53. தாதான்மியக் காதலுரு…..

11075315_10205201894081371_1963618067_nதாதான்மியக் காதலுரு…..

தாஜ்மகால் காதலுக்கு என்ற

தாக்கமோ காதல் சிலை!

தலையாம் மலையுச்சியில் தவம்!

தாதான்மியக் காதல் உரு!

 

இயற்கையை ரசிக்கும் உள்ளம்

இணைவிழி இணை மனத்தோற்றம்

இதுவன்றோ காதல் என்ற

இன்னுயர் உதாரணக் கல்லுரு.

 

ஊனுயிராய் உலவிக் கலக்கும்

ஊன்றுகோல்! அன்பு ஊற்று!

உன்னதம்! காதல் இறைமை!

இத்தேடல் பிரபஞ்ச  மயக்கம்!

 

இவ்வாடல் உலக இயக்கம்!

காதலியல் ஒழுக்கம் தரும்

காதல் செய்யுங்கள் மனுகுல 

காந்தி! மாசு அறுக்கும்!

(தாதான்மியம் – ஒன்று பட்டிருக்கை)

https://www.vallamai.com/?p=55640

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்  

23.3.2015

இரண்டாவது வரிகள்-

உயில் விருந்து.

”…உலகத் தொல்லைகள் வேண்டாம் வா 

உச்சிமீதமர்ந்து காற்று ஊடாடாது இணைவோம்

உறைந்து போவோம் இன்பக் காதலில்

ஊர் சுற்றுவோர் கண்களிற்கு விருந்தாவோம்…”

உயில் எழுதி பணமும் வைத்த

உல்லாசப் பயண மலையேறும் சோடியின்

உருவச் சிலையிது உருவாக்கியவர் வாழ்க!

உவப்பான அற்புதச் சிற்ப விருந்து!

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

24-3-2015

பாராட்டுப் பெற்ற வரிகள் காண இணைப்பு….இதோ!…

http://www.vallamai.com/?p=55903

Center-Divider

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. KILLERGEE Devakottai
  மார்ச் 30, 2015 @ 13:58:59

  அருமை சகோ படத்தில் உள்ள சிற்பத்திற்கு ஏற்ற வரிகள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 31, 2015 @ 01:43:30

  அருமை… அருமை…

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 31, 2015 @ 07:39:07

  தாதாமின்யம் என்ற சொல்லையும், அதற்கான பொருளையும் தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 31, 2015 @ 08:42:29

  வணக்கம்
  சிலைக்கெற்ற வரிகள் சில்லரையாக சிதறிக்கிடக்கிறது அற்புத வரிகள் கண்டு மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 17, 2015 @ 11:09:42

  அன்புச் சகோதரா Rupan தங்கள் வரிகளால் மகிழ்ந்தேன்.
  அன்புடை நன்றி உரியதாகுக.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 30, 2018 @ 13:05:52

  Gokulaa:- இவ்வாடல் உலக இயக்கம்…உண்மை…

  Vetha Langathilakam :- நன்றியுடன் மகிழ்ச்சி கண்ணன் சதாசிவம்.

  Subajini Sriranjan :- அருமையான வரிகள்…
  வாழ்த்துக்கள்….
  2015
  Vetha Langathilakam :- நன்றியுடன் மகிழ்ச்சி..Suba..
  2015
  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.
  2015
  Vetha Langathilakam :- நன்றியுடன் மகிழ்ச்சி.Dear…Alvit.V.V.

  சி வா :- மிக அருமை வேதாம்மா..

  (இச் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகத் தெரிகிறது.. அப்படியா அம்மா.., எங்குள்ளது எனத் தெரிந்தால் கூறுங்கள்.. கூகில் செய்து அலசுகிறேன்.. சிந்தையைப் பற்றிக் கொண்டது.. )

  Vetha Langathilakam:- Siva…தமிழக – கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் – குறத்தி சிலை

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 30, 2018 @ 13:07:47

  சி வா :- அட பாருங்களேன்.. எங்க ஊருல இருக்குறது எனக்கு தெரியாம இருந்திருக்கு.. ஹி ஹி ஹி.. நெக்ஸ்ட் டிரிப்பு அங்கதெ.. ஐ.. ஜாலி..

  (மிக்க நன்றி வேதாம்மா..)

  Vetha Langathilakam :- வல்லமையில் பல கவிதைகள் இச்சிலைக்கு உண்டு.

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :- வாழ்த்துகள் சகோதரி, உங்கள் கவிதைகளை ரசித்தேன். அருமை!
  2015
  Eugin Bruce :- வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: