370. மன்மத புத்தாண்டு 2015

101-b

மன்மத  புத்தாண்டு 2015

மணிக்கூடு ஓட நாட்கள் நகருகிறது.
மாதங்கள் உருள வருடம் வளர்கிறது.
வருத்தம் இன்பம் வண்ணம் போல
வருடம் வட்டமாகப் புதிதாகப் பிறக்கிறது.
சுற்றி வந்த புது ஆண்டை
பற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.
இற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்
இற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.

அழகிய இதயக் கிண்ணம் நிறையவும்
அதிகார எண்ணம் ஆணவக் கருத்தை
அலசிக் கவிழ்த்து அன்பு நிறைப்போம்.
அகிலம் நமக்கு அணைக்கட்டும் வெற்றியை.
ஆளும் மனதின் மலங்கள் அழித்து
ஆழ் குழிகள் தவிர்த்து நடந்து
சூழும் அன்பை வெறும் அலங்காரமாக்காது
வாழும் நாளை வளமாக்க இணைப்போம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-4-2015

****

மன்மத வருடம்  (Anthi maalaikku)

*

மன்மத வருடம் மன்னுயிர் மகிழ்வை
இன்னலின்றித் தரட்டும் இதமாகத் தரட்டும்.
புன்னகை முற்றுப் புள்ளியின்றித் தொடரட்டும்
கன்னலாக சமாதான நதி ஓடட்டும்.
நேசப் பார்வைகள் நெருங்கி அணைக்க
பாசப் பரிவுகள் தலை நிமிர்த்தட்டும்.
வாசத் தமிழின் வசீகரம் உயரட்டும்.
தேச மக்கள் தலைநிமிர்ந்து வாழட்டும்.
வீசிடும் அன்புத் தென்றலில் சகல
நாச மனங்களும் நலிந்தே போகட்டும்
கூசிக் கனியட்டும் தம் செயலால்
ஆசி தரட்டும் இட்ட தெய்வங்கள்.
வருடா வருடம் வேண்டும் பலன்கள்
வஞ்சக மின்றித் தரட்டும் இறைவன்.
வளமும் நலமும் பல்கிப் பெருகி
வாழட்டும் உலக மக்கள் செழிப்பாக.
பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-4-2015
*
*

thiri

Advertisements

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  ஏப் 13, 2015 @ 23:05:31

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:33:46

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

 2. karanthaijayakumar
  ஏப் 14, 2015 @ 01:18:56

  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 14, 2015 @ 01:33:02

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:43:52

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

 4. Killergee
  ஏப் 14, 2015 @ 03:40:00

  அருமையான வாழ்த்துப்”பா”
  இனிய தமிழ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. Vasantha Vivek
  ஏப் 14, 2015 @ 08:46:34

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மேடம் … 🙂 🙂 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:44:50

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

 6. தி.தமிழ் இளங்கோ
  ஏப் 14, 2015 @ 09:28:08

  சகோதரி அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:45:08

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

 7. Velavan Athavan
  ஏப் 14, 2015 @ 17:25:15

  இற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்
  இற்று வீழட்டும் இனிமை நிறையட்டும், பற்றி ஏறுவோம் வெற்றிக்காய் – மன்மத ஆண்டின் வரவில் மதிவளர்கவி உங்கள் கவி தந்த உயர்வு நன்று…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:45:25

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

 8. Kowsy
  ஏப் 14, 2015 @ 19:35:40

  வாழும் நாளை வளமாக்க உளங்கொண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:45:46

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

 9. Arrow Sankar
  ஏப் 15, 2015 @ 03:57:06

  இன்பமாய்,இனிமையாய் உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 11:46:05

   தங்கள் அன்பு வரிகளிற்கு (வாழ்த்திற்கு) மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.
   மிக பிந்தி பதில் எழுதுகிறேன்.
   அதனால் திரும்பப் புத்தாண்டு வாழ்த்தவில்லை to all of you.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: