350. கருத்துக் கோலங்கள்

10003475_704682586256859_451808268_n

கருத்துக் கோலங்கள்

ஒவ்வொரு ஆக்கத்திற்கும் கருத்திடுவார்.
ஒன்று விட்டொன்றிற்குக் கருத்திடுவார்.
ஒன்றிற்குக் கிழமையில் கருத்திடுவாள்.
ஒன்றிற்கு மாதத்தில் கருத்திடுவாள்.
ஒப்புக்கும் பலர்! மனமொத்து
ஒன்றிய சிலரெனப் பலரகம்!

நல்ல வரிகளின் ஈர்ப்பு
நடனம் மின்மினிச் சிலிர்ப்பு!
நகராது நாலு வரியிட
நத்தும் (விரும்பும்) மனக்கிளர்வு உண்மை.
தத்தும் தில்லுமுல்லு இங்கும்.
கொத்துது தமிழ் பாவம்!

கொள்ளைத் தவறுடை ஆக்கம்
அள்ளுது ஓகோ! கொடை!
வள்ளலாய்க் கருத்திடுங்கள் என்று
உள்ளகப் பெட்டியில் வேண்டுகோளாம்!
உள்ளறைச் சருகைச் சால்வை
எள்ளும் (ஏளன) போர்வைக் கலாச்சாரம்!

ஐவிரல் போன்று கிளியின்
ஐந்து நிறங்களாய்க் கோலம்
ஐந்து நாட்களும் தன்னாக்கமிட்டு
ஐக்கியமின்றி ஒதுங்கும் சிலர்.
ஐயப்பாடுண்டு இது ஏனென்று!
ஐசுவரியத் தமிழ் பெருகட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-12-2014.

samme heading….https://kovaikkavi.wordpress.com/2011/03/09/230-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

samme heading:-   https://kovaikkavi.wordpress.com/2016/02/18/431/

765536nduvjsuirm1

Advertisements

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 19, 2014 @ 22:15:36

  ஐயப்பாடுண்டு இது ஏனென்று!
  ஐசுவரியத் தமிழ் பெருகட்டும்

  கருத்துக் கோலங்கள்

  மறுமொழி

 2. yarlpavanan
  டிசம்பர் 20, 2014 @ 00:46:07

  “நல்ல வரிகளின் ஈர்ப்பு
  நடனம் மின்மினிச் சிலிர்ப்பு!
  நகராது நாலு வரியிட
  நத்தும் (விரும்பும்) மனக்கிளர்வு உண்மை.
  தத்தும் தில்லுமுல்லு இங்கும்.
  கொத்துது தமிழ் பாவம்!” என்ற
  பார்வையை வரவேற்கிறேன்!
  நேரம் ஒதுக்கி
  பதிவிடும் கருத்திடும்
  பதிவர்களைப் பாராட்டுவோம்
  அவர்களால் தானே
  வலையில் தமிழ் வாழ்கிறது!

  மறுமொழி

 3. karanthaijayakumar
  டிசம்பர் 20, 2014 @ 01:53:00

  ஐசுவரியத் தமிழ் பெருகட்டும்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 20, 2014 @ 02:07:25

  அழகு… அருமை… ஐசுவரியத் தமிழ் பெருகட்டும்…

  மறுமொழி

 5. sarveswary
  டிசம்பர் 20, 2014 @ 09:17:42

  ஆற்றல் நிறைந்த வேதா அவர்கள் தன ஆளுமை எண்ணங்களில் பூத்திடும் சிந்தனைகளை பதிவினில் படர்கொடியாக்குவதும் தனிச் சிறப்பு ! வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  டிசம்பர் 21, 2014 @ 01:18:30

  கருத்திடுபவர்களைப் பற்றிய தங்கள் கண்ணோட்டம் அருமை. தொடர்ந்து வந்து கருத்திட முடியா சூழலில் சேர்த்து வைத்துக் கருத்திடும் வகையைச் சார்ந்தவள் நான்…தங்கள் கருத்துக்கோலம் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அருமை தோழி.

  மறுமொழி

 7. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  டிசம்பர் 21, 2014 @ 02:11:57

  கருத்து கூறுபவர்களைப் பற்றிய தங்களின் பகிர்வு வரவேற்கத்தக்கது.

  மறுமொழி

 8. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 21, 2014 @ 02:34:11

  //கொள்ளைத் தவறுடை ஆக்கம்
  அள்ளுது ஓகோ! கொடை!//
  முகநூலில் இதெல்லாம் தவிர்க்க இயலாததாகி விட்டது.
  உங்கள் ஆதங்கம் மிக சரியானது.
  உண்மையாகக் கருத்திடுவோரும் மிக சிலர் உள்ளனர். ஆர்கலை நினைத்து மகிழ்ச்சி அடைவதை தவிர வேருவழ்யில்லை.
  கருத்தகளை பற்றி கருத்துள்ள கவிதை படித்தமைக்கு நன்றி

  மறுமொழி

 9. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 21, 2014 @ 02:35:46

  மன்னிக்கவும்
  //ஆர்கலை // அவர்களை என்று வாசிக்கவும்
  கருத்திடுகையில் தட்டச்சுப் பிழை ஏற்பட்டுவிட்டது

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 22, 2014 @ 10:43:23

  You, Kannadasan Subbiah, Mani Kandan and 2 others like this.

  Mani Kandan:-
  கருத்திடுவோர் கருத்திடட்டும். கருத்தான பாக்களை படைத்திடுவோம். அருமையான பதிவு. முக நூல் நடப்பு இதுதான்
  December 20

  Vetha Langathilakam :-
  yes..yes….எப்போதும் கருத்தான பதிவுகளே….like…
  பா கங்கை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: