59. பசுமை நறுமணம் புல்தரை (புல்வெளி)

537395_345583298890802_1972166156_nபுல்வெளியை பணக்காரர்கள் யந்திரங்கள் வைத்து வெட்டி அழகாக்குவார்கள்.அதையே இங்கு புதுக்குதல் என்று குறிப்பிட்டுள்ளேன்.

 ”  சர் ஜகதீஷ் சந்திர போஸ் அறிவியல் மேதை தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன் இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும் பிறப்பும் இறப்பும் உண்டு. நம்மைப்போலவே மகிழ்ச்சி துன்பம் போன்ற உணர்ச்சிகளும் உண்டு என்ற கருத்தை  நூல்களில் கூறி உள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சி போஸைப் பாராட்டி ‘சர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது….”   இதை முகநூலில் சகோதரி முருகுவல்லியின் ஆக்கத்தில் வாசித்தேன். அதனால் புல்லையும் உயிர் என்ற ரீதியில் எழுதியுள்ளேன்.

பசுமை நறுமணம் புல்தரை (புல்வெளி)

(நடத்துங்கள்! பட்டிமன்றம்!)

ச்சைக் கம்பளம், பாயென்று
இச்சையாய் பாவிணைப்பார் பாவலர்.
பாலரும் வயோதிபரும் புரள்வார்
பச்சைப் பசும்தரைப் பசுமையில்.
பார்த்துக் கொண்டிருக்கப் பசுமையீர்க்கும்!
சோர்வு தொலையும் மனநோய்க்கு.
கீர்த்தனம் புல்லின் பனித்துளி.
தனித்துளி புல்லின் கிரீடம்.

மிதித்தால் நசுங்கிச் சாதல்.
எதிர்க்கத் தெரியாத சாது.
எதிர்க்க விரும்பாத அகிம்சைவாதி.
புதுக்குதலாய்ப் (அலங்கரித்தல்) பேணுவார் பணக்காரர்.
சூரியக்கதிர் சூறாவளி மழையும்
தூவென்று ஒதுக்காத தூயமனதில்
சூரியக்கதிர் அளவாய் விழுந்தால்
சூனியமாகாது சூரனாய் எழுவார்.

சூறாவளிக்கும் பயந்து ஓடாத
சூதுவாதற்ற மௌனி புற்தரையார்.
தலைசாயோம் என்பவர்களிற்கு அதுவே
விலையாகும் இவர்களின் தரிசனம்.
பூக்களிடையில் புற்கள் கோலமாகும்.
பூமாதேவியின் பச்சை ரோமங்களா!
பூமாதேவியின் அழகுக் கூந்தலின்
பூணாரமா! (அணிகலன்) நடத்துங்கள்! பட்டிமன்றம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-11-2014

Nyt billede

16 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. karanthaijayakumar
    நவ் 24, 2014 @ 01:31:36

    அருமையான கவிதை சகோதரியாரே
    பட்டிமன்றம் தேவைதான்
    நன்றி

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    நவ் 24, 2014 @ 02:06:13

    // கீர்த்தனம் புல்லின் பனித்துளி.
    தனித்துளி புல்லின் கிரீடம் //

    ஆகா…!

    எனது பாணியில் : கனவில் வந்த காந்தி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

    மறுமொழி

  3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    நவ் 24, 2014 @ 03:49:40

    வணக்கம்

    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது இரசிக்கும் படி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  4. சசிகலா
    நவ் 24, 2014 @ 12:13:29

    நல்லதொரு தரிசனம். அழகிய அசாத்தியமான சிந்தை . வாழ்த்துக்கள் தோழி.

    மறுமொழி

  5. Bagawanjee KA
    நவ் 24, 2014 @ 15:04:28

    பூமித்தாயின் கைக்குட்டையா இந்த புல்வெளிகள் ?

    மறுமொழி

  6. Rajarajeswari jaghamani
    நவ் 24, 2014 @ 21:57:02

    http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    மறுமொழி

  7. கோவை கவி
    நவ் 25, 2014 @ 07:35:07

    You and Mani Kandan like this.

    Mani Kandan :-
    பூக்களிடையில் புற்கள் கோலமாகும்.
    பூமாதேவியின் பச்சை ரோமங்களா!
    அழகுக் கூந்தலின் பூணாரமா! அருமையான பதிவு

    Vetha Langathilakam:-
    மிக நன்றி சகோதரா மணிகண்டன் கருத்திடலிற்கு.
    மகிழ்ந்தேன்.

    மறுமொழி

  8. sujatha anton
    நவ் 25, 2014 @ 11:43:27

    பசுமை வனப்பில் மிதந்துவந்த கவித்துளிகள் பசுமையை மேலும்
    மெருகூட்டியுள்ளது. அருமை. வாழ்க தமிழ்.!!!

    மறுமொழி

  9. கோவை கவி
    நவ் 23, 2017 @ 15:27:10

    Gomathy Arasu :- கவிதையும், படமும் அழகு
    24 November 2014 at 01:53

    Mullai Adhavan அழகு அழகு அழகு அழகு அழகு
    24 November 2014 at 03:25

    Janaki Gunabalasingam :-கீர்த்தனம் புல்லின் பனித்துளி.
    தனித்துளி புல்லின் கிரீடம்……arumai
    24 November 2014 at 07:56

    Muruguvalli Arasakumar :- கவிதை மிகவும் அருமை….
    24 November 2014 at 13:45

    Gowry Sivapalan :- சூறாவளி க்குப் பயந்து ஓடாத சூது வாதற்ற மௌனி புற்தரையார்
    24 November 2014 at 20:42
    ந. அரவிந் :- Super
    25 November 2014 at 02:44

    Vetha Langathilakam அன்பின் சகோதரி கோமதி அரசு..
    கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    26 November 2014 at 09:32

    Vetha Langathilakam :- அன்பின் சகோதரர் முல்லை ஆதவன்
    கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    26 November 2014 at 09:33 ·

    Vetha Langathilakam – அன்பின் சகோதரி Gna Guna Janaki.
    கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    26 November 2014 at 09:34

    Vetha Langathilakam:- அன்பின் சகோதரி Muruguvalli Arasakumar
    கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    26 November 2014 at 09:34

    Vetha Langathilakam :- அன்பின் சகோதரி gowry
    கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    26 November 2014 at 09:35

    Vetha Langathilakam :- அன்பின் சகோதரர் Delft Aravinth கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    26 November 2014 at 09:36

    Malini Mala:- பூமாதேவியின் பச்சை ரோமங்கள் அழகிய வர்ணனை அக்கா.
    30 November 2014 at 14:44

    Vetha Langathilakam:- mikka nanry malini….
    30 November 2014 at 15:37

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி