38. தமிழை எல்லோரும் வளைக்கலாம்

 tamillanguage-l

தமிழை எல்லோரும் வளைக்கலாம்

***

என்னுள் வழியும் செந்தமிழ் விரிவு
இன்னுமதை உணர்ந்தால் உயர்வு! – தேடி
நன்னூல் பல நாடி உள்ளெடுத்தால்
நலமாகும் என் தமிழ்.

***

பொல்லாத மனிதர் தமிழைப் புறமாக்கி
இல்லாத கதை கூறி – உள்ளே
வல்லதென வாழ்விடத்து மொழியணைத்து நிதம்
செல்லமாய்க் காதலிப்பாரென் செய்க!

***

கைவிடாது தமிழைக் கரைத்துக் குடித்து
வைகையாய்த் தமிழறிவு பெருக்கி – நாளும்
மையிலென் பெயரெழுதப் பாடுபடும் நெஞ்சம்
தைதைதா தமிழெனக் கெஞ்சும்

***

இல்லாத அறிவல்ல, வல்லமையாய்த் தேடினால்
வில்லாகத் தமிழை எல்லோரும் வளைக்கலாம்
பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
சொல்லாள ஏது தடை!

***

நல்ல நிலையில் தமிழோடு விளையாடி
வெல்லக் கவிகள் பல அரங்கேற்ற
வல்லமை தாவென மெல்லக் கேட்பேன்
இல்லையென்னாது அருள் தா!

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
29-1-2015

 

green-line-2

359. பட்டாசுப் பூவாணம்

10353001_905666829486025_5425720006123893920_n

பட்டாசுப் பூவாணம்

 

பட்டாசுப் பூவாணம் தங்க மழையாய்
பல வர்ண மின்சாரப் பூமழையாய்
பத்தாயிரம் மின்மினிகள் ஒளிர்வதாய் வெடிக்கும்
பட்டாசு வேடிக்கை பார்க்கப் பரவசம்!
பரபரப்புடன் மனதில் ஆனந்தப் பதிவு
பச்சைக் கொடியாகப் பெற்றோரை அணைக்கும்
பச்சிளம் பிள்ளைகளிற்குப் பயந்த அனுபவம்
பதுங்கும் கோழிக் குஞ்சாக மடிக்குள் தஞ்சம்.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்

1-1-2015.

பட்டாசு பற்றிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!….

https://kovaikkavi.wordpress.com/2011/10/25/14-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2/

10420254_10204931891234216_2081956795471974607_n

பனி வனம்

வெள்ளைக் கம்பளம் எம்மைக்
கொள்ளை கொள்ளுது.
இத்தனை கம்பளம் வாங்க
எத்தனை கடை
ஏறி இறங்குகிறதோ இயற்கை
வாரி அள்ளலாம்…..

 வேதா. இலங்காதிலகம்

24-1-2015

 

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

358. மின்சாரக் கழிவு..

kalivuannaikkinaru

(  News:—

யாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையக்கழிவு எண்ணெய் அந்தப்பிரதேச கிணற்று நீருடன் கலப்பதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைக் கூடிய நிலையில் இதனை ஏன் தடை செய்யக்கூடாதென்று சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையங்களான நொர்தேன் பவர் மற்றும் உதுறு ஜெனி ஆகிய இரண்டு தரப்புக்களிடமும் மல்லாகம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணெய் கிணற்று நீருடன் கலப்பதால் நீர் மாசடைவதுடன் தாம் தற்போது பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனை ஏற்படும் என்றும் ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டுமென்றும் கடந்த வாரம் அப்பகுதி மக்கள் மல்லாகம் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யதிருந்தனர்.)

மின்சாரக் கழிவு..

கிணற்றுள் நீர் தெளிப்பர்
துடக்கு கழிவதற்கு.
கிணற்று நீர் தெளிப்பர்
முற்றத்துத் தூசியடங்க
கிணற்றுள் எண்ணெய் கசிவது
பெரும் அநியாயம்!
வணக்கத்திற்குரிய நீரால் இன்று
பிணமாவானோ மனிதன்!

சுன்னாகம் சேர்ந்த வடக்கின்
இன்னாப்பு (துன்பம்) அழிய
உன்னிப்பாய் மேலிடத்துக் கவனம்
நன்னயம் செய்யட்டும்!
துன்பத்தின் மேல் துன்பம்
ஏன் தமிழரிற்கு!
சங்காரம் அமைதியாகவா ஏன்!
சன்னதமற்றி சண்டமாருதம்!

நீரின்றி வாழ்தல் கடிது!
நீலித்தனம் இல்லாது
நீரவர் (அறிவுடையார்)போன்று பிரச்சனையை
நீளாது தீர்க்கட்டும்!
நீசத்தனம் மறைந்து அதிகாரம்
நியாயத்துடன் இணையட்டும்!
நிச்சயமான நிதானமானவொரு நற்
பலன் கிடைக்கட்டும்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25.1.2015

bluweave

34. கெட்டவர்கள் உலகை அழிக்கிறார்கள்.

13721747-illustration-depicting-a-road-traffic-sign-with-a-positive-thinking-concept-blue-sky-background

கெட்டவர்கள் உலகை அழிக்கிறார்கள்.

தனது மனதைக் கட்டுப் பாட்டினுள் வைக்க இயலாதவர்கள் கட்டற்ற வாழ்வில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக ஒரு விருப்பமான செயலைச் சிலகாலம் நிறுத்தி வைக்கவோ, கெட்ட செயலைச் செய்யாது நிறுத்தி வைக்கவோ மனக்கட்டுப் பாட்டளர்களால் முடியக் கூடியது.

அத்தனையையும் அனுபவிக்க வேண்டும் என்று வரையறையற்று வாழ்பவர்கள் தமது உடலாரோக்கியத்தைக் கூடக் கவனிக்க மாட்டார்கள். கடைகளில் உள்ள ஆரோக்கியமற்ற உணவுகளையுண்டு பணத்தை வெகுவாக வீணாகச் செலவழித்துத் தமக்கும் குழந்தைகளிற்கும் நோயைத் தேடிக் கொள்வார்கள்.

நல்லவர்கள் செய்யும் நல்ல செயல்கள் உலகிற்கு ஆவணமாகிறது. இவர்கள் நல்ல சிந்தனைகள் நூலாகிறது. உழைப்பு நலிவுற்றவர்களிற்கு உதவுகிறது. உலக வரலாறுகளில் இவர்கள் இடம் பிடிக்கிறார்கள்.
மனிதனுக்குரிய நல்ல இலட்சணங்களை நல்லவர்களே பின்பற்றுகிறார்கள். அது அறிவு, அதிகாரம், புகழ் எனும் பல வழிகளில் அடங்குகிறது.
ஐம்புலன்களையும் வென்றவர், மனக்கட்டுப்பாடுடையவர், எதைப் பற்றியும் கவலையடையார். நிறைவு எனும் சொல்லிற்கு இலட்சணமானவர்கள்.
நல்ல வழிகாட்டிகளாக உள்ளவர் பிள்ளைகளும் பெரும் பாலும் நல்ல பாதையையே பின் பற்றுகின்றனர். அதே போன்று கெட்ட பழக்கமுள்ள பெற்றவர் பிள்ளைகளும் கெட்ட வழியை நாட வாய்ப்பு உண்டு
இங்கும் விதி விலக்குகள் உண்டு. இது வாழும் சூழல், பழகும் மனிதரைப் பொறுத்தும் மாற வாய்ப்புகள் உண்டு.
மனப் பாதிப்பு அடைவோர் பழி வாங்கும் உணர்வில் தீய வழிகளை நாடி தனக்கும் உலகிற்கும் தீமையை செய்கிறார்கள். தீயவர்கள் தீயவர்களோடு இணையும் போது குழு முறையிலாகி உலகை நாசப் படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
21-1-2015.

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

357. தோழிக்குப் பிரியாவிடை..

10888822_904044332969160_6945076160330131003_n

தோழிக்குப் பிரியாவிடை..

என்ன கேட்கிறாயடி! ஆம் மணமாகி

இன்று மூன்று மாதம் முடிகிறது.

என்னவர் வரும் நேரமாகி விட்டதடி

சின்னச் சமையல் முடிக்க

 

சிறு வீடு நாட்டுப் புறம்எறும்புச்

சுறுசுறுப்பாய் வேலை முடிக்க

சிறு பொழுது போதும் நீ

மறுபடி நாளை வந்திடு!

 

புது மணம் வீசும் இவள்

புது மனைவி கண் நிறைய

புதுக் கனவு நிறைந்து கணவனுக்காய்

மது கண்ணில் ஏந்துபவள்.

 

பட்டு கசங்காது மலர் குலையாது

கட்டுக் கரும்பாய் இனிய நினைவுகள்

தொட்டும் தொடாததுமாய் சுருளும் நினைவுகள்

விட்டிடுங்கள் நீடு வாழ!

 

 பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

28-12-2014

tiffany-co-browse-tiffany-engagement-rings-australia

15. கண்ணீர் அஞ்சலி – சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை

10934171_10204820575147367_381301729_n

கண்ணீர் அஞ்சலி – சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை

மலர்வு:- 20-1-1940 உதிர்வு:- 13-1-2015
மகன்:-
அம்மா நீங்கள் நோயென்று சாய்ந்தவரில்லை.
அந்தோவெனச் சடுதியாக எங்களை ஏனம்மா
அந்தரத்திலிட்டு மறைந்தீர்களே!..அம்மா!..அம்மா!..
இடியாக விழுந்ததே இச் செய்தி!

மருமகள்:-
நான்கு பெண்கள் நான்கு ஆண்கள்
நன்கு உருவாக்கினீர்கள் எட்டுப் பிள்ளைகளை.
எனக்கும் பிள்ளைகளிற்கும் பெருந் துணையானவரே!
என்நெஞ்சு பதறுகிறதுங்கள் திடீர் மறைவால்!

ராகவி – விஷ்ணுகா:-
நடையுலாவிற்கும், பகிடிகளிற்கும் இடம் தந்தீர்கள்!
நல்ல அப்பம்மா எங்கள் சிநேகிதி! எங்களால் தாங்க முடியவில்லை இனி
நீங்கள் எம்முடன் இல்லை யென்பதை!
அப்பம்மா நீர்வேலி சின்னப்பிள்ளை – வேலுப்பிள்ளை.
நீண்ட காலம் புலம் பெயர்ந்து.
20-1-1940 ல் பிறந்தார். எங்களோடு சேர்ந்து
டென்மார்க்கில் வாழும் திட்டம் மறைந்ததே!
ஆசை அப்பம்மா ஏனிந்தப் பிரிவு! ஆறாத துன்பம் உங்கள் இழப்பு!
உங்கள் இனிய ஆத்மா சாந்தியடையட்டும்! எங்கள் இதயத்திலென்றும் நீங்கள்!

அஞ்சலிப்போர்…
மகன் சிவராசா – மருகள் சாந்தி பேத்திமார் ராகவி – விஷ்ணுகா
–டென்மார்க்

19-1-2015

கண்ணீர் அஞ்சலி.

பிறப்பு:- 20-1-1940 உதிர்வு:- 13-1.2015

இழக்க முடியாத இழப்பு நம்மை
வளர்த்தெடுத்த தாய், அன்பு நண்பா!
வளர்த்து உன்னை ஆளாக்கிய தாயின்
இழப்பு அளப்பரிய துன்பம் அறிவோம்.
இளைஞருக்கு விளையாட்டுக் கழகம் அமைத்து
சளைக்காது பாடுபடும் அரிய நண்பன்
வளைத்துத் தமிழை சிறாருக்கு வசமாக்க
இளைக்காது டென்மார்க்கில் தமிழாசிரியராக மனைவி
இவர்களைக் கொண்ட தாயார் மாமியாராகிய
அம்மா சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளையின்
அமரத்துவம் எமக்கு மனவேதனை தருகிறது.
எமது ஆழ்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
அன்னார் ஆத்மா சாந்தியடைவதாக!
அவரின் மறைவால் வாடும் நண்பன் சிவராசா
குடும்பம், நண்பர்கள், ராகவி, விஷ்ணுகா
அனைவருக்கும் மன அமைதி கிட்டட்டும்!
சாந்தி! சாந்தி! சாந்தி.

கண்ணீர் அஞ்சலி
ஓகுஸ் மாவட்ட நட்புறவுச் சங்கம்
டென்மார்க்.
19-1-2015.

anjali-2

37. நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்!!!…

602082_585271648167116_116299475_nl

நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்!!!…

வாழையடி வாழையாக வந்த தமிழ்
பேழையுள் முத்தாகப் போற்றிய தமிழ்
மாலையோடு மேடையென வளர்ந்த தமிழ்
சாலையில் பாலனாக பீதியில் தமிழ்
ஏழையெனப் புலம்பெயர் சாலையில்
நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்.
பட்டுத் தமிழ் அழியுமொவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மன உளைச்சல்.

பட்டி மன்றங்களாய் நீட்டி நீட்டித் தமிழ்
தொட்டுத் தொட்டுத் தமிழ்க் கருத்தாடல்கள்
விருப்போடு கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தமிழ்
கருத்தோடு இங்கு நிலைத்திடத் தமிழ்
பனுவல் எழுதியும் பல பாணியில் தமிழ்
கூனுதலின்றித் தினுசுதினுசுhகத் தீந்தமிழ்
அனுதினம் வீழ்த்துங்கள் காதினில் தமிழ்!
மனுமக்கள் உதட்டினில் ஏந்துங்கள் தமிழ்!.

முழவு கொட்ட முருகாயிருந்த தமிழ்
முழுமையாய் அழியாது ஆய்வு செய்யுங்கள்!
வாழையடி வாழையான தாயகத் தமிழ் காக்க
வாரிசுகளுடன் தினம் வார்த்தைப் போர்!
புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
புரவலர் பெற்றோர் குழந்தைகளும் போர்!
பாய் விரியுங்கள் பரப்புங்கள் தமிழை!
சேய்களின் பாதையில் ஊன்றட்டும் தமிழ்!.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-10-2003

(அன்று 2003 ல் தமிழ் இருந்த நிலையில் எழுதிய கவிதை.
இரிபிசி இலண்டன் ரைம் வானொலியில் வாசித்தேன்.
20-1-2004ல: ரிஆர்ரி தமிழலை வானொலி கவிதை பாடுவோமிலும் வாசித்தேன்.)

green-line-2

356. ஆனந்தப் பொங்கல் 2015.01.14

ponnn

எல்லோருக்கும் இனிய 2015 தைப் பொங்கல் வாழ்த்துகள்!

ஆனந்தப் பொங்கல் 2015.01.14

இன்றைய தையிலும் மெல்லிய ராகமாய்
அன்றலர்ந்த ரோஜாக் குளியலாய் மனம்
நன்றாகப் பொங்கியது ஆனந்தப் பொங்கல்
ஒன்று கூடலில் குடும்பம் 2015ல்.
கண்களில் நிறைந்த கனவின் ஒளி
வண்ணமாய் இறங்கியது பாசமாய் வேரடிக்கு.
தண்மையாய் விருட்சமாய் பொங்கட்டும் பாசம்!
எண்ணங்கள் ஈடேறத் தையும் பொங்கட்டும்!

அகங்கார ஆதிக்கக் கருமழை அழியட்டும்!
அகங்குளிர அன்புப் பால் பொங்கட்டும்!
சுகங்காண நாடு சுபிட்சப் பாதையின்
முகம் நோக்கி முழுநிலவாய் முன்னேறட்டும்!
நகச் சிவப்பாய்க் கன்னங்கள் சிவக்கட்டும்!
மேகம் விலகி நம்பிக்கைத் தடம்
தேகங்கள் இணைவதாய்ப் பொங்கட்டும்! பொங்கட்டும்!
தகவான பொங்கலாய்த் தையும் பொங்கட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-1.2015

images 2356

2014 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 29,000 times in 2014. If it were a concert at Sydney Opera House, it would take about 11 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

355. நிரவலற்ற நிறையுணர்வு….

10156081_690010637733416_4464647893291959453_n

நிரவலற்ற நிறையுணர்வு….

நிறையுணர்வின் நிரவலற்ற நீள் காலம்
குறைகள் தழும்பி அங்கீகார மிழந்தாலும்
நிறைவு தொழிலால் வாழ்வில் நிரம்பும்.
கறைகள் மறைக்கும் கடமை மேவிடும்
தறை தரிசாகித் தணலாகும் தன்மை
சிறையான சிரிக்கு மொரு வாழ்வு
உறைந்திட்ட அன்புக் கிசுகிசுப்பு வற்றிட
குறைகள் உருட்டிய மௌனம் குமிழாகும்.

வரட்டுக் கௌரவமாய் வாழ்க்கை நடிப்பு
குருட்டுப் போக்காய்த் தீரரெனும் நினைப்பு
சுருட்டிய கனவுகள் பாதாளக் கிணற்றிலும்
விரட்டும் ஆதங்கம் தொடர் கதையாகும்.
ஆதரவை ஆதிக்கம் விழுங்க விழுங்க
சேதாரமாகும் நினைவுப் பட்சி சோரச்சோர
பூதாகரமாய் நம்பிக்கை நூல் தளரத்தளர
சாதாரணமாய் நத்தையாய் நகரும் வாழ்வு.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

Big Blue Divider
11.1.2015

Previous Older Entries