353. புதுப்புதுக் குழுக்கள்…/. இப்படி சிரமப் படவில்லை.

10702145_10204120392827263_6533626017501568264_n

புதுப்புதுக் குழுக்கள்….

அதுவதுவாகப் புற்றீசல்களாய்
இது நன்றெனக் கொண்டு
புதுப்புதுக் குழுக்களிங்கு
மெதுமெதுவாக முளைக்கிறது.
செதுக்கிடச் சிறந்த நிர்வாகம்
பதுக்கிடலவசியம் மறக்கிறார்.
இது மனதிற் கொள்ளல்
புது எழுச்சி தரும்.

சீர்மிகு திறமைகள் வெளிப்படல்,
பார் அவற்றைப் பார்த்தலருமை!
நேர்மை நிர்வாகமவசியம்!
நிர்வகிக்கவியலாவிடில் நிறுவுதலேன்!
அர்த்தமான நிறையாக்கம் பார்த்துத்
தர்மமாய்க் கருத்திடுவாரில்லை.
சர்வ அலட்சியப் போக்குடை
மர்ம மௌனிப்பு நீடிப்பு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-10-2014.

10868267_899891890051071_6833546457872650984_n

இப்படி சிரமப் படவில்லை.

தேயிலை றப்பர் தோட்ட மத்தியில்
தேனடை போன்ற வீட்டு முற்றத்தில்
தேட்டம்(விருப்பம்) வந்தது துவிச்சக்கர வண்டியோட்ட
தேவேந்திரனாய்க் கணவர்!… ”உதவுவீர்களா?” என்றேன்.

சரி என்றார். ஏறி அமர்ந்தேன்.
‘ சரி பெடலை மிதி! பிடிக்கிறேன்”.. என்றார்.
சமமாக மிதித்து சங்கடமின்றி ஓட்டினேன்.
சத்தியமாகப் பின்னாலே பிடிக்கவில்லை என்றார்.

இதுவே நான் மாமரத்தினடியில் மிதிவண்டியோட்டிய
இன்னலற்ற அனுபவம்! நொடிப் பொழுதுமில்லை.
இதமான நிதானம் வெற்றி நிறைத்தது.
இன்ப அனுபவம் எம்மிருவரின் நம்பிக்கை.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-12-2014.

16161859-ab

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஜன 03, 2015 @ 00:12:17

  ச்ரி என்றார். ஏறி அமர்ந்தேன்.
  ‘ சரி பெடலை மிதி! பிடிக்கிறேன்”.. என்றார்.
  சமமாக மிதித்து சங்கடமின்றி ஓட்டினேன்.
  சத்தியமாகப் பின்னாலே பிடிக்கவில்லை என்றார்.//

  அருமை.
  படம், கவிதை இரண்டும் மிக அழகு.

  மறுமொழி

 2. கோமதி அரசு
  ஜன 03, 2015 @ 00:16:17

  நேர்மை நிர்வாகமவசியம்!
  நிர்வகிக்கவியலாவிடில் நிறுவுதலேன்!//

  ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை சிறப்பாக செய்ய முடியும் என்றால் தான் செய்ய வேண்டும் இல்லையா?
  அல்லது முயற்சியாவது செய்ய வேண்டும்.

  நல்ல கவிதை

  மறுமொழி

 3. Dr.M.K.Muruganandan
  ஜன 03, 2015 @ 00:52:05

  சுவையான அனுபவப் பதிவு.

  “…சத்தியமாகப் பின்னாலே பிடிக்கவில்லை.”

  உங்களது மட்டுமின்றி இன்னும் பலரது அனுபவம் இதுதான்.

  எனக்கு இவ்வாறு சொன்ன ஆசையாவின் நினைவுகளில் மூழ்குகிறேன்.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜன 03, 2015 @ 01:22:30

  அனுபவம் இனிமை
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 03, 2015 @ 02:05:34

  இனிமையான அனுபவம் சகோதரி…

  மறுமொழி

 6. ramani
  ஜன 03, 2015 @ 04:34:51

  அர்த்தமான நிறையாக்கம் பார்த்துத்
  தர்மமாய்க் கருத்திடுவாரில்லை.//

  நான் தங்கள் பதிவினை விடாது தொடர்வதும்
  பின்னூட்டமிடுவதும் அதன் நிறைவைக் கண்டே..

  எண்ணிக்கை எப்போதும் தரத்தை நிர்ணயிக்காது

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: