6. யார் குரலிது!.

cho11-2014 070

யார் குரலிது!

இனிக்கும் நான்குமாத மழலை மொட்டுறவு
இந்திரவில் (வானவில்) ஒரு பூலோக சொர்க்கம்!
இவ்வுலக பந்தத்தால் இறுக்கமாய் உருவாகும்
இணையற்ற புனித நேசப் பிணைப்பு!
அமிர்தத் தாய்ப்பால் சுவைக்கிறான் எம்
அரிய இரண்டாம் பேரன் சோழன்.
சுதந்திரமாய்ச் சுவைத்த வேளை நான்
சுகம் விசாரிக்க உள் நுழைந்தேன்.

என் குரலோசை கேட்டதும் யாரிது!
என்னம்மா அப்பா தவிர்ந்த குரலிது!
எங்கிருந்து வருகிறது! ஆவல்! ஆர்வம்!
பரபரப்பு சுட்டிப்பயல் ஞானக் குழந்தைக்கு!
பால் குடிப்பதை உடன் நிறுத்தினான்.
பக்கமெல்லாம் தலை திருப்பித் தேடினான்.
பார்த்திட முன்னின்றேன் ‘ஹாய்!’ கூறி.
பரவசமாய்ச் சிரித்தென் கரத்துள் வந்தான்.

குழந்தை மழலைப் பிதற்றல் பூவாளிக்
குளிப்பாட்டல், குளிர்கழிச் (ஐஸ்கிறீம்) சுவையமுதம்!
மந்திரப் பழம், இந்திரப் பழம்
சந்திரப் பழமான விநோத இன்பம்!
சடுதியாய் எழுந்தென் குரல் தேடிய
சோழன் வந்துவந்து போனானென் மனதில்!
நாள் முழுதுமவன் லீலா விநோதத்தை
நானுமிவரும் சொல்லிச்சொல்லிக் களித்தோம்! அற்புதம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-2-2015.

baby-items

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  பிப் 08, 2015 @ 14:22:04

  மழலை இன்பம் தரும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 09, 2015 @ 00:56:56

  இது தான் சந்தோசம் அம்மா…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  பிப் 09, 2015 @ 14:21:06

  மழலை மொழி மகிழ்ச்சி மொழி
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. KILLERGEE Devakottai
  பிப் 09, 2015 @ 14:38:52

  நடைமுறை யதார்த்தத்தை அருமையாக செதுக்கி விட்டீர்கள் சகோ.

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 10, 2015 @ 17:02:57

  சி வா :-
  ஹா ஹா ஹா … வேதாம்மா.. மாப்பிள்ளையை இப்போதே பார்க்க வேண்டும் போல் உள்ளது..

  வாழ்த்துக்கள் மாப்பிள்ளை..
  February 7 – 2015

  Subajini Sriranjan :-
  அற்புதம்….
  மழலையுன் சொல்லே அமிர்தம் ..,
  யாழ் குழல் என்ன தோற்றுப் போய் விடுகிறது ….
  பேரன் குரல் கேட்டு
  கவிதை ஒன்று பேசியதே……
  February 7-2015

  Angel Angel:_
  மந்திரப் பழம், இந்திரப் பழம் /// superb !
  February 7

  Rathy Srimohan:-
  செல்லப்பேரனின் குரல் கேட்டு கவிதை ஒன்று உதித்தது…, அழகே அழகு
  February 7

  Alvit Vasantharany Vincent :-
  மந்திரக் கவிதை.
  February 7

  Geetha Mathivanan :-
  பாட்டியின் தமிழமுதம் சுவைக்கும் ஆசையில் தாயமுதமும் தள்ளினாரோ? அழகுச்செல்லம்! அழகுத்தமிழ்!
  February 7

  மகாதேவன் செல்வி:-
  பாட்டியை மகிழ்விக்கும் பேரனுக்கு வாழ்த்துகள்
  February 8

  Kalaimahel Hidaya Risvi:-
  பாட்டிபாட்டிவிதை அழகே அழகு:
  February 8

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 10, 2015 @ 17:04:34

  Gomathy Arasu:-
  இவ்வுலக பந்தத்தால் இறுக்கமாய் உருவாகும்
  இணையற்ற புனித நேசப் பிணைப்பு அருமையான வரிகள் பாசத்தையும் நேசத்தையும் கவிதையில் அழகாய் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சோழனுக்கு.
  February 8

  Muruguvalli Arasakumar :-
  மழலைச்செல்வத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்…
  February 8

  Malikka Farook:-
  இவ்வுலக பந்தத்தால் இறுக்கமாய் உருவாகும்
  இணையற்ற புனித நேசப் பிணைப்பு அருமையான வரிகள் பாசத்தையும் நேசத்தையும் கவிதையில் அழகாய் சொல்லிவிட்டீர்கள்.///// உண்மைதான்… வாழ்த்துக்கள் பேரனுக்கும் பாட்டிக்கும்
  February 8

  Sujatha Anton :-
  பாட்டியின் அன்பு மழலை பேரனுடன் மழலையாக பொழிகின்றது.அதிலும் கவித்துவமும் இணைந்து மழலை மொழி பேசுகின்றது. புகைப்படமும் அருமை. வாழ்க தமிழ்.!!!!
  February 8

  Gowry Sivapalan:-
  எச் சுகமும் இணையாமோ இவ்வின்பம் கொண்டார்க்கு. அற்புதக் கவியாய்ப் பேரன் அன்புமழை கொண்டார்க்கு எக்கணமும் மகிழ்கணமே. எம்முடனே பகிந்துகொள்ளும் இக்கணம் எமக்கும் மகிழ்கணமே
  February 8

  Malini Mala :-
  மழலைக்கு மாற்றீடான மகிழ்வு உலகத்தில் இல்லை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 10, 2015 @ 17:06:06

  Ganesalingam Ganes Arumugam :-
  இனிய காலை / மதிய / மாலை / இரவு வணக்கங்கள்.
  Ganesalingam Ganes Arumugam’s photo.
  February 8

  Vetha Langathilakam:-
  அன்புடன் சிவா சிரித்திட்டேன் உமது வரி பார்த்து
  மிக்க நன்றி.
  February 8

  Vetha Langathilakam :-
  dear Suba -Angel – Rathy – Alvit மிக மகிழ்ச்சி.
  உங்கள் அன்பான வரிகளிற்கு
  மிக்க நன்றி.
  February 8
  Vetha Langathilakam:-
  Dear Geetha.. தமிழமுதம் சுவைக்கும் ஆசையில் தாயமுதமும் தள்ளினாரோ? ..sure..He loves me….Thank you.
  February 8
  Vetha Langathilakam :-
  மகாதேவன் செல்வி – Kalaimahel Hidaya Risvi – Gomathy Arasu – Muruguvalli Arasakumar – Malikka Farook – Sujatha – Gowry – Malini – Ganesh – உங்கள் அனைவரின் அன்பான வரிகளால் மகிழ்ந்தேன்.
  தனித்தனியாகக் கருத்து எழுதாது ஒன்றாக எழுதுவதால்
  குறை விளங்காது நன்றியை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

  மறுமொழி

 8. வே.நடனசபாபதி
  பிப் 11, 2015 @ 10:26:43

  பேரனைப் பார்த்த மகிழ்ச்சியில் பாட்டி படைத்த கவிதை அருமை. இரசித்தேன்!

  மறுமொழி

 9. ranjani135
  பிப் 12, 2015 @ 04:11:45

  பேரனுக்கான கவிதை ஆஹா!
  இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
  நன்றி,
  ரஞ்சனி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: