358. மின்சாரக் கழிவு..

kalivuannaikkinaru

(  News:—

யாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையக்கழிவு எண்ணெய் அந்தப்பிரதேச கிணற்று நீருடன் கலப்பதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைக் கூடிய நிலையில் இதனை ஏன் தடை செய்யக்கூடாதென்று சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையங்களான நொர்தேன் பவர் மற்றும் உதுறு ஜெனி ஆகிய இரண்டு தரப்புக்களிடமும் மல்லாகம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணெய் கிணற்று நீருடன் கலப்பதால் நீர் மாசடைவதுடன் தாம் தற்போது பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனை ஏற்படும் என்றும் ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டுமென்றும் கடந்த வாரம் அப்பகுதி மக்கள் மல்லாகம் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யதிருந்தனர்.)

மின்சாரக் கழிவு..

கிணற்றுள் நீர் தெளிப்பர்
துடக்கு கழிவதற்கு.
கிணற்று நீர் தெளிப்பர்
முற்றத்துத் தூசியடங்க
கிணற்றுள் எண்ணெய் கசிவது
பெரும் அநியாயம்!
வணக்கத்திற்குரிய நீரால் இன்று
பிணமாவானோ மனிதன்!

சுன்னாகம் சேர்ந்த வடக்கின்
இன்னாப்பு (துன்பம்) அழிய
உன்னிப்பாய் மேலிடத்துக் கவனம்
நன்னயம் செய்யட்டும்!
துன்பத்தின் மேல் துன்பம்
ஏன் தமிழரிற்கு!
சங்காரம் அமைதியாகவா ஏன்!
சன்னதமற்றி சண்டமாருதம்!

நீரின்றி வாழ்தல் கடிது!
நீலித்தனம் இல்லாது
நீரவர் (அறிவுடையார்)போன்று பிரச்சனையை
நீளாது தீர்க்கட்டும்!
நீசத்தனம் மறைந்து அதிகாரம்
நியாயத்துடன் இணையட்டும்!
நிச்சயமான நிதானமானவொரு நற்
பலன் கிடைக்கட்டும்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25.1.2015

bluweave

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 25, 2015 @ 15:28:32

  வணக்கம்
  உண்மையான தகவல்…உலக தமிழோசையில்BBCகூட இது சம்மந்தாமான செய்தி போனது.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. கோமதி அரசு
  ஜன 25, 2015 @ 15:56:25

  நிச்சயமான நிதானமானவொரு நற்
  பலன் கிடைக்கட்டும்.//

  நீங்கள் சொல்வது போல் நற்பலன் விரைவில் கிடைக்கட்டும்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 26, 2015 @ 02:14:33

  பலன் விரைவில் கிடைக்கட்டும்…

  மறுமொழி

 4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜன 26, 2015 @ 07:29:33

  இவ்வாறான பிரச்சினைகளை நாமே உண்டாக்கிக்கொள்கிறோம். நல்லதொரு பலன் அனைவருக்கும் பயன் தரும்.

  மறுமொழி

 5. பிரபுவின்
  ஜன 26, 2015 @ 11:02:36

  எதிர் கால தலைமுறை எவ்வாறான பாதிப்புக்களை எதிர் கொள்ளப் போகின்றது என்று நினைத்தால் கவலையாக இருக்கின்றது.
  இரணை மடு குளத்து நீர் அவசியம் யாழ்ப்பாணத்துக்கு வர வேண்டும்.கிளிநொச்சியை யாழ்ப்பாணத்தில் இருந்து பிரித்தது மிகப்பெரும் தவறு என்பது இப்பொழுது எல்லோருக்கும் விளங்குகின்றது.பிரித்தவர்கள் தான் இப்பொழுது யாழ்ப்பாண சுன்னாகம் பகுதி மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கின்றது.

  மறுமொழி

 6. sarwaswary kathirithamby
  ஜன 26, 2015 @ 23:23:51

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 27, 2015 @ 10:22:21

  Subajini Sriranjan:-
  ஒரு தீர்வுக்கான காத்திருப்பு….
  தொடர்கிறதே…..
  January 25
  Vetha Langathilakam :-
  mikka nanry – makilchchy Suba….

  தென்றல் சசி கலா:-
  நீரின்றி வாழ்தல் கடிது!

  Vetha Langathilakam:-
  mikka nanry – makilchchy ..Sasikala….

  Rathy Srimohan:-
  கவனத்தில் சம்பந்தப்பட்டவர்கள். கவனத்தில் கொள்ள வேண்டும்….

  Vetha Langathilakam:-
  aammm….rathy…nanry……

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 27, 2015 @ 10:24:26

  Kandiah Murugathasan :-
  இப்படியா எண்ணை மிதக்கின்றது. இது தற்செயலாக நடக்கும் சம்பவம் அல்ல மிக மிக மிக மோசமான செயல். எண்ணையின் ஒரு துளி மண்ணில் பட்டாலே அந்த தண் பழுதடைந்துவிடும்.சுண்ணாகம் மின்சார உற்பத்தியாளர்கள் என்ன முட்டாள்களா. இவர்களுக்கு சாதாரண படிப்பறிவே இல்லையா.
  இது சாதரண விடயமே இல்லை. மின்சார உற்பத்தியாளர்கள் மீது மிகப்பெரும் தொகை நட்ட ஈட்டுடன் இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.

  இது திட்டமிட்ட செயல். அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

  சில தினங்களுக்கு முன் செய்தி ஒன்று வாசித்தேன் உடனடியாகவே அனல் மின்சார நிலையத்தை மூடுமாறு அமைச்சர் உத்தரவிட்டதாக.

  Kandiah Murugathasan :-
  இதை ஆராய்வதற்காக குழு ஒன்று சுண்ணாகம் சென்றுள்ளதாக சில நிமிடங்களுக்கு முன் அறிந்தேன்.

  Vetha Langathilakam:-
  Mani Kandan _ கிணற்றுள் எண்ணெய் கசிவது
  பெரும் அநியாயம்
  Vetha Langathilakam :- mmm……Nanry….

  Vetha Langathilakam:-
  அன்புச் சகோதரா கந்தையா முருகதாஸ்
  மிகுந்த மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  நன்றி.

  மறுமொழி

 9. Kavignar valvai Suyen
  ஜன 29, 2015 @ 10:21:15

  நீரின்றி வாழ்தல் கடிது நீசர்தம் அவச்செயலாலே நீலித்தனம் ஊற்றில் ஊழிப்பொருளாய் எமதில்லம் எங்கும் குடி நீரில் குலாவி கொல்கிறது நற்பலன் வேன்டி சாமியிடம் போவதா பூமியிடம் கேட்பதா யாரிடம் நோவோம் இதுதான் உலகமா நீதியும் செத்துவிட்ட நிலையில் நிற்கதியாய் நிற்கிறோம் விடை இல்லை… உயிர் வாழ நீர்வேன்டும் உறங்கி கிடக்கிறது உலகென்று நற்பதிவிட்டீர்கள் சகோதரி அருமை…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: