362. மரணம் – நாகமணி நினைவுகள்

MH900434389

மரணம்

கரணம் தப்பினும் 

மரணம் வரும்.

திரணம் (புல்) தடுக்கினும்

மரணம் வரலாம்.

பரணம் (கவசம்) வரணம் (மதில்)

மரணம் தடுக்காது.

குரணமும் (முயற்சி) வெல்லாது.

இரணம் தரும் 

—மரணம் வலி….

கிரணம் (கதிர்) வீசும்

உரணத்துள் (முகில்) புகும்

புரணம் (நிறைவு) மரணம்.

மரணம் ஆறுதல்

சரணமொரு வகையில்.

விரணம்(பகைமை) வெல்லும்.

தரணம் (பூமி) தாங்காது

மரணம் இன்றேல்.

 

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

23-2-2015.

நாகமணி நினைவுகள்

அனுபவங்கள் திணற ஆசை கரைய

அன்பால் எருவான உறவு மரம்.

சுவாசம் இறுகக் கண்ணீரில் கரையும்.

அவகாசம் தராது அங்கங்கள் சோரும்.

உபவாசம் என்று உணர்வுகள் தேயும்.

நாட்கள் நல்லது செய்யும்! அதுவரை

நாகமணி நினைவுகள் நாகதாளியாய் வதைக்க

நாழிகைகள் தள்ளி நிம்மதியில் குளித்தெழலாம்.!   

(நாகமணி நினைவுகள் – நாகரத்தின நினைவுகள்.)

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-2-2015.

Deepam-Border-Kolam-3

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 27, 2015 @ 00:43:48

  நிதர்சனம்…

  மறுமொழி

 2. கோமதி அரசு
  பிப் 27, 2015 @ 02:11:24

  நாட்கள் நல்லது செய்யும்//

  காலம் கவலையை போக்கும். சகோதரியின் நினைவுகள் அதுவரை தொடரும்.
  உண்மையை சொல்லும் கவிதை.

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  பிப் 27, 2015 @ 22:09:59

  மரணத்திற்கு மரணமேது? அனைத்தையும் நாம் எதிர்கொண்டே ஆக வேண்டியுள்ளது. இதுவே உண்மை நிலை.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  பிப் 28, 2015 @ 14:11:59

  உண்மை உரைக்கும் கவிதை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 5. yarlpavanan
  மார்ச் 01, 2015 @ 14:36:17

  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 6. KILLERGEE Devakottai
  மார்ச் 01, 2015 @ 15:55:22

  மரணம் தவிர்க்க முடியாதது.

  மறுமொழி

 7. சிவா சாமி ஜீ
  ஏப் 19, 2015 @ 16:04:39

  குழந்தை பக்கியம் இல்லை தவங்கா என்னை தொடர்பு கெள்ளவும் சிவாசாமிஜீ 9087923732 madurai

  மறுமொழி

 8. சிவா சாமி ஜீ
  ஏப் 19, 2015 @ 18:43:58

  வாழ்விலும் ஆன்மீகத்திலும் நிறைவாகவும் உயர்வாகவும் வாழ உதவும் பயிற்சிகள் ,சித்தர்கள்,ஆன்மீகம்,தியான முறைகள்,மந்திரஜபம் பற்றிய பதிவுகள் நிறைந்த தளம்கேள்விகளுக்கு MOBILE: 9087923732

  மறுமொழி

 9. சிவா சாமி ஜீ
  ஏப் 19, 2015 @ 18:44:47

  Reblogged this on sivasammyji and commented:
  வாழ்விலும் ஆன்மீகத்திலும் நிறைவாகவும் உயர்வாகவும் வாழ உதவும் பயிற்சிகள் ,சித்தர்கள்,ஆன்மீகம்,தியான முறைகள்,மந்திரஜபம் பற்றிய பதிவுகள் நிறைந்த தளம்கேள்விகளுக்கு MOBILE: 9087923732

  மறுமொழி

 10. கோவை கவி
  பிப் 23, 2018 @ 12:28:03

  சி வா:- மீச் சிறப்பு வேதாம்மா.. இப்பதிவு தாங்கள் பதிந்த நோக்கம் தெரியவில்லை..

  தங்களின் உள்ளத்து உணர்வுகளில் நானும் பங்கெடுக்கிறேன் அம்மா..
  2015
  சிறீ சிறீஸ்கந்தராஜா :- திரணம் (புல்) தடுக்கினும் மரணம் வரலாம். பரணம் (கவசம்) வரணம் (மதில்) மரணம் தடுக்காது.

  Malini Mala:- //மரணம் ,
  சரணமொரு வகையில்// நெருங்கிய இறப்புகளின் போது நானும்இதை தான் நினைப்பதுண்டு.
  2015
  Nalayiny Thamaraichelvan:- என்னாச்சு… ?? 😦

  Nalayiny Thamaraichelvan:- நலம் தானே யாபேரும். 🙂

  Alvit Vasantharany Vincent:- ஒரு வகையில் விடுதலைதான்.
  2015
  Gomathy Arasu :- மரணம் எப்படியும் வரும் தான். யாருக்கு எப்போது எப்படி என்பது மட்டும் தெரியாது.

  Mageswari Periasamy:- இதுவும் கடந்து போகும் தோழி. அமைதி காக்க …
  2015
  Raji Krish :- இந்த நவீன காலத்தில் பிரசவம் பத்து மாதம் ஆவதற்குள் ஒரு பெண்ணுக்கு அவர்கள் வசதி கேற்ப பிள்ளை பெற்று கொள்ளலாம்.. அந்த அளவுக்கு டெக்னோலஜி வளர்ந்திருக்கிறது ( ஜனனம்)
  ஆனால் மரணமோ நமக்கு எப்போ, எங்கே, எப்படி வரும் என்று தெரியாத அளவுக்கு ஆண்டவன் நமக்கு நம் மரணத்தை நம்மிடமே மறைத்து வைத்து இருக்கிறார்..
  * உங்கள் தங்கையின் இழப்பு பெரிய இழப்பாகும்… ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்…தைரியமாக, அவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருங்கள் சிஸ் வேதா… அன்புடன் ராஜி.

  Rajagulasingam Kanagasabai :- RIP

  Maniyin Paakkal:- எது தடுத்தாலும் வரும் ஒரே உறவு மரணம்

  Sandrasegara Subramaniam :- பிறந்தார் மரணம் நிச்சயம் ஆனால் எப்போது என்பதையாரும்கணிக்கமுடியாது.ஆராச்சிசெய்து எதுவும் காணவும்முடியாது.

  Genga Stanley:- pirakumpothey eluthappaddathu.
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: