32. ஈழம்

ceylon1601

ஈண்டுள்ளது அகராதியில் இலங்கை

ஈழநாடு, ஈழமண்டலம் என்றாக.

ஈழம் என்பது புதிதல்ல!

ஆழம் கொண்ட உணர்வல்லோ!

ஆதியில் வழங்கிய பெயரல்லோ!

மோதி அல்லாடுகிறோம் இன்று.

அசைக்க முடியாத நம்பிக்கையின்

விசையில் பலர் இயங்குகிறார்.

ஈந்தது பல்லுயிர் பலிகளும்

ஈடில்லா இழப்புகளும் ஏராளம்.

ஈரவிழி காயாதோர் பலர்.

ஈடாட்டம் காணும் போராட்டங்களும்

ஈர்த்திடும் போராட்டங்களும் ஓயவில்லை.

ஈசுவர சித்தம் எதுவோ

!ஈட்டுப் பத்திரமாய் மக்கள் 

ஈடழிதல் மாற வேண்டும்

 

 

திசையறியா முடிவறியும் பயணமிது.

இசைவோடு ஈழமாகுமா கேள்வியது

ஈழம் இல்லை என்றும்

ஈயோம் என்று எதிரணியாரும்

ஈப்பிணியாய்க் காதிலூற்றுகிறார் ஈயம்.

ஈரப்பாடு இல்லா இடத்தில்

ஈழம் அமைவது கேள்வியாய்

ஈழம் சொல்லாகுமா செயலாகுமா!

 

பா ஆக்கம்

வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ்.

7-3-2015

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-a

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  ஏப் 01, 2015 @ 23:44:18

  ஈரேழு தீவுகளைக் கொண்ட நாடென்பதால்
  ஈழம் என்று பெயரமைந்ததாக வரலாறு!

  “ஈந்தது பல்லுயிர் பலிகளும்
  ஈடில்லா இழப்புகளும் ஏராளம்.
  ஈரவிழி காயாதோர் பலர்.” என்ற உண்மையை
  எவரும் மறுக்க இயலாதே!

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஏப் 02, 2015 @ 01:48:12

  கவலை வேண்டாம் சகோதரியாரே
  காலம் மாறும்
  கவலைகள் எல்லாம் தீரும்

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 02, 2015 @ 02:04:36

  வணக்கம்
  உண்மைதான்
  ஈழநாடு, ஈழமண்டலம் என்றாக.
  ஈழம் என்பது புதிதல்ல

  இறுதியில் சொல்லியதற்கு காலம் பதில் சொல்லும்…. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 02, 2015 @ 02:57:52

  ஈரப்பாடு விரைவில் உண்டாகும்… உண்டாக வேண்டும்…

  மறுமொழி

 5. Killergee
  ஏப் 02, 2015 @ 03:50:35

  மாற்றம் வரும் சகோ காத்திருப்போம்.

  மறுமொழி

 6. T.N.MURALIDHARAN
  ஏப் 02, 2015 @ 11:33:24

  காலம்தான் பதில் சொல்லவேண்டும் . நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

  மறுமொழி

 7. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 02, 2015 @ 13:40:18

  நல்லதையே எதிர்பார்ப்போம், நடக்கும்.

  மறுமொழி

 8. உடுவிலான்
  ஏப் 04, 2015 @ 22:55:33

  நீங்களும் யாழ்பாணமோ? மேலே உள்ள இலங்கைபடம் உங்களுக்கே இது அதிகமாக பேராசையாக தெரிய இல்லையா!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 05, 2015 @ 08:11:49

   மிக்க நன்றி சகோதரா உடுவிலான்.
   இப்படியெல்லாம் கேள்வி வருமென்று தெரியும்.
   பழைய ஈழம் என்ற பெயரை எடுத்துக் காட்ட
   அந்தக் காலத்தில் 1601 ஆண்டுடன் உள்ள
   படமாகப் போட்டுள்ளேன்.(அன்று இருந்த பிரிவு)
   இது தங்கள் கண்ணில் படவில்லையா?
   இது ஆவணப் படம். நான் உருவாக்கியது அல்ல.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: