363. 1. உறவுத் தடை 2.இழப்பு

29-1390990603-kallanai

உறவுத் தடை

பணத்தாள்களும் உறவு மனங்களை மனதார

இணங்கி நெருங்க விடாது.

 

உறவுகளைத் தானறியாது பிரிப்பவன்  உணரான்

துறவு மனிதனை நெருங்குவதை.

 

உறவு உறையில் துளை விழுந்தால்

இறங்கும் பாசச் சில்லறைகள்.

 

பணமிருக்கும் வரையே பணக்கர்வம்,  மாறாக

குணக்கர்வம் இறக்கும் வரை.

 

திருமணம் கூட மதில்களாகும் உறவுகளின்

ஒரு மனமாகும் நெருக்கத்தில்

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2-3-2015

flowers2

இழப்பு

இழப்பு இழப்புத் தான்!

குழப்பி மனிதனைக் கலக்கும்.

உழப்புக் (வருத்தம்) குறைய, மனோதிடம்

இழக்காது உழத்தல் (வெல்லுதல்)அமலம் (மாசற்றது).

இழப்பு பொருளானால் ஈட்டலாம்.

இழப்பு உயிரானால் வழியேது!

இழப்பாளியின் பலவீனம் தோல்வி.

எழல் எழிலான புரவி.

 

 

சிலரது பகிரங்கப் புலம்பல்

சிலரது ஊமைப் பல்லவி.

தோகை விரிக்கும் மனோதிடம்

வாகை மலராடை போர்த்தும்.

பரிவுச் சிறகணைப்பு இதமது

விரிக்கும் நம்பிக்கை மழை.

தரிக்கும் சிந்தனைச் சறுக்கல்

சிரிப்பை அற்ற (வற்றிய) குளமாக்கும்.

 

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-2-2015

gate line

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  மார்ச் 02, 2015 @ 15:26:38

  நவீன திருக்குறள் அருமை
  சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 02, 2015 @ 18:49:14

  Mikka nanry Sakothara sts……:- http://www.stsstudio.com/?p=6615

  மறுமொழி

 3. pkandaswamy
  மார்ச் 02, 2015 @ 23:34:19

  கருத்துகள் அருமை.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 03, 2015 @ 00:32:56

  அருமை… அருமை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. கோமதி அரசு
  மார்ச் 03, 2015 @ 06:09:23

  நீங்கள் கவிதையில் சொன்ன அனைத்தும் உண்மை.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 04, 2015 @ 11:02:29

  இழப்பு…comments…..

  Subajini Sriranjan :-
  உண்மை…
  //சிரிப்பை அற்ற குளமாக்கும்//
  இழப்பு வரும் போது…See More
  March 2

  Rathy Srimohan:-
  உண்மை… சிரிப்பு தொலைகிறது இழப்பு வருகையில்…
  March 2
  Kannan Sadhasivam:-
  மெய் இழப்பு வருத்தும்
  4-3-15

  Vetha Langathilakam:-
  Dear Suba – Rathy – Kannan mikkananry makilvum.

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 04, 2015 @ 11:12:44

  உறவுத் தடை..comments….

  Mani Kandan:-
  சத்தியமான வரிகள்
  March 2 – 2015
  Sasith Sasi :-
  உலக நிலை கோலம்
  March 2
  Kannan Sadhasivam :-
  அனுபவம் பொங்கும் உண்மையாய் தெரிகிறது….
  March 2
  Ramadhas Muthuswamy – அருமை!
  “சிலரைத் தவறாய்ப் புரிந்து பிரிதல்
  புலமை புரண்டு விடுமே! – பலரைச் .. சரியாய்ப் புரியாது சிந்தையில் சேர்த்தல்
  தெரியாமல் தெற்றாகும் தான்!”
  March 2
  Gowry Sivapalan:-
  உறவு உறையில் துளை விழுந்தால் இறங்கும் பாச சில்லறைகள் super
  March 2
  Eugin Bruce:-
  அருமை!
  Yesterday 3-3-2015.

  Velavan Athavan கட்டிவைத்த தேக்கம் விட்டு கட்டவிழ்த்து போனதே பாசம் கருக்கல் உடைக்கிதிங்கே கண்ணீர்ச் சரம் – நீருக்கு கல்லணை வேருக்கு கருணை அணை வெட்டிப்போன உதிரம் தொட்டு நெஞ்சம் விட்டகலாது மாழ்கிறதே மறை கொண்ட காலம் திருவோடு ஏந்தியும் திரும்பக் கிடைக்காதது உசிரென அறிந்தும் தேடுகிறோம் மனசுக்கு மருந்திட்டும் மாறக் காயம்……
  Yesterday 3-3-15
  Sujatha Anton :-
  பணமிருக்கும் வரையே பணக்கர்வம், மாறாக குணக்கர்வம் இறக்கும் வரை முற்றிலும் உண்மை. மனிதன் இறந்த பின்பு எதையும் கொண்டு பயணிப்பதில்லை. அருமை. வாழ்க தமிழ்.!!!!

  Vetha Langathilakam:-
  அன்பான மணிகண்டன் – சசித்சசி – கண்ணன் – ராமதாஸ் எம் –
  கௌரி – சுயேன் – சுஜாதா – Eugin Bruce அனைவருக்கும்
  மகிழ்வைத் தெரிவித்து நன்றி கூறுகிறேன்..

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 15, 2015 @ 03:50:53

  வணக்கம்
  சொல்லிய வரிகளை இரசித்து படித்தேன் .
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 15, 2015 @ 03:54:54

  வணக்கம்
  http://www.stsstudio.com/?p=6615
  தங்களின் வலைப்பூவா???

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 10. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 15, 2015 @ 03:57:05

  வணக்கம்
  http://www.stsstudio.com/
  இந்த வலைப்பூ பற்றிய விளக்கத்தை எழுதிஅனுப்புங்கள்..
  rupanvani@yahoo.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 17, 2015 @ 20:25:42

  மிக மகிழ்வு Rupan
  வரிகளிற்கு மிக நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: