51. அன்பின் எல்லைகள்

Unavngivet

அன்பின் எல்லைகள்

(அன்பின் எல்லைகள் இரண்டாகத்தானே இருக்கும்!
விரும்புதலும் வெறுத்தலும்.
இதற்குள் பல அடங்குகிறது.
அலட்சியப் படுத்தி உதாசீனப் படுத்தும் அன்பும்
அன்புக்காக உயிர் கொடுக்கும் அன்பும்.
இதையே கூற வருகிறேன்.)

பச்சைக்கிளி அவன் விருப்பத்தை
அச்சையாய் (வேதவாக்காய்) அன்பினால் செய்கிறாள்.
இச்சைப்படும் அவள் விருப்பங்கள்
கொச்சையாய் (இழிவு), நிராகரிப்பு, ஏற்பில்லை.
கெச்சை (பெருமித) நடையில் நழுவுகிறான்.
பச்சைப் புண்ணாகும் இதயம்.
சச்சை(ஆராய்ச்சி) செய்தால் இவன்
பச்சை(அநாகரிக) ஆண் மகனே.

மின்மினிகள் காதல் வெளிச்சமிடும்
நான் எல்லைகள் விடுபட்டும்
அன்பு எல்லைகள் பரந்தவன்.
அன்பே உனக்காய் என்றும்
தன்னைப் பெண்ணுக்காய் மாற்றும்
இன்பச் செல்ல மொழியாளன்.
அன்பின் மேலாண்மை கொண்டவனும்
தன்னலமற்றவனும் உலகில் உள்ளான்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-2-2015.

butterfly- 3

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. KILLERGEE Devakottai
  பிப் 12, 2015 @ 13:18:48

  அன்பின் எல்லைகள், மனதின் எல்லையை தொட்டதே…. அருமை.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  பிப் 12, 2015 @ 14:27:08

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 12, 2015 @ 16:29:25

  கண்டிப்பாக பலர் உள்ளார்கள்…

  மறுமொழி

 4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 13, 2015 @ 02:38:32

  அன்பிற்கு எல்லையே இல்லை. புகைப்படம் மனதில் பதிந்துவிட்டது, கவிதையைப்போல.

  மறுமொழி

 5. iniya
  பிப் 13, 2015 @ 16:07:01

  இங்கும் கண்ணன் பாடலா அட ட டா அழகான கண்ணன் படம் அதற்கேற்ப கவி அருமை அருமை !

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 20, 2016 @ 18:28:39

  You, கவின் மகள் and Puspha Ponraj like this.
  Comments

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- அன்பின் மேலாண்மை கொண்டவனும்
  தன்னலமற்றவனும் உலகில் உள்ளான்.
  Unlike · Reply · 1 · 20-2-2016

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வுடன் இனிய நன்றிகள் சிறீ.
  அனுபவ முத்தே தான்.
  Like · Reply · Just now 20-2-2016

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 22, 2016 @ 08:59:37

  Sivakumary Jeyasimman :- appadippadda aanmakanai thunaiyaakirathu kondavalukku thunpamaanathu enrumillai
  Unlike · Reply · 1 · 22-2-16

  Vetha Langathilakam :- Yes……Thank you..
  Like · Reply · Just now 22-2-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: