354. கண்ணீர்

Dragon_Tears_by_MichaelFaber

கண்ணீர்

கண்களை உறுத்தாத வகையிலாம்
கண்ணின் லக்ரிமல் சுரப்பியால்
கண்ணீர் சுரக்கிறது கங்கையாய்.
உன்கண் (மைதீட்டிய கண்) மை கரைந்தோடும்.
வேறு சீவன்களிற்கு இல்லை
பேறுடை உணர்ச்சிக் கண்ணீர்
கீறுகீறாக வடிந்து ஒரு
ஆறாக ஓடுவது மனிதனுக்கே.

சிரிக்கும் போது உலகமும்
சிரிக்கட்டும்! அழும் போது
வரிந்து உலகை இழுக்காது
பிரிந்து தனியே அழு!
குவலயம் பரந்ததெம் சொந்தக்
கவலையை எங்குமேன் கலக்கிறோம்!
கவலையை ஒதுக்கமாய் வைப்போம்!
அவலில் புளிப்பைக் கலப்போமா?

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-1-2015

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

90. கவிதை பாருங்கள் புது வருடத் தீர்மானம் + திண்மை கௌரவம்.

Book of nature

76359_434337573304222_907719283_n[1]l

திண்மை கௌரவம்.

 

பணம் பகட்டு, இயற்கைக்

குணம் நடிப்புத் தான்.

பிணம் போன்று அன்பின்

மணம் நுகராத பிறவிகள்.

உண்மையாய் வாழத் தெரியாத

கண்மை அப்பிய மனிதர்கள்.

அண்மையிலும் அன்பை எடுக்கார்.

திண்மை கௌரவம் தான்.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

6-12-14

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

353. புதுப்புதுக் குழுக்கள்…/. இப்படி சிரமப் படவில்லை.

10702145_10204120392827263_6533626017501568264_n

புதுப்புதுக் குழுக்கள்….

அதுவதுவாகப் புற்றீசல்களாய்
இது நன்றெனக் கொண்டு
புதுப்புதுக் குழுக்களிங்கு
மெதுமெதுவாக முளைக்கிறது.
செதுக்கிடச் சிறந்த நிர்வாகம்
பதுக்கிடலவசியம் மறக்கிறார்.
இது மனதிற் கொள்ளல்
புது எழுச்சி தரும்.

சீர்மிகு திறமைகள் வெளிப்படல்,
பார் அவற்றைப் பார்த்தலருமை!
நேர்மை நிர்வாகமவசியம்!
நிர்வகிக்கவியலாவிடில் நிறுவுதலேன்!
அர்த்தமான நிறையாக்கம் பார்த்துத்
தர்மமாய்க் கருத்திடுவாரில்லை.
சர்வ அலட்சியப் போக்குடை
மர்ம மௌனிப்பு நீடிப்பு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-10-2014.

10868267_899891890051071_6833546457872650984_n

இப்படி சிரமப் படவில்லை.

தேயிலை றப்பர் தோட்ட மத்தியில்
தேனடை போன்ற வீட்டு முற்றத்தில்
தேட்டம்(விருப்பம்) வந்தது துவிச்சக்கர வண்டியோட்ட
தேவேந்திரனாய்க் கணவர்!… ”உதவுவீர்களா?” என்றேன்.

சரி என்றார். ஏறி அமர்ந்தேன்.
‘ சரி பெடலை மிதி! பிடிக்கிறேன்”.. என்றார்.
சமமாக மிதித்து சங்கடமின்றி ஓட்டினேன்.
சத்தியமாகப் பின்னாலே பிடிக்கவில்லை என்றார்.

இதுவே நான் மாமரத்தினடியில் மிதிவண்டியோட்டிய
இன்னலற்ற அனுபவம்! நொடிப் பொழுதுமில்லை.
இதமான நிதானம் வெற்றி நிறைத்தது.
இன்ப அனுபவம் எம்மிருவரின் நம்பிக்கை.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-12-2014.

16161859-ab

Next Newer Entries