60. ஆழிப்பேரலை

1334484544-song-than-500


(இன்று ஆழிப் பேரலை துன்ப நிகழ்வு நடந்த 10வது ஆண்டு நிறைவுப் பிரார்த்தனைகளும்,
ஆத்ம சாந்தி ஒன்று கூடல்களும் நடந்து வரும் போது அன்று ஒரு வருட நிறைவுக்காய் எழுதிய கவிதையை இங்கு பதிவு செய்கிறேன்.)

ஆழிப்பேரலை ஓராண்டு நிறைவு (க்கு எழுதியது)

ஆழிப் பேரலையின் ஆவேசத் தாண்டவம்
ஊழிப்பிரளயமான முதல் ஓராண்டுக் காலமது.
சோழியாக உருண்டது  பலர் வாழ்வு!
கீழிறங்கினர்இ சொத்து சுகம் இழந்தனர்.
விழிநீர் வழிய உறவிழந்தனர் பலர்
வழியேதுமின்றி இன்றும் துயரில் பலர்.
00
சொர்க்கம் எமது நாடு எனும் 
வர்க்கத் தரம் பேணப்பட்டு இன்று
நிர்க்கதியாக யாரும் இல்லை யென்ற
சர்க்கரைச் செய்தி பரவ வேண்டும்.
தீர்மானமுடன் அதிகார நிறுவனங்கள் தம்
அர்த்தமுடை சேவையை அர்ப்பணிக்க வேண்டும்.
00
நல்லதைச்  சொல்பவர் சொன்னபடியே இருக்க
பொல்லாததைச் செய்கிறவர் செய்தபடி இருந்தால்
பொழியும் நிலவின் குளிரெங்கே தெரியும்!
வழியும் காதல் மொழிகளில் விவாகரத்து ஆகும்!
களிபொங்கும் குயிலிசையிலும் கனல் பறக்காதோ!
வழியற்ற மனம் வக்கிர பாதையிலிறங்காதோ!
00
விழி மனமே! உன்னிலும் கீழ் நிலையாளரைக்
குழிக்குள் தள்ளாது கைகொடுத்து உதவு!
பழிக்காளாகாதே! அருகிருந்து அடுத்துக் கெடுக்காதே!
புதுவழி காண உதவும் பொதுநலப்பணத்தைபதுக்காதே!
புனர் வாழ்விற்குக் கை கொடு!
அதுவுன்னை மனிதநேய விழிப்புணர்வு மனிதனாக்கும்!
00

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.27-12-2005

00

வேறு:-

ஆண்டவன் கணக்கு இது

எறும்புகள் சேர்ந்த நெல்மணிகள்
அரும்பு விட்டு முளைத்தன.
விரும்பி வாழ்ந்த வீடுகள்
நெறுங்கி அழிந்தது சுனாமியால்
00
அறுவடைக்குக் காத்திருந்த வேளை
அடைமழை கதிர்களை நனைத்தது.
இசைவுபாடுகளை என்றும் அழிக்கும்
முரண்பாடுகள் முட்டி மொதும்.
00
முரண்பாடுகளில் கட்டி முடிக்கும்
அரணமனை தானே நம் வாழ்வு
ஆண்டவன் கணக்கு இதுவென்று
மீண்டவர் யார் கூறுவார்!
00
நீண்ட நெடும் பாதையில்
தாண்டும் தடை ஏராளம்
சீண்டும் தொல்லை தாராளம்
மாண்டிட வேண்டாம் மன ஆர்வம்
00

(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை)
20-2-2005

தாரண வருடம் எழுதிய ஆழித்துன்பக் கவிதை

https://kovaikkavi.wordpress.com/2010/12/26/189-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/

Samme kind of:-        https://kovaikkavi.wordpress.com/2011/03/12/231/

imagesCAX5K52V

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 27, 2014 @ 01:30:09

  ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்டோருக்கு
  புனர் வாழ்வு கொடுப்பதும்
  அதனை நேர்மையாய் முறைமையாய் செய்வதும்
  அரசின் கடமையல்லவா
  நன்று சொன்னீர் சகோதரியாரே

  மறுமொழி

 2. கோமதி அரசு
  டிசம்பர் 27, 2014 @ 01:40:45

  சோழியாக உருண்டது பலர் வாழ்வு!

  கீழிறங்கினர், சொத்து சுகம் இழந்தனர்.

  விழிநீர் வழிய உறவிழந்தனர் பலர்

  வழியேதுமின்றி இன்றும் துயரில் பலர்.//

  இந்த நிகழவை உங்கள் கவிதையில் படிக்கும் போது முன்பு நடந்த நிகழவுகள் கண்ணுக்கு வந்து மனதை கனக்க வைக்கிறது.
  மீண்டும் இது போன்ற இயற்கை சீற்றம் வராமல் இறைவனும், இயற்கையும் காக்க வேண்டும்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 27, 2014 @ 03:42:45

  இது போல் இனி நேர வேண்டாமென வேண்டுகிறேன்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: