367. எங்கே போகிறது

atman_self_realization

எங்கே போகிறது

வாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!

உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!

(நடலை- அசைவு)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-3-2015

இதே மாதிரியில் எனது இன்னொரு ஆக்கம்.
இணைப்பு இதோ!….

https://kovaikkavi.wordpress.com/2012/04/04/36-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/

Navagraha_Set.296235533-640x300

Advertisements

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  மார்ச் 25, 2015 @ 23:39:07

  ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை என
  நன்றே உரைத்தீர்
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 26, 2015 @ 02:02:51

  சிந்தனை அருமை சகோதரி…

  மறுமொழி

 3. Killergee
  மார்ச் 26, 2015 @ 03:37:46

  வார்த்தைகள் விளையாடின அருமை.
  சகோ நலம்தானே ?

  மறுமொழி

 4. சசிகலா
  மார்ச் 26, 2015 @ 07:08:34

  ஆத்தம சாந்திக்காய் ஏந்தும் அமைதிப்படி… கருத்துள்ள ஆக்கம் தோழி.

  மறுமொழி

 5. Bagawanjee KA
  மார்ச் 26, 2015 @ 16:04:36

  போகுதுன்னுதான் தெரியுது ,எங்கே போகுதுன்னு தெரியலியே ..நான் என்ன செய்வேன் 🙂

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 26, 2015 @ 17:41:22

  வணக்கம்

  ஒவ்வொரு வரிகளும் கருத்து மிக்கவை பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  மார்ச் 27, 2015 @ 02:07:25

  உயிர் பிறந்தபின்னான ஆன்மாவின் நிலையை எண்ணிப் பரிதவிக்கும் வரிகள்… இதுதான் இன்னதுதான் என்று தெரியாத வரையில் தவிப்பிருப்பது தவிர்க்க இயலாததுதானே… மனம் கனக்கிறது தோழி.

  மறுமொழி

 8. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 27, 2015 @ 04:02:29

  மனதை கனமாக்கிய வரிகள்.

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 22, 2015 @ 12:26:55

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: