39. தமிழ் கடலில் சுழியோடல்…

Tamil_News_436256051064

தமிழ் கடலில் சுழியோடல்…

கவிதை சிலவேளை பினாத்தல் ஆகிறதோ!

சதைப் பிடிப்பெனும் அருத்தமில்லாப் புலமையற்று

கதைப்பதாகித் தனக்குள் பூஞ்சையான ஊதுகுழலின்

விதைப்பாகிறதோ, பித்தன் மொழியை அலசுதலாக!

கவிதையைக் கருத்தாழப் பதிதல் அறிவாகி

உவிதலற்று உயிராய் மலர்ந்து மணக்கிறது.

பூவிதையாய் ஆழப் பதிவாய் மகிழ்வு தருகிறது.

பாவிதை குளம்பிய மனதிற்கு  வடிகாலாகிறது.

அருவியெனக் குளிர்வித்துச் சிலிர்க்கும்

வரிகள்மருவி வாழ்வுடன் மொழியில் இணைகிறது.

கருவியாய் நம்பிக்கை விதை தூவுகிறது.

ஒரு கணத்தில் வார்த்தையின் சுழற்சி

பெரு மாற்றமுருவாக்குகிறது மனதை வருடி.

புருவம் உயர்த்தலில் புது மெட்டவிழ்கிறது.

கரு புரள்கிறது புத்தலை திரண்டு

ஒரு கவிதையிலிருந்து இன்னொன்று பிறக்கிறது.

 

கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே

கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம்.

கவிதையின் வெற்றி மொழித் தீட்டல்.

கவிச் சொல்லாளுமைக்கு ஆயுள் நீட்டம்.

புவியில் நிலைநிற்கும் வரிகள் எமக்கு.

பவித்திரப் பாதை காட்டுதல் தெளிவு.

கை நழுவும் கண்ணாடிக் குவளையன்றி

கைநிறையத் தமிழ் முத்திற்கு மூழ்கலாம்.

பா ஆக்கம்

பாவானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

16-3-2015

pT5ooLeec-i

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 17, 2015 @ 01:30:08

  வார்த்தை சுழற்சியை ரொம்பவே ரசித்தேன்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மார்ச் 17, 2015 @ 02:42:31

  ///கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே

  கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம்.///
  அருமை
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. Killergee
  மார்ச் 17, 2015 @ 03:56:08

  அருமை ரசித்தேன், அனைத்தும் தேன், வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. பிரபுவின்
  மார்ச் 17, 2015 @ 05:47:45

  “கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே

  கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம்.”

  நிதர்சன வரிகள்.
  ஹய் கூ எனப்படும் கவிதைகளை நீங்கள் ஏன் எழுதுவது கிடையாது?

  மறுமொழி

 5. சசிகலா
  மார்ச் 17, 2015 @ 05:50:24

  படைப்பு எப்படி இருக்கவேண்டுமென்பதை தெளிவாக சொல்லிய விதம் சிறப்புங்க தோழி.

  மறுமொழி

 6. mageswari
  மார்ச் 17, 2015 @ 07:37:53

  கவிதைப் பற்றிய தங்களின் கவி அழகு. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 17, 2015 @ 13:11:12

  You and Kalaimahel Hidaya Risvi like this in Santha vasantham.

  Ramasami Elanthai :-
  கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே
  கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம். — உண்மை
  17-3-15

  Vetha Langathilakam :-
  நன்றி ஐயா. பல தடவை அனுபவித்துள்ளேன்.
  இக் கவிதையும் அதே.

  இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி :-
  கவி வேதாவின் மேதாவிலாசம் அடேங்கப்பா..

  மறுமொழி

 8. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 17, 2015 @ 15:56:38

  கவிதையின் வெற்றி மொழித் தீட்டலே. அருமையான தீட்டல். நன்றி.

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  மார்ச் 17, 2015 @ 16:33:53

  கவிதை பற்றி அருமையான
  கவி விளக்கம்
  சுவைக்கிறது
  தேனனைய சொற் சேர்க்கையால்

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 17, 2015 @ 17:54:19

  You, Hithayathullah Mahin and Thangavel Fic like this.

  மணி ஹரி :-
  தமிழ் முத்திற்கு மூழ்கலாம்.
  17-3-15

  Vetha Langathilakam:-
  mikka nanry sakothara… makjlchchy.

  Mani Kandan :-
  அருமை
  18-3-2015.

  Vetha Langathilakam:-
  mikka nanry sakothara… makjlchchy. Mani Kandan.

  மறுமொழி

 11. yarlpavanan
  மார்ச் 18, 2015 @ 09:49:55

  சதைப் பிடிப்பிற்கு சிறுகதை என்றால்
  கருத் தெறிப்பிற்கு கவிதை என்பேன்!
  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  மறுமொழி

 12. கீதமஞ்சரி
  மார்ச் 18, 2015 @ 12:41:42

  \\கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே
  கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம்.\\

  எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். வரிக்கு வரி ரசனை கூட்டும் அழகிய கவிதையாக்கத்தின் அற்புத சூத்திரம்! பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 13. விஜயகுமார் வேல்முருகன்
  மார்ச் 18, 2015 @ 19:16:46

  கவிமரத்தில்
  கவிஞர்கள்
  கிளைகளாய்
  இலைகளாய் படர்ந்து பாக்களெனும்
  பூக்கள் படைத்து
  கவிச்சுவை கனிகளாய்
  காய்த்து உதிர்ந்தது
  ஆணிவேராம் கவியார்வலர்களுக்கு..

  கவிதையைப் பற்றி
  கவிதையாலையே
  கவி எழுதிய
  கவிபாடியே உம்மை வணங்கி போற்றும்
  விஜயகுமார் வேல்முருகன்

  மறுமொழி

 14. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 26, 2015 @ 17:45:27

  வணக்கம்
  கவிதையின் பின் புல கருத்து நன்று… கற்பனையும் நன்று
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: