37. நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்!!!…

602082_585271648167116_116299475_nl

நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்!!!…

வாழையடி வாழையாக வந்த தமிழ்
பேழையுள் முத்தாகப் போற்றிய தமிழ்
மாலையோடு மேடையென வளர்ந்த தமிழ்
சாலையில் பாலனாக பீதியில் தமிழ்
ஏழையெனப் புலம்பெயர் சாலையில்
நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்.
பட்டுத் தமிழ் அழியுமொவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மன உளைச்சல்.

பட்டி மன்றங்களாய் நீட்டி நீட்டித் தமிழ்
தொட்டுத் தொட்டுத் தமிழ்க் கருத்தாடல்கள்
விருப்போடு கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தமிழ்
கருத்தோடு இங்கு நிலைத்திடத் தமிழ்
பனுவல் எழுதியும் பல பாணியில் தமிழ்
கூனுதலின்றித் தினுசுதினுசுhகத் தீந்தமிழ்
அனுதினம் வீழ்த்துங்கள் காதினில் தமிழ்!
மனுமக்கள் உதட்டினில் ஏந்துங்கள் தமிழ்!.

முழவு கொட்ட முருகாயிருந்த தமிழ்
முழுமையாய் அழியாது ஆய்வு செய்யுங்கள்!
வாழையடி வாழையான தாயகத் தமிழ் காக்க
வாரிசுகளுடன் தினம் வார்த்தைப் போர்!
புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
புரவலர் பெற்றோர் குழந்தைகளும் போர்!
பாய் விரியுங்கள் பரப்புங்கள் தமிழை!
சேய்களின் பாதையில் ஊன்றட்டும் தமிழ்!.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-10-2003

(அன்று 2003 ல் தமிழ் இருந்த நிலையில் எழுதிய கவிதை.
இரிபிசி இலண்டன் ரைம் வானொலியில் வாசித்தேன்.
20-1-2004ல: ரிஆர்ரி தமிழலை வானொலி கவிதை பாடுவோமிலும் வாசித்தேன்.)

green-line-2

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜன 16, 2015 @ 22:54:55

  தமிழின் பெருமை
  சொல்லிப் போனவிதம் அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 17, 2015 @ 00:58:17

  அருமை அருமை சகோதரி…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 17, 2015 @ 01:46:36

  தங்களைப் போன்றோர் உள்ளவரை தமிழ் வாழும்
  தமிழ் தழைக்கும்

  மறுமொழி

 4. கோமதி அரசு
  ஜன 17, 2015 @ 05:03:21

  புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
  புரவலர் பெற்றோர் குழந்தைகளும் போர்!
  பாய் விரியுங்கள் பரப்புங்கள் தமிழை!
  சேய்களின் பாதையில் ஊன்றட்டும் தமிழ்!.//

  நீங்கள் சொல்வது போல் அயல் நாட்டில் இருக்கும் பெற்றோர் தமிழ் பேச வேண்டும் குழந்தைகளுடன். தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும். பேரன் தமிழ் படிக்கிறான், எழுதுகிறான் .
  5 வ்யது பேரன் தமிழ் பாட்டு பாடுகிறான்.
  வடநாட்டில் இருக்கும் பேரன் தமிழ் படிக்கிறான். நீங்கள் சொல்வது போல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.
  நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. பிரபுவின்
  ஜன 17, 2015 @ 15:04:36

  தமிழை அடிப்படையில் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வரும் எங்கள் தமிழ் உறவுகள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லி பெருமை கொள்கின்றனர்.நான் எல்லோரையும் சொல்லவரவில்லை. உங்களைப் போன்ற தமிழை உயிராக நேசிக்கும் பலர் இருக்கின்றார்கள்.குறிப்பாக படிப்பில் குறைவான தகைமை கொண்டவர்களே இவ்வாறு செய்கின்றனர்.
  நன்றி சகோதரி.

  மறுமொழி

 6. Kavignar valvai Suyen
  ஜன 18, 2015 @ 13:45:08

  நூலறந்த பட்டமாய் ஆகுமோ தமிழ் என ஆதங்க விதைப்பை நீ வைத்தாய் சகோதரி வேதா… நிச்சயம் காப்பார்கள் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதில் ஐயம் இல்லை நற்பதிவு தந்தீர்கள் நன்றி அக்கா…. ஏழையெனப் புலம்பெயர் சாலையில் நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்.முழவு கொட்ட முருகாயிருந்த தமிழ் முழுமையாய் அழியாது ஆய்வு செய்யுங்கள்! புலத்து மொழியோடு படித்தோரும் பாவலரும் உற்றார் பெற்றோரும் அறிவுடை ஞானிகளும் எற்றிவைப்பார் ஏற்றமிகு தமிழ் நூலறுந்த பட்டமாய் ஆகாது எங்கள் ஆதித் தமிழ் – தமிழ் மொழி எங்களின் தாய்த்தமிழ் –

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஜன 31, 2015 @ 05:43:29

  \\வாழையடி வாழையான தாயகத் தமிழ் காக்க
  வாரிசுகளுடன் தினம் வார்த்தைப் போர்!
  புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
  புரவலர் பெற்றோர் குழந்தைகளும் போர்!\\

  வளரும் தலைமுறையோடு வார்த்தைப்போர் புரிந்து வையமுழுதும் தமிழ் தழைக்கச்செய்வோம். 2003 இல் எழுதிய போதிருந்த தமிழின் நிலைமை இன்றைக்கும் தொடர்வது குறித்து கலக்கம் மிகுகிறது. அயராது பாடுபட்டு அருந்தமிழ் வளர்ப்போம் காப்போம்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: