள்ளைப் பருவம் பூப்பெய்துவிட்டால்
  இச்செயலையே தொல்லை என்கிறோம்
  இதுவே நியதி…. அருமை –
  சகோதரி வேதா, பேரச் செல்வங்களோடு பேசும் தேவதையே நீ வாழி…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 15, 2014 @ 16:40:01

   ”..பிள்ளைப் பருவம் பூப்பெய்துவிட்டால்
   இச்செயலையே தொல்லை என்கிறோம்..” என்ன ஒரு கருத்துச் சிந்தனை…!!
   உண்மை…உண்மை சுஜேன்!.
   மிக்க நன்றி – மகிழ்ச்சி கருத்திடலிற்கு.

   மறுமொழி

 2. Bagawanjee KA
  நவ் 15, 2014 @ 13:37:38

  பாட்டியும் பேரனும் இப்படியே கொஞ்சி மகிழுங்கள் ,எங்களுக்கு கவிதையாவது கிடைக்கிறதே !

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  நவ் 15, 2014 @ 13:40:32

  குழந்தைகளின் விளையாட்டு மட்டுமல்ல தூங்கும் காட்சியும் அழகு என்பதை கவிதை உணர்த்திவிட்டது

  மறுமொழி

 4. sujatha anton
  நவ் 15, 2014 @ 17:46:47

  பழைய ஞாபகங்கள் இப்போது பேரர்களிடம் நிறைவு கண்டு மகிழ்கின்றது.
  அருமை. தமிழ் வாழ்க.!!!

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  நவ் 15, 2014 @ 22:47:13

  கனவுத் தேவதையே வருவாய்!
  உனதும் எனதுமான உலகிது
  கண்சிமிட்டும் விண்மீன் பூங்காவில்
  எண்ணிக் கொண்டு உலாவுவோம்!
  அழகான வரிகள்..

  மறுமொழி

 6. கோமதி அரசு
  நவ் 16, 2014 @ 01:14:15

  கண்சிமிட்டுவது ஒவ்வொரு கண்ணாக மாறி மாறிச் செய்வதும் சிரிப்பும் ஒவ்வொரு பக்கமாகச் விரிப்பதும் அழகு தான்.
  இதோ ரசியுங்கள் என்னைப் போல…//

  ரசித்தேன் உங்களைப்போல.
  கவிதை மிக அருமை.

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 16, 2014 @ 20:05:58

  சி வா, Mani Kandan and NishaMubarak Nazeer like this.

  Mani Kandan:-
  அருமையான வரிகள்.
  15-11-2014.

  Vetha Langathilakam:-
  Mikka nanry Mani Kandan.

  சி வா:-
  நானும் பார்த்திருக்கிறேனம்மா..
  வியந்து மகிழ்ந்திருக்கிறேன்..
  அது பொன்னான நேரம் எனச் சொல்வேன்.. என் மகள் என் கரங்களில் உறங்கி.. பின் அவளறியாது உதிர்த்த புன்னகையது..
  உண்மை உண்மை.. வழிமொழிகிறேன் தங்களுடன்..

  Vetha Langathilakam:-
  nanry Siva……

  மறுமொழி

 8. karanthaijayakumar
  நவ் 17, 2014 @ 02:08:49

  தூங்கும் குழந்தைகள் கூட அழகோ அழகுதான்
  அருமையான கவி சகோதரியாரே

  மறுமொழி

 9. ramani
  நவ் 17, 2014 @ 15:37:20

  ஆம் இறைவனின் இருப்பை
  அவர்களின் சிரிப்பின் மூலம்
  கண்டு மகிழ்வுறலாம் தானே
  ரசித்து ரசிக்கக் கொடுத்த கவிதையை
  மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. அ.பாண்டியன்
  நவ் 17, 2014 @ 17:39:32

  வணக்கம் சகோதரி
  கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
  http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 07, 2014 @ 09:29:20

   nanry sakothara…தங்கள் தொடர் பதிவின் அழைப்பிற்கு மிகுந்த நன்றி…
   சில குடும்பத்து சுகயீனம், மன வேதனைகளால்
   இதைத் (தொடர் பதிவைத்) தொடர முடியவில்லை.
   என்னை மன்னியுங்கள்.

   மிக்க மகிழ்ச்சியும்
   அன்பான கருத்திடலிற்கு நன்றியும்.

   மறுமொழி

 11. கீதமஞ்சரி
  நவ் 21, 2014 @ 00:29:28

  குட்டிப்பேரனின் உணர்வுக்குள் புகுந்து தேவதையை தரிசித்துவந்தது போல் எவ்வளவு அழகாக கவிபுனைந்துள்ளீர்கள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 12. கோவை கவி
  நவ் 15, 2017 @ 09:51:58

  Velavan Athavan (y):- அறியா பிஞ்சிலும் தேவதைகளின் கிசுகிசுப்பு
  வண்ண மயத் தேர் ஏற்றி
  விண் நட்சத்திரங்களை எண்ண வைத்து
  உலா அழைத்து போகும் விந்தை இனிமை
  பிள்ளைப் பருவம் பூப்பெய்துவிட்டால்
  இச்செயலையே தொல்லை என்கிறோம்
  இதுவே நியதி…. அருமை –
  சகோதரி வேதா, பேரச் செல்வங்களோடு பேசும் தேவதையே நீ வாழி…
  15 November 2014 at 14:20 ·

  Prema Rajaratnam :- கவிதையை படிக்க சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.ஏனென்றால் நானும் உங்களை மாதிரி குழந்தை காப்பகத்திலும் வேலை பார்த்ததால் கனக்க இதேமாதிரியான அநுபவங்களை இரசிச்சிருக்கிறேன். நல்ல புகைப்படம்,,,,,அருமை வேதாக்கா,,!
  15 November 2014 at 14:22 ·

  Vetha Langathilakam ”..பிள்ளைப் பருவம் பூப்பெய்துவிட்டால்
  இச்செயலையே தொல்லை என்கிறோம்..” என்ன ஒரு கருத்துச் சிந்தனை…!!
  உண்மை…உண்மை சுஜேன்!.
  மிக்க நன்றி – மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
  15 November 2014 at 14:23

  Vetha Langathilakam :- பிரேமா நன்றி நன்றி…மகிழ்ச்சி.
  எழுதுங்கோ நினைவிற்கு வருவதை….
  நான் தொட்டில் பிள்ளைகளோடு வேலை செய்யவில்லை.
  சோழா…இப்போது. முன்பு வெற்றி…
  வெற்றி இப்போது பெரியவர்
  15 November 2014 at 14:27 ·

  மறுமொழி

 13. கோவை கவி
  நவ் 15, 2017 @ 09:55:04

  Mullai Adhavan வாழ்க
  15 November 2014 at 17:06

  Jeevalingam Kasirajalingam தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் தொடருங்கள்
  15 November 2014 at 17:40 ·

  Vetha Langathilakam mikka nanry dear M.A and J.Kasirajalinghakam
  15 November 2014 at 18:37 ·

  Alvit Vasantharany Vincent :- குழந்தைகள் தாம் காணும் உலகத்தை பலவண்ணக் காட்சிப் பொருளாய் மட்டுமே காண்பதால், தாம் மகிழ்வதோடு தம்மோடு சூழ உள்ளவர்களையும் மகிழ வைக்க முடிகிறது. இதனாலேயே அவர்கள் உலகம் அற்புதமானதாய் அமைந்து விடுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
  15 November 2014 at 18:50 · Like
  Remove
  Vetha Langathilakam
  Vetha Langathilakam Sis A.Vincent மிக்க நன்றி – மகிழ்ச்சி கருத்திடலிற்கு
  15 November 2014 at 18:52

  Puducherry Devamaindhan “எனது நித்திரை யுலகின்
  கனவுத் தேவதையே வருவாய்!
  உனதும் எனதுமான உலகிது..” @-}– WOW:)
  16 November 2014 at 09:18

  Vetha Langathilakam :- நன்றி தங்கள் ரசனைக்கு.
  சரி தானே ஐயா!.
  சின்னஞ்சிறு குழந்தையின் நித்திரைச்
  சாகசங்களில் மயங்கிய கவிதையிது…
  16 November 2014 at 10:24

  Puducherry Devamaindhan:- ilayiththadhaal purigiRadhu.
  16 November 2014 at 10:28 ·

  மறுமொழி

 14. கோவை கவி
  நவ் 15, 2017 @ 09:59:01

  James Gnanenthiran குழந்தைத்தனமான கவிவரிகள் உங்கள் கவித்துவத்தின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன
  18 November 2014 at 19:59 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: