3. வாழ்த்தும் விழா

vila may 2

பெண் படைப்பாளி வேதா இலங்காதிலகத்திற்கு பாராட்டு விழா

April 24, 2015

டென்மார்க்கில் வாழும் பிரபல பெண் கவிஞர், எழுத்தாளர் என்று பன்முக ஆற்றல் கொண்ட திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு ஓகூஸ் நகரத்தில் ஒரு பாராட்டுவிழா எதிர்வரும் 02.05.2015 சனிக்கிழமையன்று பகல் 14.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல் 

என்று நிகழ்ச்சிக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அலைகள் ஆசிரியர் அவர் தம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.

http://www.alaikal.com/news/?p=167314

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-a

anthimaalai vilamparam

கலைஞருக்கு மரியாதை

அன்புறவுகளே வணக்கம்.
நீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான   கவிதாயினி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும்  நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். “திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி” என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

“ஒன்றுபட்டு உயர்வோம்”

மிக்க அன்புடன்

 இ.சொ.லிங்கதாசன்  ஆசிரியர்   அந்திமாலை 

Vetha:-   ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.

http://anthimaalai.blogspot.dk/

9931287-page-rule-assortment-v

373. காத்திருப்பேன் காலத்திற்காய்!

11180014_822542801133254_1503319428_n

வல்லமை – இணைய இதழின் இவ்வாரக் கவிஞராக என்னைத் தேர்வு செய்துள்ளனர்..

அண்டைபூமியான ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் உயிரோடு கொள்ளிவைக்கப்பட்ட நம் தமிழ்ச்சோதரர்களின் குடும்பத்தில் ஒருவனாக இச்சிறுவனை இனங்கண்டு, இவ்வினப்படுகொலையால் சுற்றத்தை இழந்து சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்பட்ட இவனுடைய கண்ணீர்க் கதையைக் கவிதையாய் வடித்துள்ள

 திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் ‘காத்திருப்பேன் காலத்திற்காய்’ எனும் கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது கண்ணீர் சிந்தவும் வைத்தது.அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.    http://www.vallamai.com/?p=56845&cpage=1#comment-12592

படக்கவிதைப் போட்டி (9)

அக்கவிதை…

காத்திருப்பேன் காலத்திற்காய்!

வண்ணம் பூசி வரைந்து பல

 எண்ணக் கனவுகளோடு வாழ்ந்தோம் அன்று

 கண்ணிறைந்த வாழ்வு சிதறி இன்று

 உண்ண உணவிற்கே திண்டாடும் நிலை

 உதட்டில் மட்டும் காயம் எம்

 உயிர் தப்பியது அபூர்வம்! ஒரு

 ஊர்க் கோடியில் கோணித் திரையுள்

 அகதி வாழ்வு இது கொடுமை!

கூனிக் குறுகி ஒடுங்கிய வாழ்வு!

 ஏனிந்த நிலையிது நீதியே இல்லை!

 காரணகர்த்தாக்களை உருத் தெரியாது அழிக்க

 கருவெடுக்கிறது கொலை வெறி நெஞ்சில்.

 அகதி நான் எனது நாட்டிலேயே!

 தகுதியற்ற நிலையிது காத்திருப்பேன் காலத்திற்காய்.

 காட்சிப் பொருளாக நாமின்று படத்தில்.

 ஆட்சி, அரண்மனைக்கு அடிபடுகிறாரின்று பலர்!

https://www.vallamai.com/?p=56845

 

*****

எல்லோரும் வேறு விதமாக எழுதினர்அதற்காக இன்னொரு வரியும் எழுதினேன்.அதையும் பாருங்கள்.

சீரோடுயருவேனொரு நாள்!

மூளை வளர்ச்சி முடிவுறும் காலத்தில்

மூதுரை படிக்கும் மூதறிவாளரும் அதிர

மூர்க்கமாய் குத்தும் வாழ்வின் முரண்பாடு

மூழ்கிடேன்! விடாது முயல்வேன்! முயல்வேன்!

என்னைப் போல் எத்தனையாயிரம் சிறுவர்

சின்னா பின்னமாகும் வாழ்வுடன் சீரழிகிறார்

சீர்தூக்க வராது எம்மைப் புகைப்படமா!

சீவிதத்தில் சீரோடு உயருவேன் பாருங்கள்!

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

24-4-2015

vector_146.cdr

2. வாழ்த்தும் விழா.

No automatic alt text available.

பொன்னண்ணா எழுதிய ஓகுஸ் ஒன்றிய வாழ்த்து
சட்டம் (பிறேம் ) இட்டதும்.

Image may contain: 1 person

*

883648_517523281622481_709359396_o

பாராட்டு விழாவின் தொடர்பில்  இலங்கைத் தமிழ் பெண்மணியும் யெர்மனி சோலிங்கன் நகரில் வசிப்பவரும் தமிழ் சிறப்புக் கலைமாமணியும், கவிஞரும், கதாசிரியருமான தோழி கௌரி சிவபாலன் தனது இணைய வலைத்தளத்தில் ஓகுஸ் தமிழ் மன்றத்தின் பெரிய செயல் குறித்துப் பாராட்டி  எழுதியதை இங்கு பகிர்கிறேன். அவர் 3 விடயங்களைக் குறிப்பிடுகிறார். இணைப்பை அழுத்தி வாசியுங்கள். அவருக்கு மனமார்ந்த நன்றியும் இறையாசியும் கிடைக்கட்டும்.

http://www.gowsy.com/2015/04/blog-post_25.html

 02.05.2015 ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழா

கோவைக்கவி வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு ஓகுஸ் நற் பணிமன்றம் பாராட்டுவிழா ஒன்றினை நடத்துகின்றது.

  வேதா இலங்காத்திலகம் அவர்கள் எழுத்துடன் ஒன்றிப்போனவர். அவர் எழுதாத நாள் இல்லை என்றே கூறிவிடலாம். இதை இணைய உலகம் அறியாமல் இல்லை. தனக்கென ஒரு இணையத்தளம் அமைத்து தம் எண்ணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். நூல்கள் பல வெளியிட்டதுடன், பல இணையத் தளங்களுக்கு தன் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார். இவர் காணும் பொருளெல்லாம் இவர் கவிதைக்குப் பொருளாகும்.

          வாழும்போதே வாழ்த்தும் பண்புள்ள ஓகுஸ் டென்மார்க் நற்பணிமன்றம், தமிழோடு வாழும் இவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்து இன்றைய நாள் விழா எடுக்கிறது. பண்பட்ட தமிழுடன் படைப்புக்களைப் படைக்கும் வேதா இலங்காத்திலகம் அவர்கள் மேலும் மேலும் பல படைப்புக்களைத் தந்து புகழ் உச்சத்தை அடைய வேண்டும் என அவரை மனதார வாழ்த்துகின்றேன்.

Balloon Border-b

_DdpvP3a_400x400

அடுத்து இலங்கையிலிருந்து  பிரபுவின் எனும் பெயரில் இயைணத்தளம் வைத்திருக்கும் என் நெடுங்கால கருத்தாளர் பிரபு வரதராஜன் எனது பாராட்டுவிழா வலை ஆக்கத்தை மறு ஆக்கமாக தனது வலையில் இட்டுள்ளார். அதன் இணைப்பையும் இங்கு தருகிறேன்.

https://prabuwin.wordpress.com/2015/04/25/1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/

 

அவருக்கும் மனமார்ந்த நன்றியும் கூறி, இறையாசியும் கிடைக்க வேண்டுகிறேன்.

இவர்களின் செயற்பாட்டின் மகிழ்வையும் இங்கு பதிகிறேன். நன்றி…நன்றி..

ஓகுஸ் தமிழ் மன்றம் சார்பிலும் இந்த நன்றியைக் கூறுகிறேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-4-2015

9gwqyfjpg3

1. வாழ்த்தும் விழா.

Aarhua tamizhar
அனைவருக்கும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம்
மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகுஸ் நகரத்தில் வசிக்கும்; திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் அன்று இவரை வாழ்த்த விரும்புபர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஓகுஸ் தமிழர் ஒன்றியம்.
10959858_791476714262399_3683408168867256473_o

நிகழ்ச்சி நிரல்

11175021_1055739624440968_8630856481917398359_n
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
24-4-2015
largelatesummer

d

பா வானதி வேதா. இலங்காதிலகம். அவர்கள் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல் நல்ல ஆற்றல் உள்ள சிறந்த கலைஞரும் கூட இவருக்கான கௌரவிப்பு அறிந்ததும் மிகமகிழ்ச்சியாக உள்ளது எமது கலைஞர்களுக்கு சிறப்பு தரக்கூடிய இந்த சிந்தனைக்கு உரியவர்களுக்கு வாழ்த்துக்களுடன் தொடர்வோம் 36. ஓகுஸ் நகரத்து ஒன்றியம் இந்த அறிவிப்வை விடுத்துள்ளது படைப்பாளிகள் என்பது,

கடவுள்ளுக்குசமம் அவன் ஒவ்வெரு படைப்பின்போதும் தனக்குள் இருக்கும் ஆதங்கங்களை மட்டுமல்ல, சமுதாய சீர்கேட்டை மட்டுமல்ல, பல்விதநோக்கில் சிந்தித்தே தன் படைப்பை வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது அது பா வானதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கும் பொருந்தும்,

புலம் பெயந்துவந்து இங்கே வாழ்கிறோம் எமக்கு எதர்கு மொழி..? எமக்கு எதற்கு கவிதை…? கதை என்று எல்லேரும் இருந்துவிட்டால் இன்று இவர்போன்று சிறப்புள்ள கவிஞர்களை எமது சமுதாயம் இழந்திருக்கும் இவர் மொழிப்பற்றும்
எழுத்துத்துறை ஆற்றலும் இன்று இவரை கௌரவிக்கும் அளவுக்கு இவர் வளர்ச்சி இவர் பணி தொடரவும் இதுபோன்ற பல பாராட்டுக்கள் இவருக்குக்கிடைக்கவும் எஸ்.ரி.எஸ்.இணையம் சிறுப்பிட்‌டி இணையம் ஆனைக்கோட்டைஇணையம் தமிழ் எம் ரிவி இணையம் எஸ்.ரி.எஸ்.கலையகம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இணைந்து வாழ்த்தி நிற்கின்றனர்

Pune thamil   sanga vaalththum…தனது வாழ்த்தை இவர்களுடன் சேர்ந்து வாழ்த்தி நிற்கிறது.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

61. குதிரைச் சவாரி..

unnamed (1)

குதிரைச் சவாரி..

கம்பீர நடை, பெருமித நடை
குதிரை நடை பரி நடை.
குதிரைச் சக்தி கால்களில் உண்டு.
குதிரைச் சக்தி இயந்திர சக்தியாம்.
அசுர வேகத்தில் தாவியோடும் சுறுசுறுப்பு
அழகு மினுமினுப்பு ஜாதிக் குதிரை.
அழகிய பிடரி முடி, சண்டித்தனம்.
அரச வாழ்வோடிணைந்தது பரி படை.

குதிரைப் பந்தயம் பண ஈட்டமிழப்பு
குதிரையேற்றம் 64 கலைகளுள் ஒன்று.
கொள்ளு புல்லுணவு துள்ளிக் குதிக்கும்.
வெள்ளை, கறுப்பு, சாம்பல் சிவப்பெனப்பல
ஒலிம்பிக் விளையாட்டிலும் குதிரைப் பங்குண்டு
நின்றபடி தூங்கும் வீட்டு விலங்கின்
நீள உடலில் ஏறியமர்ந்து பழகும்
நாட்டுப்புற வாழ்வுடைய எம் மகள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-4-2015

gallophorsepagedivider_jpg300

372. ஈரம்

eeyanna

ஈரம்

ஈரமுடை(அன்புடை) பெற்றோர் ஈரம் (கரும்பு).

ஈரம் (அறிவு) தநதார் நன்றி..

ஈரம் (அருள்)பொழிந்தார் இறைவன்.

ஈரமானது(குளிர்ச்சி)இவைகளால் மனம். 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

17-4-15 

11134356_815628041824730_874016360_n

தேரில் சுவாமி தெரியவில்லை
தோளில் சுமந்து காட்டிய
தேவன் என்னப்பா அன்று.
இந்தக் குழந்தைக்கு இவர்
எதைக் காட்டுகிறார் இங்கு!
கால்கள் களைத்ததால் குழந்தை
கழுத்தைக் கட்டி ரசிக்கிறதோ!

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-4-2015

ஆணவம்.

அன்பு பொங்க அணைத்து
அகம் நிறையும் உறவிற்காய்
அணியணியாகப் புள்ளிகள் இட்டு
அழகுக் கோலமாய் விரித்து
அன்பில் நனைத்தும் அவைகள்
அதிசயமாகவில்லை உன் ஆணவத்தால்.

18-4-2015.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

9931287-page-rule-assortment-v

18. வெற்றிச் செல்லம்

mine8 142

வெற்றிச் செல்லம்

எங்கள் நெஞ்சின் இன்ப ஓவியம்

எங்கள் வாழ்வின் தேன் துளி

பொங்கும் இன்பத் தென்றல் நிலவு

எங்கள் மூன்றாம் அகவைப் பேரன்.

அள்ளிச் சொரிகிறான் மழலை மொழியை

வெள்ளி நட்சத்திரங்களாய் புதிது புதிதாக

கொள்ளை ஆர்வமாய் தமிழ் குதித்தாடுகிறது.

உள்ளம் இனிக்கிறது வெற்றிச் செல்லத்தால்.

வெளியே உலாவக் கொள்ளை மகிழ்வு

களிப்பான கேள்வி எங்கு போகலாம்!

துளிர்க்கும் அறிவு, கலை உணர்வு

தெளிவான ஆவல் நிறைந்து வளர்க!

தமிழ் டெனிஸ் ஆங்கிலத்தில் சமமாய்

அமிழ்ந்தாடுகிறர். அவரைக் காண நீந்தும் 

ஆனந்தக் குமிழ்கள் எமைச் சுற்றிச் 

சுழல்கிறது. வெற்றி வாழ்க பல்லாண்டு!

பா ஆக்கம் பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

16-4-2015

aeroplane-papers-1

371. வயல்

k18

வயல்

பாடசாலை செல்லும் வழி

பாதையோர வயலில் புல்லு

பாலர்கள் விளையாடுமொரு காலம்.

பார்த்தால் ஏர் பூட்டுவார்

மழை வந்து சேறாகும்

நெல் விதை தூவுவார்.

குருவிகளிற்கும் தாராள உணவு.

நல் முளையாக வளரும்.

வளர்ந்து பயிராகப் பெண்கள்

களை பிடுங்குவார்கள் காலத்தில்

கதிர் வெளியாகும், அப்பா

கதிர் நெல்லு வெட்டுவார்.

 

இறப்பில் கட்டுவார், காயும்.

கதிரறுத்துச் சூடு மிதித்து

நெல் வீடு வரும்.

விதை நெல் பெட்டகத்துள்.

 

பாதுகாக்கப் படும் நெல்மூட்டைகள்

வருடம் முழுக்க உணவாகும்.

இறப்பில் காய்ந்த கதிர்நெல்

தைப் பொங்கலிற்கு அரிசியாகும்.

தைப்பொங்கல் சூரியனிற்கு நன்றி

கைமேற் பலனான என்

பாலவயதுக் காட்சியிது அப்பா

வயற்காணிகளால் தன்னைக் கமக்காரனென்பார்.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-4-2015.

(இறப்பு – வீட்டுக்கூரையின் சிலாகை.    இறப்பும் சிலாகையும் அகராதியில் தேடினேன் ஒரு வேளை இது நாட்டுப்புறச் சொல்லாகவும் இருக்கலாம்)

Nyt billede

370. மன்மத புத்தாண்டு 2015

101-b

மன்மத  புத்தாண்டு 2015

மணிக்கூடு ஓட நாட்கள் நகருகிறது.
மாதங்கள் உருள வருடம் வளர்கிறது.
வருத்தம் இன்பம் வண்ணம் போல
வருடம் வட்டமாகப் புதிதாகப் பிறக்கிறது.
சுற்றி வந்த புது ஆண்டை
பற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.
இற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்
இற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.

அழகிய இதயக் கிண்ணம் நிறையவும்
அதிகார எண்ணம் ஆணவக் கருத்தை
அலசிக் கவிழ்த்து அன்பு நிறைப்போம்.
அகிலம் நமக்கு அணைக்கட்டும் வெற்றியை.
ஆளும் மனதின் மலங்கள் அழித்து
ஆழ் குழிகள் தவிர்த்து நடந்து
சூழும் அன்பை வெறும் அலங்காரமாக்காது
வாழும் நாளை வளமாக்க இணைப்போம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-4-2015

****

மன்மத வருடம்  (Anthi maalaikku)

*

மன்மத வருடம் மன்னுயிர் மகிழ்வை
இன்னலின்றித் தரட்டும் இதமாகத் தரட்டும்.
புன்னகை முற்றுப் புள்ளியின்றித் தொடரட்டும்
கன்னலாக சமாதான நதி ஓடட்டும்.
நேசப் பார்வைகள் நெருங்கி அணைக்க
பாசப் பரிவுகள் தலை நிமிர்த்தட்டும்.
வாசத் தமிழின் வசீகரம் உயரட்டும்.
தேச மக்கள் தலைநிமிர்ந்து வாழட்டும்.
வீசிடும் அன்புத் தென்றலில் சகல
நாச மனங்களும் நலிந்தே போகட்டும்
கூசிக் கனியட்டும் தம் செயலால்
ஆசி தரட்டும் இட்ட தெய்வங்கள்.
வருடா வருடம் வேண்டும் பலன்கள்
வஞ்சக மின்றித் தரட்டும் இறைவன்.
வளமும் நலமும் பல்கிப் பெருகி
வாழட்டும் உலக மக்கள் செழிப்பாக.
பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-4-2015
*
*

thiri

1. நூல் முன்னுரை.

munnu - ajg

sitharal - addai

சுவிற்சலாந்தில் வாழ்ந்த சமீபத்தில் இலண்டனிற்கு இடம் பெயர்ந்த அன்பு நண்பர் – எழுத்தாளர்- செய்தியாளர் – தமிழ் ஆறு இணையவாளர் – கவிஞர் என்று பல உருக் கொண்ட ஏ.ஜே.ஞானேந்திரனின் ” சிதறல்கள் ” நூலின் முன்னுரை.

div138

வாழ்த்தும் அன்பு வார்த்தைகளுடன்

” நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதி ”
– அறிவுடையார் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்றது” என்கிறார் கடுகைத் துளைத்து எழுகடலான கருத்தை குறுகத் தறித்த குறளில் புகுத்தியவர் திருவள்ளுவர்;.
நட்பிற்குரியவர், நாம் ஏஜேஜி என்று அழைக்கும் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன், அதுவும் அறிவுடையார் நட்பு.
பாசல் சுவிஸ்ல் வாழும் இலங்கைத்தமிழர் இவர் அங்கு தமிழ் ஆசிரியர். இன்னும், எழுத்தாளர், செய்தியாளர், கவிஞர் எனும் பல பாத்திரங்களுக்கு உரியவர்
பல வருடங்களின் முன்பு இலண்டன் ரைம்ஸ் வானொலியில் உருளும் உலகு தலைப்பில் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன் செய்திகள், தகவல்கள் தொகுத்துத் தந்தார். சிந்தனைக் கருத்துகள், கருத்துத் தொகுப்புகள், நேயர் கடிதம் என்று கலந்து கொண்ட போது குரல் வழியாகவும் அறிமுகமானார்.
ஒரு தடவை டென்மார்க்கிற்கு வருகை தந்த போது இவரை நேரில் எங்கள் வீட்டில் சந்திக்கும் வசதியும் கிடைத்தது.
நான் பாமினி எழுத்துருவில் தமிழை எழுதி வந்தேன். நான் கேட்ட போது யூனிக்கோட்டில் அதை மாற்றக் காட்டித் தந்தவர். மெதுவாகச் சென்ற என் எழுத்துப் பயணம் அன்றிலிருந்து தங:கு தடையின்றிப் பாய்கிறது.
ஆகையால் இவர் மறக்க முடியாதவர், என் தமிழோடு பிணைந்தவர் என்பதை நன்றியுடன் நினைக்கிறேன்.
இன்று இவர் ” சிதறல்கள்” நூல் உருவாக்குவது மிக மகிழ்வு தருகிறது. வேறு இணையம் வைத்திருந்தாலும் தமிழ்6 இணையம் மூலம் கடந்த இரு வருடங்களாக பலரை மகிழ்வித்து வருபவர்.
முத்துக்களாகத் தகவல் சிதறல்கள் தமிழ் ஆற்றில் (ஆறில்) உருளும் உலகில் தெரிந்ததும் தெரியாததும் என்று உண்டா? தமிழ் ஆறில் நீந்தி தீர்வு காணக் கூடியதாக இருந்தது.
கவலையே படாமல் சிரி சிரியென்று சிரிக்கவும் கட்டுரைக் குறிப்புகள் தந்தார். உதாரணமாகப் பாழாகிவிட்ட முகம் என்பதை சமீபத்தில் படித்துச் சிரித்தேன். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் அல்லவா!
பணச் செலவு, உடற் சிரமமின்றிப் பயணங்களின் கதைகளையும் தொகுத்துத் தந்தார். பயணம் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது.
போர்த்துக்கல், இலங்கைப் பயணங்களையும் படித்துள்ளேன். ஆர்வம் தருவதாகவும் இது எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.
மரக்கறிகள் தானியங்கள், நோய்கள் என்பவை பற்றியும் ஆர்வமாக வாசித்துள்ளேன்.
இவர் தொடாத தலைப்புகள் இல்லையெனலாம்.
பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மீகம், அதிசயத் தகவல்கள், சினிமா, இயற்கை போன்ற பல தலைப்புகளில் எழுதித் தன் திறமையை வெளிக் கொண்டு வருகிறார். இவைகளிற்கு ஏற்ற படங்களையும் தேர்ந்தெடுக்கிறார்! அருமை! இது மக்களை மிகவும் ஈர்க்கிறது.
உதாரணமாக நிறங்கள் பற்றி ஆச்சரியம் நிறைந்து இவர் எழுதிய தகவலில் நான் குறிப்புகள் எடுத்து வைத்திருந்து, சிவப்பு தலைப்பில் கவிதை எழுதும் போது அதையும் சிறிது பாவித்தேன்.
ஓடிவிளையாடு பாப்பாவிலிருந்து பெரியவர்கள் வரை பயன் பெறும் தளமாக தமிழ்6 ஓடியதை சிதறல்களாகத் தொகுப்பது அருமையான சிந்தனை விரிவு தான்.
இந்த நூல் மக்களிடம் பரவிப் பெருமை பெறட்டும். தங்கள் முயற்சி இனிது நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்தையும் கூறுகிறேன்.
இது போன்று பல நூல்கள் விரியட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்
வேதா. இலங்காதிலகம்
(ஓய்வு பெற்ற பெட்டகோ)
டென்மார்க்
4.6.2014.
இணையம்:- வேதாவின் வலை.

Previous Older Entries