38. தமிழை எல்லோரும் வளைக்கலாம்

 tamillanguage-l

தமிழை எல்லோரும் வளைக்கலாம்

***

என்னுள் வழியும் செந்தமிழ் விரிவு
இன்னுமதை உணர்ந்தால் உயர்வு! – தேடி
நன்னூல் பல நாடி உள்ளெடுத்தால்
நலமாகும் என் தமிழ்.

***

பொல்லாத மனிதர் தமிழைப் புறமாக்கி
இல்லாத கதை கூறி – உள்ளே
வல்லதென வாழ்விடத்து மொழியணைத்து நிதம்
செல்லமாய்க் காதலிப்பாரென் செய்க!

***

கைவிடாது தமிழைக் கரைத்துக் குடித்து
வைகையாய்த் தமிழறிவு பெருக்கி – நாளும்
மையிலென் பெயரெழுதப் பாடுபடும் நெஞ்சம்
தைதைதா தமிழெனக் கெஞ்சும்

***

இல்லாத அறிவல்ல, வல்லமையாய்த் தேடினால்
வில்லாகத் தமிழை எல்லோரும் வளைக்கலாம்
பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
சொல்லாள ஏது தடை!

***

நல்ல நிலையில் தமிழோடு விளையாடி
வெல்லக் கவிகள் பல அரங்கேற்ற
வல்லமை தாவென மெல்லக் கேட்பேன்
இல்லையென்னாது அருள் தா!

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
29-1-2015

 

green-line-2

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. karanthaijayakumar
    ஜன 30, 2015 @ 01:02:35

    சில நாட்களாக கணினி கோளாறு சகோதரியாரே
    அதனால் பல பதிவுகள் படிக்காமல் விடுபட்டுப் போயிருக்கும்
    இனி தொடர்வேன்
    நன்றி

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஜன 30, 2015 @ 02:37:05

    எதுவுமே தடையில்லை…

    மறுமொழி

  3. வே.நடனசபாபதி
    ஜன 30, 2015 @ 06:28:48

    //வெல்லக் கவிகள் பல அரங்கேற்ற
    வல்லமை தாவென மெல்லக் கேட்பேன்//

    உங்களுக்கு இறைவன் முன்பே அரங்கில் வெல்ல ‘வெல்ல’க் கவிதைகள் படைக்கும் திறன் கொடுத்துவிட்டான். கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    மறுமொழி

  4. kowsy
    ஜன 30, 2015 @ 06:43:48

    வெல்ல கவிகள் பல அரங்கேற்ற வல்லமை தா …. இப்போதென்ன குறைவா.? … தொடரும்கவிகளுக்கு துணையாய் பலம்தாஎன்றுகேளுங்கள்

    மறுமொழி

  5. T.N.MURALIDHARAN
    ஜன 31, 2015 @ 01:37:23

    அனைத்தும் அருமை
    //இல்லாத அறிவல்ல, வல்லமையாய்த் தேடினால்
    வில்லாகத் தமிழை எல்லோரும் வளைக்கலாம்
    பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
    சொல்லாள ஏது தடை!//
    இது எனக்கு மிகவும் பிடித்தது

    மறுமொழி

  6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    பிப் 01, 2015 @ 08:22:17

    வணக்கம்
    சகோதரி

    கவிதையின் வரிகள் சிறப்பாக உள்ளது.. படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  7. கோவை கவி
    பிப் 01, 2015 @ 09:26:38

    Alvit Vincent :-
    வாழ்த்துக்கள் சகோதரி. நம் செழுந்தமிழ் என்றும் வாழ வகை செய்வோம்.
    January 29

    Subajini Sriranjan :-
    அருமை……
    வல்லமை தா என மெல்ல கேட்பேன்..
    அழகான மொழியடக்கம்!!
    January 29
    Loganathan Ratnam:-
    Loganathan Ratnam’s photo.
    January 30
    Sharmila Dharmaseelan :-
    அருமை
    January 30

    Rathy Srimohan:-
    நம்தமிழ் என்றும் வாழும்..,
    January 30

    சிறீ சிறீஸ்கந்தராஜா :-
    பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ! சொல்லாள ஏது தடை! **************** அருமை வாழ்த்துக்கள் அம்மா!!
    January 30

    Kannan Sadhasivam:-
    “வல்லமை தாவென மெல்லக்கேட்பேன்”. வல்,மெல் நயம்.அல்லாதனெவல்ல நீங்கள் கேட்பது.அள்ளக்குறையாதா தமிழ்தானே…உறக்கக்கேளுங்கள்….சிறக்கச்செய்யுங்கள்.
    January 30
    Vetha Langathilakam:-
    Dear Alvit -Suba – Nathan -Sharmila -Rathy -Sri -Kannan .இரவு சுவரேற்றி விட்டுப் படுத்திட்டேன்
    இப்போது காலை ஏழரை மணி உங்கள் அனைவரது
    கருத்தக்களும் காலை வணக்கம் கூறி என்னை வரவேற்றது.
    மிக்க மகிழ்வடைந்தேன்.உங்களிற்கும் இனிய நாள் தொடரட்டும்.
    நன்றி…நன்றி….
    January 30

    மறுமொழி

  8. கோவை கவி
    பிப் 01, 2015 @ 09:29:23

    சிறீ சிறீஸ்கந்தராஜா:-
    “சொல்லாள” ஏது தடை! ******** அருமையான சொல்லாட்சி! மீண்டும் வாழ்த்துகிறேன்.
    January 30
    Vetha Langathilakam:-
    தொடரும் கவிகளுக்கு துணையாய் பலம் தா என்று கேளுங்கள் .ha!..ha!…….ஆயிரம் சொன்னாலும் நான் இன்னும்
    நிறைய படிக்க இருக்கிறது…கௌரி.(kowsy)
    மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.
    January 30

    Vetha Langathilakam:-
    மீண்டும் நன்றி மதிப்புடை
    அன்புச் சகோதரா சிறீ..
    January 30
    தென்றல் சசி கலா:-
    நன்னூல் பல நாடி உள்ளெடுத்தால்
    நலமாகும் என் தமிழ். என் ஆவலும் உங்கள் வரிகளில்.
    January 30
    Prema Rajaratnam:-
    மிகவும் சிறப்பான கவிதை,,! தேனிசைத் தமிழ் உலகெல்லாம் விரியட்டும்,,,,
    January 30
    Sujatha Anton :-
    என்னுள் வழியும் செந்தமிழ் விரிவு இன்னுமதை உணர்ந்தால் உயர்வு! – தேடி நன்னூல் பல நாடி உள்ளெடுத்தால் நலமாகும் என் தமிழ் நல்ல படைப்புக்களை அள்ளித்தரும் தங்கள் தமிழ் வளர்ச்சி கண்டு பெருமைப்படுகின்றோம். வளரட்டும் தமிழ்ப்பணி.!!!

    மறுமொழி

  9. yarlpavanan
    பிப் 12, 2015 @ 13:22:44

    Reblogged this on தூய தமிழ் பேணும் பணி! and commented:
    “வல்லமையாய்த் தேடினால்
    வில்லாகத் தமிழை
    எல்லோரும் வளைக்கலாம்
    பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
    சொல்லாள ஏது தடை!” என்றுரைத்து
    மெல்லத் தமிழ் வாழ
    வழிகாட்டும் அறிஞரின் பதிவைப் படித்து
    தமிழறிய வேண்டி நிற்கின்றேன்!

    செந்தமிழ் சொல்லாள
    ஏது தடை? – என்றும்
    சொல்வளம் பெருகின்
    மொழிவளம் சிறக்கும்
    தமிழ் வாழ வழி இதுவன்றோ!

    மறுமொழி

  10. yarlpavanan
    பிப் 12, 2015 @ 13:25:47

    மறுமொழி

  11. iniya
    பிப் 13, 2015 @ 16:02:36

    அப்பப்பா அழகு தமிழில் மனமிளக அளித்த கவி கரும்பே!

    கொஞ்சம் பிசி என்பதால் வலைப்பக்கம் வரமுடிவதில்லை தோழி . அது தான் மன்னிக்கணும் கூடியவிரைவில் வருவேன் மறுபடி. அனைத்து கவிகளும் சிறப்பு மனதை அப்படிக் கவரும்படி எழுதியுள்ளீர்கள் தொடர வாழ்த்துக்கள் !

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: