351. மயிலழகா உன் ஒயிலழகா!

1601202_887703164603277_3057235329571767271_n (1)

மயிலழகா உன் ஒயிலழகா!

குயிலாகக் குரலெடுப்பாய் நிலவே
வெயிலில் வாடாத மலரே
மயிலழகா உன் ஒயிலழகா
எயிலின் (ஊர்) ஆராய்ச்சி இன்று!
மாந்தளிர் மேனியை ஏன்
மாந்துது (நுகர்தல்) ரோசாத் துகில்!
சாந்தமானவுன் பிரதி பிம்பம்
பாந்தமாக உள்ளதா நீரில்!

துயில் மறந்தேன் உன்னால்
துளைப்பொன்னாய்(புடமிட்டதங்கம்)தகதகக்கும் அழகு
துளைத்து (ஊடறுத்து) என்னைத் துவைக்கிறது.
துள்ளித் தழும்புகிறேன் தூயவளே!
அழகைப் பூவாளியால் ஊற்றிய
அங்கணன்(சிவன்) வைரக் கலைஞனே!
நீலவானின் நீலகந்திச் (மாணிக்க வகை) சிதறல்களாய்
நீ மின்னி ஒளிர்கிறாய்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-11-2014

Ha_3610png0002

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 23, 2014 @ 01:25:55

  அருமை சகோதரியாரே
  தங்களின் கவியும் மின்னி ஒளிர்கிறது

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 23, 2014 @ 01:40:49

  ரசித்துப் படித்தேன் சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  டிசம்பர் 23, 2014 @ 03:36:53

  பெண்ணுக்கு பெண்ணே பேராசைக் கொள்ளும் அழகை நானும் ரசித்தேன் 🙂

  மறுமொழி

 4. bganesh55
  டிசம்பர் 23, 2014 @ 07:12:46

  படமும் அழகு… உங்கள் தமிழும் அழகு வேதாம்மா.

  மறுமொழி

 5. கோமதி அரசு
  டிசம்பர் 23, 2014 @ 07:18:47

  கவிதை அருமை. அழகான கவிதை

  மறுமொழி

 6. சசிகலா
  டிசம்பர் 23, 2014 @ 07:23:56

  அழகான தலைப்பும் அதுசார்ந்த படமும் மகுடம் வைத்தது போன்ற தங்கள் வரிகளில் சொக்கித்தான் போகிறோம்.

  மறுமொழி

 7. PRABUWIN
  டிசம்பர் 24, 2014 @ 05:56:22

  அழகான கவிதை.

  மறுமொழி

 8. yarlpavanan
  ஜன 04, 2015 @ 15:07:12

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: