347. கார்த்திகை விளக்கீடு.

10421183_10204514069188926_1292683942491899453_n

கார்த்திகை விளக்கீடு.

(சிலிர்க்கும் அனுபவங்கள்)

கார்த்திகை விளக்கீடு என்றும்

கார்த்திகை தீபமென்றால் தவறாது

பார்த்து அனுபவித்த அன்றைய

ஆர்த்திகை (துன்பம்) அறியாப் பாலபருவம்

ஆனந்தம் தருகிறது அப்பாவோடு (அப்பாவின் நினைவோடு)

 

பாளை கிழித்துக் கீறலாக்கி

பழைய துணியால் தலைப்பாகையிட்டு

இலுப்பெண்ணெய் தோய்த்துத் தீயைப்

பற்ற வைத்துக் கோடியிலும்

பந்தம் எற்றினோம் மகிழ்வாக.

 

வாழைக் குற்றி வெட்டி

வாசலில் நிறுத்தி வைத்து

சிரட்டையில் எண்ணெயும் துணிகளுமாய்

சிகரமாய்ப் பந்தம் கொழுத்துவோம்.

சிலிர்க்கும் அனுபவங்கள் மறக்காதவை.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-12-2014

thiri

 

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோமதி அரசு
    டிசம்பர் 13, 2014 @ 09:57:40

    கார்த்திகை தீப மலரும் நினைவுகள் கவிதை அருமை.

    மறுமொழி

  2. Bagawanjee KA
    டிசம்பர் 13, 2014 @ 18:14:09

    #கார்த்திகை விளக்கீடு #
    இனிய நினைவுகளை இன்று நனவாக்க முடியாமல் குறுக்கீடு வந்ததுவே,இதுவும் காலம் செய்த கோலமோ ?

    மறுமொழி

  3. thanimaram
    டிசம்பர் 13, 2014 @ 19:40:22

    அருமையான ஊர் நினைவுகளை அசைபோடுகின்றது கவிதை!

    மறுமொழி

  4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
    டிசம்பர் 13, 2014 @ 23:48:26

    ஆர்த்திகை (துன்பம்) என்ற சொல்லை தற்போதுதான் அறிந்தேன். கவிதை அருமை.

    மறுமொழி

  5. Rajarajeswari jaghamani
    டிசம்பர் 14, 2014 @ 01:09:32

    சிலிர்க்கும் அனுபவங்கள்

    மறுமொழி

  6. திண்டுக்கல் தனபாலன்
    டிசம்பர் 14, 2014 @ 02:05:26

    அழகு… வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  7. karanthaijayakumar
    டிசம்பர் 14, 2014 @ 03:28:02

    ///ஆர்த்திகை (துன்பம்) அறியாப் பாலபருவம்

    ஆனந்தம் தருகிறது அப்பாவோடு (அப்பாவின் நினைவோடு)///
    ஒவ்வொருவரும்
    மீண்டும் வாராதா என்று ஏங்கும் பருவமே
    பால பருவம்தானே
    அருமை சகோதரியாரே
    நன்றி

    மறுமொழி

  8. Dr.M.K.Muruganandan
    டிசம்பர் 16, 2014 @ 02:15:17

    நினைவுகளை மீட்க வைத்த
    நினைவில் நிற்கும் பதிவு

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: