361. வாக்கு மாற்றும் உலகமிது.

10378923_871511506214280_3693944858939824157_n

வாக்கு மாற்றும் உலகமிது.

(ஒரு ஊடகத்தால் நன்றாக ஏமாற்றப் பட்ட விரக்தியில் 10 வருடத்திற்கு முன்னர் எழுதியது)

துரோகங்களும்  அவமானங்களும் துகிலுரியும் தாழ்வும்

ஏமாற்றுவோரும் ஏமாறுபவனும் ஏட்டிக்குப் போட்டியான நீள்வும்

சாமரம் வீசுவோரும் சாதிப்போரும் சரிபாதியாகப் பின்னிய வாழ்விது.

பாரபட்சமும் பச்சாத்தாபமும் பழி வாங்கும் சூழலும்

மூக்கு நுழைப்போரும் முண்டியடிப்போரும் தாக்குப்பிடிப்போனும் தரகராவோரும்

ஊக்கமாகி, உன்னத மனிதர்கள் வாக்கு மாற்றும் காலமிது

p1090189 

விரிந்த உலகு மனது சுருக்கம் நரி கொக்கு விருந்து மறுபடியும்

சரித்து வீழ்த்தவும் சமாதனமாகவும் சிரித்து நடிக்கும் சின்ன மனிதர்கள்.

விரித்துப் பார்க்க இவர் புத்தகமும் இல்லை! உரித்துப் பார்க்க மனிதர் பழமுமல்ல

 

பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்.

26-4-2005.

வல்லோசை மெல்லோசை இடையோசைச் சொல்லோசையாய்த்
தமிழோசை கேட்க ஆசை.
எழுத்தாசை ஓயாப்பாசையாகி அன்பெனும் மெல்லோசை
போல வாசிப்பாசை ஓயாவோசையாகட்டும்.

வேதா. இலங்காதிலகம்.
5-2-2015

div138

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  பிப் 06, 2015 @ 00:57:09

  விரிந்த உலகு
  சுருங்கிய மனது
  உண்மைதான் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 06, 2015 @ 01:51:21

  சில அவமானங்கள் தான் எழுச்சியை தரும்…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  பிப் 06, 2015 @ 02:40:36

  இத்தனை நாள் கழிந்தும் மீள்பதிவு என்றால் ,துரோகத்தின் வடு ஆழமாய் இருக்கும் போலிருக்கே !

  மறுமொழி

 4. Velavan Athavan
  பிப் 06, 2015 @ 17:58:29

  அருமை அருமை ஆணவத்தேரின் அனாகரிக அச்சாணியை தொட்டெழுதினீர்கள் தொடர்க தோல்வி இல்லை ..

  விரிந்த உலகு மனது
  சுருக்கம் நரி

  சரித்து வீழ்த்தவும்
  சமாதனமாகவும்
  சின்ன மனிதர்கள்.

  விரித்துப் பார்க்க இவர் புத்தகமும் இல்லை!
  உரித்துப் பார்க்க மனிதர் பழமுமல்ல

  இச்சிறியவனின் பாராட்டுகள் வேதா அக்கா…

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 08, 2015 @ 20:42:49

  Malini Mala:-
  எல்லாமே கலந்த பூமி. கற்றுத் தரப் படுவதை அனுபவமாக எண்ணி நகர வேண்டியது தான்
  February 5
  Vetha Langathilakam:-
  mmm. nanry malini…happy for your words…
  February 5
  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  \\விரிந்த உலகு மனது சுருக்கம் நரி கொக்கு விருந்து மறுபடியும் சரித்து வீழ்த்தவும் சமாதனமாகவும் சிரித்து நடிக்கும் சின்ன மனிதர்கள். விரித்துப் பார்க்க இவர் புத்தகமும் இல்லை! உரித்துப் பார்க்க மனிதர் பழமு\\ மல்ல….. *************** ஐயோ… நான் நல்ல பையன்!! என்னைத் திட்டாதீர்கள்!! வாழ்த்துக்கள் அம்மா!!
  February 5
  Subajini Sriranjan:-
  மிக பொருத்தமான பதிவு…
  அவமானங்கள் அனுபவங்களை சேகரித்து நல்வாழ்வுக்கு பயன் படுத்துவோம்…,

  நரி கொக்கு விருந்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி
  இன்றைய நவீன உலகில் இவை அழகாக பாத்திரமேற்று அரங்கேற்றப்படுகின்றது……
  பரந்த உலகில் ஒரு பறவையை போல இருக்க முயற்சிப்போம்…..
  February 5
  Parithi Ramaswamy:-
  விரிந்த உலகு மனது சுருக்கம் நரி கொக்கு விருந்து மறுபடியும்
  சரித்து வீழ்த்தவும் சமாதனமாகவும் சிரித்து நடிக்கும் சின்ன மனிதர்கள்.
  விரித்துப் பார்க்க இவர் புத்தகமும் இல்லை! உரித்துப் பார்க்க மனிதர் பழமுமல்ல ========== எவ்வளவு வருத்தப்பட்டு எழுதி இருக்கிறீர்கள்
  February 5

  Vetha Langathilakam:-
  அன்புடன் சிறீ – சுபா – பரிதி சார்
  எம்மால் எதிர்க்க இயலாது.
  பிரபலங்கள், மன வேதனையைக் கொட்டலாம் தானே…!
  ஆம் மிக நொந்து இருந்தேன்.
  இப்போது வாசிக்கும் போது
  இவ்வரிகளை நானா எழுதினேன் என்று இருக்கிறது.
  அவர்களும் வாசிக்கக் கூடும் இதை
  மிக்க நன்றி தங்கள் வரிகளிற்கு.
  February 5
  Alvit Vasantharany Vincent :-
  இப்படியான அனுபவங்களுக்கு யாருமே விதிவிலக்கில்லை என்றே சொல்லலாம்.
  February 5
  சி வா :-
  Arumai.. Vetha Langathilakam amma..
  February 5
  Dhavappudhalvan Badrinarayanan A M :-
  Arumai ammaa.
  February 5
  Vetha Langathilakam:-
  Dear Alvit – siva- dear D.B.Am மிக்க நன்றி தங்கள் வரிகளிற்கு
  February 5
  Sujatha Anton:-
  அனுபவங்கள் ஒரு புதுவழிக்கு திருப்பம்.

  Vetha Langathilakam:-
  Thank you Sujatha.

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 10, 2015 @ 17:10:01

  Rathy Srimohan :-
  மிக அருமையான வரிகள்…….
  9-2-15

  Vetha Langathilakam :-
  Thank you Rathy….

  Ganesalingam Ganes Arumugam:-
  இனிய காலை / மதிய / மாலை / இரவு வணக்கங்கள்
  Ganesalingam Ganes Arumugam’s photo.
  9-2-15

  Vetha Langathilakam :-
  Thank you Gnesh and samme to you…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: