355. நிரவலற்ற நிறையுணர்வு….

10156081_690010637733416_4464647893291959453_n

நிரவலற்ற நிறையுணர்வு….

நிறையுணர்வின் நிரவலற்ற நீள் காலம்
குறைகள் தழும்பி அங்கீகார மிழந்தாலும்
நிறைவு தொழிலால் வாழ்வில் நிரம்பும்.
கறைகள் மறைக்கும் கடமை மேவிடும்
தறை தரிசாகித் தணலாகும் தன்மை
சிறையான சிரிக்கு மொரு வாழ்வு
உறைந்திட்ட அன்புக் கிசுகிசுப்பு வற்றிட
குறைகள் உருட்டிய மௌனம் குமிழாகும்.

வரட்டுக் கௌரவமாய் வாழ்க்கை நடிப்பு
குருட்டுப் போக்காய்த் தீரரெனும் நினைப்பு
சுருட்டிய கனவுகள் பாதாளக் கிணற்றிலும்
விரட்டும் ஆதங்கம் தொடர் கதையாகும்.
ஆதரவை ஆதிக்கம் விழுங்க விழுங்க
சேதாரமாகும் நினைவுப் பட்சி சோரச்சோர
பூதாகரமாய் நம்பிக்கை நூல் தளரத்தளர
சாதாரணமாய் நத்தையாய் நகரும் வாழ்வு.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

Big Blue Divider
11.1.2015

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  ஜன 12, 2015 @ 02:38:50

  சிந்திக்க வைக்கும் கவிதை

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜன 12, 2015 @ 14:46:40

  பற்றற்ற பற்று என்ற சொல்லை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவ்வாறான வகையில் அமைந்துள்ள கவிதை. நன்று.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஜன 13, 2015 @ 00:46:01

  வாழ்வில் நம்பிக்கை தளர்ந்தால் நத்தையாக நகரும் வாழ்வு என்பதை சொல்லும் கவிதை.
  நம்பிக்கையுடன் வாழ்வை வாழ்வோம். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. சசிகலா
  ஜன 13, 2015 @ 06:57:15

  அற்புதம் தோழி. சொல்லாடல் கண்டு வியந்தேன்.

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 14, 2015 @ 02:18:17

  நம் மனம் போல் வாழ்வு…

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 27, 2019 @ 16:30:44

  Alvit Vasantharany Vincent :- குறைகளையும் நிறைவாக்கி வாழ்வதே மகிழ்வான வாழ்வுக்கு வழி. வாழ்த்துக்கள் சகோதரி.
  2015
  Sivakumary Jeyasimman :- Pooranamaanathu.

  Subajini Sriranjan :- வரட்டுக் கௌரவமான வாழ்க்கையில் சிக்கி நிலையை அழகாக கூறும் வரிகள்….
  அருமை……
  2015
  Gomathy Arasu :- நம்பிக்கை தளர்ந்தால் வாழவு நத்தையாக நகரும், உண்மை. நம்பிக்கையை தளர விடாமல் இருக்க சொல்லும் கவிதை அருமை.
  2015
  கலை நிலா :- சாதாரணமாய் நத்தையாய் நகரும் வாழ்வு.
  2015
  Maniyin Paakkal:- ஆதரவை ஆதிக்கம் விழுங்க விழுங்க
  சேதாரமாகும் நினைவுப் பட்சி சோரச்சோர
  பூதாகரமாய் நம்பிக்கை நூல் தளரத்தளர
  சாதாரணமாய் நத்தையாய் நகரும் வாழ்வு. அருமை……
  2015
  Verona Sharmila :- அருமை
  2015
  Vetha Langathilakam:- Dear Alvit – Sivakumary (உமது ஒரு கவிதையின் தாக்க வெளிப்பாடே இக்கவிதை) -Suba -Gomathu – Kalai Nila – M.K – Sharmila – எல்லோருக்கும் மிக்க நன்றி.
  தங்கள் கருத்திடலால் மகிழ்ந்தேன்.
  32015
  Vetha Langathilakam:- You, கவின் மகள், Mani Kandan and 2 others like this.

  Mani Kandan:- வரட்டுக் கௌரவமாய் வாழ்க்கை நடிப்பு
  குருட்டுப் போக்காய்த் தீரரெனும் நினைப்பு
  சுருட்டிய கனவுகள் பாதாளக் கிணற்றிலும்
  விரட்டும் ஆதங்கம் தொடர் கதையாகும்.அருமை6 hrs · Like
  Vetha Langathilakam:- makilchchy…..Nanry..
  2015
  Vetha Langathilakam Malikka Farook:- விரட்டும் ஆதங்கம் தொடர் கதையாகும்.
  ஆதரவை ஆதிக்கம் விழுங்க விழுங்க
  சேதாரமாகும் .. உண்மை சகோதரி..
  Vetha Langathilakam:- mikka nanry..Mallika…F…
  2015

  Paavalar Valvai Suyen Suyenthiran :- வரட்டுக் கௌரவமாய் வாழ்க்கை நடிப்பு
  குருட்டுப் போக்காய்த் தீரரெனும் நினைப்பு சேதாரமாகிய நினைவுப் பட்சி களே வட்டம் இடுகின்றன உலகை அழகாய் சென்னீர்கள் சகோதரி வேதா நன்றே நன்று..
  2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: