24. பசுவின் பால். (சிறுவர் பாடல்)

collage paal...

பசுவின் பால். (சிறுவர் பாடல்)

பால் பால் பால் இனிக்கும்

பால் எனக்குப் பிடிக்கும் – தினம்

பாசமாய்ப்  பெற்றோர் தரும் நல்ல

பால் ஒரு சத்துணவாம்.          (பால்…)

 

பசும்புல்  குழைகள் உண்டு எமக்குப்  

பசு தரும் பால் – நம்

பசி தீர்க்கும் பால். ஏழையும்

பணக்காரனும் விரும்பிக் குடிப்பார்.   (பால்…)

 

வெகு சுவையான  பால் . இது

வெள்ளை நிறப் பால் – நாம் 

வெறுக்காது பால் குடித்தால் பிள்ளைகள்

வெகு பலசாலி ஆகலாமாம்.        (பால்…)

பாலைக் காய்ச்சியும் குடிப்பார் சிலர்

பச்சையாகவும் குடிப்பார். நான் விருப்போடு

பால் பழம் உண்பேன் நன்றாகப்

படித்துப் பெரியவன் ஆகுவேன்.        (பால்…)

 

பா ஆக்கம்  

பா வானதி வேதா. இலங்காதிலகம்

.டென்மார்க்.

15-3-2015.

643630yr2vtei28b

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Dr.M.K.Muruganandan
    மார்ச் 16, 2015 @ 00:31:20

    பாலும் சுவை
    கவிதையும் சுவை

    மறுமொழி

  2. karanthaijayakumar
    மார்ச் 16, 2015 @ 01:13:29

    பாலின் சுவையை
    மிஞ்சும்
    கவிதை
    நன்றி சகோதரியாரே

    மறுமொழி

  3. திண்டுக்கல் தனபாலன்
    மார்ச் 16, 2015 @ 01:32:03

    இனிமை…

    மறுமொழி

  4. கீதமஞ்சரி
    மார்ச் 16, 2015 @ 02:12:00

    இத்தனைப் பெருமைமிகு பசும்பாலை அழகுத் தமிழ்ப்பாலோடு கலந்தூட்டும் பாட்டி தாத்தாவும் அவர்தம் மடிசாய்ந்து இனிதே இரண்டையும் பருகும் பேரனும் அழகு.

    மறுமொழி

  5. Kowsy
    மார்ச் 16, 2015 @ 20:02:48

    பால் சுவையுடன் பாட்டி மடியும் தாத்தா மடியும் இணைந்து சுவைக்கிறதே. வெற்றி குடிக்கும் வெற்றிப்பால் இது. ,

    மறுமொழி

  6. கோவை கவி
    மார்ச் 16, 2015 @ 20:32:21

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- https://youtu.be/PgcuNWv_AaY
    Thotathil Meyudhu – Chellame Chellam – Cartoon/Animated Tamil Rhymes For Chutties
    Subscribe here: http://www.youtube.com/user/MagicboxTamRhy?sub_confir
    YOUTUBE.COM
    Yesterday 15-3-15

    மறுமொழி

  7. கோவை கவி
    மார்ச் 16, 2015 @ 20:38:55

    Alvit Vasantharany Vincent :-
    பாலும் பேரனின் உடல் நலனும். வாழ்த்துக்கள்!

    Vetha Langathilakam :-
    அன்புடன் அல்விற: – சகோதரன் சிறீ மிக்க நன்றி…..
    ஏற்கெனவே சனிக்கிழமை என்று நினைக்கிறேன் Vethri கார்ட்டுன் பார்ப்பார் தமிழும் ஆங்கிலமும்.
    சுகயீனம் என்றாலும் பார்க்க விடுவினம்…..படு சுட்டி நன்றாகப் பார்ப்பார். எங்களைப் போல.
    15-3-15

    மகாதேவன் செல்வி :-
    குழந்தைக்கான நல்ல பாடல்

    Vetha Langathilakam:-
    விஜயகுமார் வேல்முருகன் likes this.
    விஜயகுமார் வேல்முருகன் :- அருமை என் பிள்ளைகளுக்கும் சொல்லித்தருவேன்
    பாவையும்..பாலையும் 15-3-15
    Vetha Langathilakam:- எமது பேரனுக்கும் இதைப் பாடுவேன்..
    ஏற்கெனவே வாயில் வந்தபடி பாடுவதுண்டு.
    வடிவாய் கவனித்துப் பார்ப்பார்.
    நானில்லாத நேரம் தாயாரிற்கு வாயில் வருவதைப் பாடுவாராம்.. Nanry V.Vm..

    Ramadhas Muthuswamy :-
    மிகவும் அருமை!
    15-3-15

    Sandrasegara Subramaniam :-
    நன்றி பகிர ந்த வருக்கும்

    Geetha Mathivanan :-
    இத்தனைப் பெருமைமிகு பசும்பாலை அழகுத் தமிழ்ப்பாலோடு கலந்தூட்டும் பாட்டி தாத்தாவும் அவர்தம் மடிசாய்ந்து இனிதே இரண்டையும் பருகும் பேரனும் அழகு.

    தென்றல் சசி கலா :-
    நல்ல இசைப்பாட்டு.

    R Thevathi Rajan :-
    பிடிக்காதென்று சொல்பவர் சொற்பமே

    பிறந்த குழந்தைக்கு இல்லாதபோது …உயிரை காக்கும் இந்த பசும்பாலே

    குழந்தையை காக்கும் பசுவென்பதால்

    அதற்கு கடவுளின் முக்கியத்துவம்…

    வாழ்த்துக்கள் சகோ அருமையோ அருமை…

    Ganesalingam Ganes Arumugam :-
    இனிய காலை / மதிய / மாலை / இரவு வணக்கங்கள்
    Ganesalingam Ganes Arumugam’s photo.

    Vetha Langathilakam Kalaimahel Hidaya Risvi and Mohandoss DineshKumar like this.
    Kalaimahel Hidaya Risvi:-
    நன்று16-3-2015
    Vetha Langathilakam :-
    Mikka nanry kalaimakal….J

    மறுமொழி

  8. T.N.MURALIDHARAN
    மார்ச் 17, 2015 @ 01:16:06

    குழந்தைப் பாடல் படித்து நீண்ட நாட்கள் ஆகிறது. அருமை

    மறுமொழி

  9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    மார்ச் 26, 2015 @ 17:47:31

    வணக்கம்
    படத்துடன் அசத்தலான பாடல்பாடி மகிழ்ந்தேன்.பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: