52. பயன் ஈயும் காதல்

893239_382534188545770_1636332049_o

பயன் ஈயும் காதல்

உயிரை உய்விக்கும் உன்னதம் காதல்

பயிராகி வாழ்வில் பயனீயும் காதல்.

செயிக்கும் தாரக மந்திரம் காதல்!

ஒயிலாகி வாழ்விற்குப் பலம் தரும் காதல்.

காமதேவனுக்கு யாகமோ காதலர் நாள்!

காமன் திருவிழாவோ காதலர் நாள்!

காமன் முதுகேறும் காதலர் வாள்

காமம் நிறைந்தால் புனிதமழிக்கும் தேள்!

 

காதல் களவாடும் இளமைக் காலம்

காதல் நதியின் இன்பப் பாலம்!

காமன் மலர்ச் சாரல் தூவல்

காதற் கலையின் சித்திரக் கோலம்!

காதல் தீ பனியாகிக் கொட்டும்

காதல் பட்டம் கண்களால் வானெட்டும்.

காதல் மாளிகை வார்த்தைகள் கட்டும்.

காதல் கவிதைகள் மழையாகப் பொழியட்டும்!

எல்லோருக்கும் இனிய காதலர் நாள் வாழ்த்துகள்.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.1

3-2-2015.

3356826ujko9qbny6

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  பிப் 14, 2015 @ 01:14:55

  கவி அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. srichandra
  பிப் 14, 2015 @ 03:27:04

  கவிதை அருமை சகோதரி

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 14, 2015 @ 03:40:29

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  பிப் 15, 2015 @ 00:02:27

  காதலில்லா வாழ்வில் சுகமேது? காதல் ரசம் சொட்டும் அழகான காதல் கவிதை. இனிய காதலர் தின வாழ்த்துகள் தோழி.

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 15, 2015 @ 18:32:59

  http://www.stsstudio.com/?p=6228
  மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா
  உங்கள் ஆதரவிற்கு.

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 16, 2015 @ 07:25:11

  Mani Kandan :-
  அருமை
  16-2-2015

  Vetha Langathilakam:-
  mikka nanry dear M.K.

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 16, 2015 @ 08:37:20

  Malini Mala:-
  உயிரை உய்விக்கும் உன்னதம் காதல்// அழகான வரிகள். . வாழ்க்கையாக இருந்தால் கவிதை போல் வாழ்க்கை.
  16-2-15

  Vetha Langathilakam:-
  mikka nanry dear Mala..

  மறுமொழி

 8. கோவை கவி
  பிப் 13, 2018 @ 10:37:55

  Rathy Mohan:- அருமையான கவிதை… காதலர் தின வாழ்த்துக்கள்..,

  Vetha Langathilakam.- Madhan M Kumar:- nice ….13-2-15

  Sujatha Anton :- காதல் தீ பனியாகிக் கொட்டும் காதல் பட்டம் கண்களால் வானெட்டும். காதல் மாளிகை வார்த்தைகள் கட்டும். காதல் கவிதைகள் மழையாகப் பொழியட்டும்! அருமை….. காதல் இன்றி காதல் என்ற வார்த்தைக்கும் அடையாளம் இல்லை. வாழ்க தமிழ்.!!!

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி ரதி – சுஜாதா.
  கருத்திடலிற்கு மிகுந்த நன்றி.

  Gowry Sivapalan:- காதலர் தின வாழ்த்துக்கள்.

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- காதல் களவாடும் இளமைக் காலம் காதல் நதியின் இன்பப் பாலம்!

  Prema Rajaratnam :- காதலர் களவாடும் இளமைக்காலம்
  காதல் ந்தியின் இன்பப் பாலம்,,,அருமையான கவிதை.

  மறுமொழி

 9. கோவை கவி
  பிப் 13, 2018 @ 10:39:22

  Subajini Sriranjan :- அருமையான வரிகள்..,,
  காதலால் உலகம் உய்யும்!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: