40. எழுதுகோல் எடு!

1111A copy

எழுதுகோல் எடு!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

 

தேட்டம் தொடர்! பாட்டை வடி!

நாட்டமுடன் பல இதழ்கள் படி!

வாட்டம் தொலை! வாழ்வின் படி 

ஆட்டம் காணாது இறுகப் பிடி!

வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து

நல்ல பாக்கள் பல குவித்து

வல்லாங்கு அறிவில் திறன் கலந்து

வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

21-3-2015

pthivukal.com

*

வேறு.

தூரிகை
(1. சாரிகை – கவசம் .2. பேரிகை – முரசு .3. பூரிகை – ஊதுகுழல். 4. சேரிகை – ஊர். 5. தூரிகை – எழுதுகோல்.)

தூரிகையால் வண்ணச் சாயமிடும் ஓவியன்
காரிகையை, கவின் இயற்கையை கருவாக்குவான்.
தூரிகை எழுத்தாளன் படைக்கலம். சமுதாயச்
சாரிகையாகவும் சமயத்தில் சுழலும் கோல்.

பூரிகையாகவும் நீதிப் பேரிகை கொட்டும்.
தூரிகைத் தடமெழுத்தால், வண்ணத்தால் ஆழருத்தமுடையது.
சேரிகைக்கு வெகு ஆதாயமாகும் கருவி.
நாரிகையென் தூரிகை தமிழுக்காய் தமிழெழுதும்.
_____________________ .

2004994hc5fmx1bz5

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 23, 2015 @ 12:21:56

  You and Siva Jeya like this.

  Siva Jeya:-
  பயனுள்ளபடைப்பொன்று.
  23-3-2015

  Vetha Langathilakam:-
  மகிழ்வுடன் நன்றி சகோதரி.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மார்ச் 23, 2015 @ 14:48:31

  பா வரைந்து
  திளைத்திருங்கள்
  எக்காலமும்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 24, 2015 @ 01:37:55

  இறுகப் பிடித்து விட்டன வரிகள்…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. கோமதி அரசு
  மார்ச் 24, 2015 @ 02:01:44

  வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து

  நல்ல பாக்கள் பல குவித்து

  வல்லாங்கு அறிவில் திறன் கலந்து

  வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.//
  வாழ்த்துக்கள் அருமையான கவிதைக்கு.

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  மார்ச் 24, 2015 @ 04:04:43

  இந்தப் பாவரிகளைப் பலமுறை வாசிக்க பயிற்சி எடுத்தாலே போதும். முறையான லகர ளகர ழகர எழுத்துகளுக்கான உச்சரிப்புப் பயிற்சி கிடைத்துவிடும். அவ்வளவு அழகான நேர்த்தியான வரிகளாலும் கருத்தாலும் ஆக்கப்பட்ட கவிதை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 6. mageswari
  மார்ச் 25, 2015 @ 06:04:44

  ஆ வரைந்து மொழியறிந்த காலம் பூ வரைந்து ரசித்ததொரு காலம் அவை தானே இந்த வளர்ச்சியின் தொடக்கம், அருமை, வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 25, 2015 @ 10:50:55

  வெற்றியை அணைத்து வெல்ல வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 26, 2015 @ 17:42:44

  வணக்கம்

  பா வரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 17, 2015 @ 07:19:47

  You, இளம் பரிதியன், Puducherry Devamaindhan, Venkatasubramanian Sankaranarayanan and 27 others like this.
  1 share

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- ஆ வரைந்து மொழியறிந்த காலம் பூ வரைந்து ரசித்ததொரு காலம் பா வரைந்து திளைப்பதிக் காலம். ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம். ************ அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  March 23

  மணியின் பாக்கள் :–மிக அருமை
  March 23
  Rathy Mohan :- மனதை தொட்டுச் செல்லும் வரிகள் ..,
  March 23

  Nagalingham Gajendiran:- Kavithai Arumai !
  March 23
  Vetha Langathilakam :- அன்புடன் சகோதர சகோதரிகள் சிறீ – மணிகண்டன்
  ரதி – கஜன் மிகுந்த மகிழ்வு தங்கள் வரிகள் கண்டு.
  மனமார்ந்த நன்றி..
  March 23

  Pena Manoharan :- ஆகா அருமை இந்தச் சந்த நடை.நல்வாழ்த்துகள்.
  March 23

  Subajini Sriranjan :- அற்புதமான கவிதை…
  எழுது போல் தொடர பயிற்சியும் முயற்சியும் தேவை என்பதை அழகாக சொல்கிறது …..
  March 23

  Suriya Doss :- வாழ்த்துகள்
  March 23

  Ratha Mariyaratnam :- மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
  March 23

  Vetha Langathilakam :- Nanry Ratha…makilchchy….
  March 23

  Venkatasubramanian Sankaranarayanan :- அருமை
  March 24 2015

  Vetha Langathilakam ,@
  Venkatasubramanian Sankaranarayanan வலைக்கு வருவதை மறக்க வேண்டாம்.sir… Mikka nanry.

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 22, 2016 @ 08:24:17

  மீனாகுமாரி கண்ணதாசன் :- அருமை
  Unlike · Reply · 1 · 7 hrs 2016

  Vetha Langathilakam:- நன்றி சகோதரி கவிதை நாளுக்காகப் போட்டேன்.
  Like · Reply · 23-3-16

  மறுமொழி

 11. கோவை கவி
  நவ் 29, 2017 @ 20:27:53

  Pathivukal .com- published – 18-may 2015
  Vallamai.com published on https://www.vallamai.com/?p=55688 23-3-2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: