34. கெட்டவர்கள் உலகை அழிக்கிறார்கள்.

13721747-illustration-depicting-a-road-traffic-sign-with-a-positive-thinking-concept-blue-sky-background

கெட்டவர்கள் உலகை அழிக்கிறார்கள்.

தனது மனதைக் கட்டுப் பாட்டினுள் வைக்க இயலாதவர்கள் கட்டற்ற வாழ்வில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக ஒரு விருப்பமான செயலைச் சிலகாலம் நிறுத்தி வைக்கவோ, கெட்ட செயலைச் செய்யாது நிறுத்தி வைக்கவோ மனக்கட்டுப் பாட்டளர்களால் முடியக் கூடியது.

அத்தனையையும் அனுபவிக்க வேண்டும் என்று வரையறையற்று வாழ்பவர்கள் தமது உடலாரோக்கியத்தைக் கூடக் கவனிக்க மாட்டார்கள். கடைகளில் உள்ள ஆரோக்கியமற்ற உணவுகளையுண்டு பணத்தை வெகுவாக வீணாகச் செலவழித்துத் தமக்கும் குழந்தைகளிற்கும் நோயைத் தேடிக் கொள்வார்கள்.

நல்லவர்கள் செய்யும் நல்ல செயல்கள் உலகிற்கு ஆவணமாகிறது. இவர்கள் நல்ல சிந்தனைகள் நூலாகிறது. உழைப்பு நலிவுற்றவர்களிற்கு உதவுகிறது. உலக வரலாறுகளில் இவர்கள் இடம் பிடிக்கிறார்கள்.
மனிதனுக்குரிய நல்ல இலட்சணங்களை நல்லவர்களே பின்பற்றுகிறார்கள். அது அறிவு, அதிகாரம், புகழ் எனும் பல வழிகளில் அடங்குகிறது.
ஐம்புலன்களையும் வென்றவர், மனக்கட்டுப்பாடுடையவர், எதைப் பற்றியும் கவலையடையார். நிறைவு எனும் சொல்லிற்கு இலட்சணமானவர்கள்.
நல்ல வழிகாட்டிகளாக உள்ளவர் பிள்ளைகளும் பெரும் பாலும் நல்ல பாதையையே பின் பற்றுகின்றனர். அதே போன்று கெட்ட பழக்கமுள்ள பெற்றவர் பிள்ளைகளும் கெட்ட வழியை நாட வாய்ப்பு உண்டு
இங்கும் விதி விலக்குகள் உண்டு. இது வாழும் சூழல், பழகும் மனிதரைப் பொறுத்தும் மாற வாய்ப்புகள் உண்டு.
மனப் பாதிப்பு அடைவோர் பழி வாங்கும் உணர்வில் தீய வழிகளை நாடி தனக்கும் உலகிற்கும் தீமையை செய்கிறார்கள். தீயவர்கள் தீயவர்களோடு இணையும் போது குழு முறையிலாகி உலகை நாசப் படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
21-1-2015.

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    ஜன 22, 2015 @ 01:38:39

    உண்மை…. 100% உண்மை…

    மறுமொழி

  2. பிரபுவின்
    ஜன 22, 2015 @ 03:46:57

    நிதர்சனமான உண்மைகள்.

    மறுமொழி

  3. கோவை கவி
    ஜன 24, 2015 @ 12:25:08

    Subajini Sriranjan :-
    வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்
    என்பதை அழகாக தத்துவச் சார்போடு கூறி நல்ல உதாரணங்களோடு மிளிர்ந்து நிற்கிறது…
    சிறப்பு..,,,,,
    January 22

    Mani Kandan:-
    நல்ல பதிவு
    January 22
    Muruguvalli Arasakumar :-
    அருமை….

    Prema Rajaratnam:-
    சிறந்த பதிவு,,,,பெற்றோர்கள் எப்பொழுதும் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என்று தான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு,நினைப்பதுண்டு.
    January 22

    Vetha Langathilakam:-
    Dear Suba – Manikandan – Muruguvalli – Prema மிக மகிழ்வு தங்கள் கருத்தையிட்டு.
    மனமார்ந்த நன்றி. எழுத்து ஊக்குவிப்பு மேலும்
    முன்னேற்றும் ஒரு நல்ல உதைப்பு.
    January 22

    மறுமொழி

  4. கோவை கவி
    ஜன 24, 2015 @ 12:29:29

    Ganesalingam Ganes Arumugam:-
    இனிய காலை / மதிய / மாலை வணக்கங்கள்.
    January 22

    சி வா :-
    மிகப் பெருமதியான ஒரு பதிவு இது வேதாம்மா.. தனி மனிதனின் வாழ்க்கை முறையை அங்குலம் விடாது சுருக்கமாக அழகாகச் சொல்லி முடித்தீர்கள்..

    (ஹா ஹா ஹா ஹா… அம்மா.. ஆனா நான் கட்டு பாடு இல்லாதவன் தானுங்கோ… ஹி ஹி ஹி… )
    January 22 ·

    புதுச்சேரி தேவமைந்தன்:-
    ” நல்லவர்கள் செய்யும் நல்ல செயல்கள் உலகிற்கு ஆவணமாகிறது. ”

    Vetha Langathilakam :-
    Dear Ganesh – Siva – Pudhuchcheri மிக மகிழ்வு தங்கள் கருத்தையிட்டு.
    மனமார்ந்த நன்றி. எழுத்து ஊக்குவிப்பு மேலும்
    முன்னேற்றும் ஒரு நல்ல உதைப்பு.

    மறுமொழி

  5. karanthaijayakumar
    ஜன 24, 2015 @ 15:07:51

    உண்மை சகோதரியாரே உண்மை

    மறுமொழி

  6. yarlpavanan
    ஜன 25, 2015 @ 23:56:28

    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: