345. இரு கவிதைகள்.

1966790_884242294949364_3374662482516700321_n

படத்திற்கு வரிகள்.

பதின்மூன்று வயது தான் எனக்கு என்றாலும்

பதுமை சகுந்தலை வேடமிட்ட ஒப்பனை!

பதின்ம வயதானாலும் வதனத்தில் குழந்தைமை

பச்சையாய்த் தெரிகிறதாம்! மாதிரிப் படமிது.

 

 அன்னத்திற்குப் பதில் கொக்கு, ஒரு

அழகுப் படத்திற்கு இன்று சம்மதித்தேன்.

அலங்காரமும் ஆடையும் பருவப் பெண்ணாக

அங்கீகாரம் தந்தாலும் நடிப்பதற்குப் பொருத்தமில்லையாம்.

 

 பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

24-11-2014

1506624_1497427530531476_3799184469750421009_n

காத்திருப்பு…

இங்கு தான் சந்தித்தோம்

இங்கு தான் பிரிந்தோம்.

எங்கும் போகாத வாழ்வு.

என் மகனுக்காய் இன்று.

 

தன் வாரவிடுமுறைக்கு வருகிறான்.

அன்பாகச் சகோதரருடன் உறவாட.

எங்கு என்ன தடையோ!

பேருந்தைக் காணோம்! காத்திருப்பு!

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-11-2014

 

line3

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  நவ் 27, 2014 @ 12:37:16

  காத்து இருப்பு கவிதை அருமை.

  மறுமொழி

 2. ramani
  நவ் 27, 2014 @ 13:54:47

  முதல் கவிதை
  அனைத்து விதத்திலும் சரி
  மிகவும் ரசித்தேன்

  இரண்டாம் கவிதையில்
  பேருந்து என்பது இல்லாமல் இருந்தால்
  சரியாக இருக்குமோ எனப்பட்டது

  ஏனெனில் ஒப்பனையும் சூழலும்
  பேருந்திற்கானதாக இல்லாததுபோல் பட்டது

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

  மறுமொழி

 3. raveendran sinnathamby
  நவ் 27, 2014 @ 13:59:26

  arumai.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 27, 2014 @ 14:23:21

  ///தன் வாரவிடுமுறைக்கு வருகிறான்.

  அன்பாகச் சகோதரருடன் உறவாட.

  எங்கு என்ன தடையோ!

  பேருந்தைக் காணோம்! காத்திருப்பு!///
  ஒரு தாயின் தவிப்பு புரிகிறது சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  நவ் 29, 2014 @ 03:27:43

  சிறப்பான பதிவுகள்

  மறுமொழி

 6. B Jambulingam
  நவ் 30, 2014 @ 02:11:20

  காத்திருப்பு கவிதை நாங்களும் காத்திருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

  மறுமொழி

 7. T.N.MURALIDHARAN
  நவ் 30, 2014 @ 04:26:07

  மாருதியின் ஓவியம் அழகு. கவிதை அழகோ அழகு.

  மறுமொழி

 8. அழகான யாழ்ப்பாணம்
  டிசம்பர் 03, 2014 @ 14:28:46

  காத்திருப்பு கவிதை பதிவு அழகு.

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 16:51:54

  Subajini Sriranjan :- பருவப் பெண் அன்னத்திடம் தூது விடுவதாக கற்பனை செய்கின்றேன்!!
  அழகான படமும் சிந்திக்கும் வரியும் !!
  2015
  Vetha Langathilakam:- சுபா இந்தப் படமும் ஓரிருவர் எழுதிய வரிகளும் வாசித்தேன்.
  படம் பார்த்த போது பால்வடியும் குழந்தை முகம் தெரிந்தது.
  கொக்கு நிற்கிறது…
  என் மனதில் பட்டதை எழுதினேன்.
  தங்கள் வரிகளிற்கு நன்றி.
  2015
  Gomathy Arasu:- கவிதை அருமை. சிறுபெண்ணுக்கு என்ன யோசனை? அன்னம் இருந்தால் தூது சொல்லலாம், கொக்கு நிற்கிறதே! என்று யோசிக்கிறாள் போலும்.
  2015
  Verona Sharmila :- பதின்ம வயதானாலும் வதனத்தில் குழந்தைமை
  பச்சையாய்த் தெரிகிறதாம்! மாதிரிப் படமிது…. .. .. அழகிய படம் … படம் பார்த்து அதற்கு ஒரு கவிதை…..அழகுக்கு அழகு சேர்க்கும் கவிதை அருமை
  2015
  Puducherry Devamaindhan :- இதென்ன அநியாயமாயிருக்கிறதே! பால்வடியும் மழலைமுகத்தைப் பருவப்பெண்முகமாய் நினைப்பதா? ஆணாதிக்கமல்லவா இது?
  2015
  Ramadhas Muthuswamy:- “ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு!!!”
  2015
  முருகுவள்ளி அரசகுமார் :- அருமையான கவிதை
  2015
  Vetha Langathilakam :- dear Gomathy -Sharmila –
  புதுச்சேரி தேவமைந்தன் sir –
  Ramadhas Muthuswamy sir – Muruguvalli….அனைவருக்கும் நன்றி…..
  தங்கள் கருத்துகளால் மகிழ்ந்தேன்…
  2015
  Rathy Mohan :- அழகான வரிகள்…!புறாவிடும் தூது போய் அன்னத்திடம் தலைவி தலைவன் நிலை செப்புகிறாளோ..,
  2015
  Sujatha Anton:- படத்திற்கு வரிகள்….வரிகளாக வடித்துள்ளமை. அருமை. படமும் அழகூட்டியுள்ளது.
  2015
  Kannadasan Subbiah :- அருமை
  2015
  Vetha Langathilakam:- mikka nanry Rathy, Sujatha, bro. K.Subbiah…
  2015
  Seeralan Vee :- அழகு கவியும் படமும்
  2015
  Vetha Langathilakam;.:- mikka nanry Dear…
  மேஜர் மாயவன் and Mullai Adhavan…
  2015
  Jasmin Kennedy :- பாவும் படமும் அழகு
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: