347. கார்த்திகை விளக்கீடு.

10421183_10204514069188926_1292683942491899453_n

கார்த்திகை விளக்கீடு.

(சிலிர்க்கும் அனுபவங்கள்)

கார்த்திகை விளக்கீடு என்றும்

கார்த்திகை தீபமென்றால் தவறாது

பார்த்து அனுபவித்த அன்றைய

ஆர்த்திகை (துன்பம்) அறியாப் பாலபருவம்

ஆனந்தம் தருகிறது அப்பாவோடு (அப்பாவின் நினைவோடு)

 

பாளை கிழித்துக் கீறலாக்கி

பழைய துணியால் தலைப்பாகையிட்டு

இலுப்பெண்ணெய் தோய்த்துத் தீயைப்

பற்ற வைத்துக் கோடியிலும்

பந்தம் எற்றினோம் மகிழ்வாக.

 

வாழைக் குற்றி வெட்டி

வாசலில் நிறுத்தி வைத்து

சிரட்டையில் எண்ணெயும் துணிகளுமாய்

சிகரமாய்ப் பந்தம் கொழுத்துவோம்.

சிலிர்க்கும் அனுபவங்கள் மறக்காதவை.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-12-2014

thiri

 

346. கோடற்ற நீதி தா!

564585_386375364751147_1610650030_n

கோடற்ற நீதி தா!

சுவாசம் திறந்து சுகம் நிறைக்க

தேகம் சுகப்பட தாகம் தீர

முகம் மலர்ந்து அருள் தருவாயா!

அகம் திறந்து கருணை செய்வாயா!

ஆட அரங்கா நான் கேட்கிறேன்!

மாட மாளிகையா நான் கேட்கிறேன்!

வாடாத நாட்கள் தானே கேட்கிறேன்!

கோடற்ற நீதி தா இறைவா!

 

பூக்களால் தினம் உன்னடி நிரப்பி

பாக்கள் சமர்ப்பித்தவை யாவும் பொய்யா!

சாக்கு நிறைத்து இலஞ்சம் பொய்யென

தேக்குகிறார்களே அவர்களுக்கா அருள்வாய்!

நல்லவனாம் நீ வல்லவனாம் சொல்கிறார்கள்!

எல்லாம் நம்ப முடியவில்லை! நீயும்

எல்லோர் போலும் நீதியற்றவன் தான்!

கல்லானவன்! கருணையில்லாதவன் நீ!

 பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

5-12-2014

10474864_699684510086896_4159358153570174852_n

89. உண்மை

184116_523095931039858_1035973351_n

ஐனனம் மரணம் ஒவ்வொரு நாளும்

கணமும் மகிழ்வும் துன்பமும் நாளும்

imagesCACGHBJY

88. தமிழ்க் கடலுள் நீந்த+விழியால் வழுவி

தமிழ்க் கடலுள் நீந்தச் சம்மதம்!

அமிழ்ந்து முத்தெடுக்கவும் ஆசை தான்.!

Flowers-Flowers-Bubbles-Macro-Abstractmm

Love__037793_ll

humming-bird

36. புலமைத் தமிழ் பிரியட்டும்.

viewer-5-4 mm

புலமைத் தமிழ் பிரியட்டும்.

வான மழையாய்த் தமிழ்க்கொடை புவியில்

தானமாகிறது முல்லை மணமாக.

கம்பன் ஒளவைக் கவி உறவுகளாய்

கவிஞர்கள், கவிதாயினிகள் உலகில்.

தன் மொழியோடு உறவாடுதல் இனிமை

இன்னொரு (மொழி) வகையறிதல் பேரினிமை.

வித்தியாச வரிகளின் நளினங்கள் அறிதல்

உத்தியாகும் உயரும் ஏணியாய்.

பல் கவித்துவம் மொழியாடல் புதுமை

பகிர்தல் உணர்தலிற்றான் விலகுகிறார்.

துலக்கமாய்த் தமிழின் சுருக்கெடுத்தால் உள்ளொளிரும்

புலமைத் தமிழ் பிரியும்.

தமிழென அற்ப வரிகளின்றி வீரியக்

குமிழாக ஆழ்ந்து அகலட்டும்!

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க் – 27-11-2014.

EMBDESIGNTUBE (2)

 

Next Newer Entries