364. புயலாய்ப் படுத்தும் புகழ்

15712088-v-italic-letter-with-diamonds-ll

புயலாய்ப்  படுத்தும் புகழ்

இயலாமை நிலையாயினும் புகழ் மயக்க
அயல் ஈர்ப்பு காந்தமே

அடுத்தவன் புகழடைதலைத் தாங்காத மனதைத்
தடு! பகுத்தறிவைப் புகுத்து!

எத்தனை பதவி வகித்துமென்ன! மனித
சத்தினைக் குறைக்கும் புகழாசை.

மனதைப் புயலாய் ஆட்டும் புகழ்
கனதித் தலைக்கனம் தரும்.

புகழால் பலர் பெறும் பரிசு
இகழ்வான தலைக்கனம் தான்

வயலாம் மனதில் விளையும் கட்டுப்பாடு
புயலாகாது புகழைக் காக்கும்.

கட்டுங்கள்! மனதைக் கட்டுங்கள்! நிச்சயம்
எட்டுவீர்கள் உயர் நிலை.

வரிகளாக்கம்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4 -3 – 2015

Center-Divider

363. 1. உறவுத் தடை 2.இழப்பு

29-1390990603-kallanai

உறவுத் தடை

பணத்தாள்களும் உறவு மனங்களை மனதார

இணங்கி நெருங்க விடாது.

 

உறவுகளைத் தானறியாது பிரிப்பவன்  உணரான்

துறவு மனிதனை நெருங்குவதை.

 

உறவு உறையில் துளை விழுந்தால்

இறங்கும் பாசச் சில்லறைகள்.

 

பணமிருக்கும் வரையே பணக்கர்வம்,  மாறாக

குணக்கர்வம் இறக்கும் வரை.

 

திருமணம் கூட மதில்களாகும் உறவுகளின்

ஒரு மனமாகும் நெருக்கத்தில்

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2-3-2015

flowers2

இழப்பு

இழப்பு இழப்புத் தான்!

குழப்பி மனிதனைக் கலக்கும்.

உழப்புக் (வருத்தம்) குறைய, மனோதிடம்

இழக்காது உழத்தல் (வெல்லுதல்)அமலம் (மாசற்றது).

இழப்பு பொருளானால் ஈட்டலாம்.

இழப்பு உயிரானால் வழியேது!

இழப்பாளியின் பலவீனம் தோல்வி.

எழல் எழிலான புரவி.

 

 

சிலரது பகிரங்கப் புலம்பல்

சிலரது ஊமைப் பல்லவி.

தோகை விரிக்கும் மனோதிடம்

வாகை மலராடை போர்த்தும்.

பரிவுச் சிறகணைப்பு இதமது

விரிக்கும் நம்பிக்கை மழை.

தரிக்கும் சிந்தனைச் சறுக்கல்

சிரிப்பை அற்ற (வற்றிய) குளமாக்கும்.

 

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-2-2015

gate line

Next Newer Entries