371. வயல்

k18

வயல்

பாடசாலை செல்லும் வழி

பாதையோர வயலில் புல்லு

பாலர்கள் விளையாடுமொரு காலம்.

பார்த்தால் ஏர் பூட்டுவார்

மழை வந்து சேறாகும்

நெல் விதை தூவுவார்.

குருவிகளிற்கும் தாராள உணவு.

நல் முளையாக வளரும்.

வளர்ந்து பயிராகப் பெண்கள்

களை பிடுங்குவார்கள் காலத்தில்

கதிர் வெளியாகும், அப்பா

கதிர் நெல்லு வெட்டுவார்.

 

இறப்பில் கட்டுவார், காயும்.

கதிரறுத்துச் சூடு மிதித்து

நெல் வீடு வரும்.

விதை நெல் பெட்டகத்துள்.

 

பாதுகாக்கப் படும் நெல்மூட்டைகள்

வருடம் முழுக்க உணவாகும்.

இறப்பில் காய்ந்த கதிர்நெல்

தைப் பொங்கலிற்கு அரிசியாகும்.

தைப்பொங்கல் சூரியனிற்கு நன்றி

கைமேற் பலனான என்

பாலவயதுக் காட்சியிது அப்பா

வயற்காணிகளால் தன்னைக் கமக்காரனென்பார்.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-4-2015.

(இறப்பு – வீட்டுக்கூரையின் சிலாகை.    இறப்பும் சிலாகையும் அகராதியில் தேடினேன் ஒரு வேளை இது நாட்டுப்புறச் சொல்லாகவும் இருக்கலாம்)

Nyt billede

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 15, 2015 @ 20:41:57

  http://www.stsstudio.com/?p=7410

  Mikka nanry sakothara.

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 16, 2015 @ 00:13:45

  வணக்கம்

  ஒவ்வொரு வரிகளும்மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஏப் 16, 2015 @ 01:23:59

  அருமை சகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 16, 2015 @ 02:24:37

  அருமை சகோதரி…

  மறுமொழி

 5. மகேசுவரிபாலச்சந்திரன்
  ஏப் 16, 2015 @ 13:50:42

  பா அருமை, நன்றி.

  மறுமொழி

 6. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 17, 2015 @ 01:29:18

  உழைப்பின் பெருமையை கவிதையின் வரிகள் அருமையாக முன்வைக்கின்றன. கமக்காரன் என்ற சொல்லுக்கான பொருள் எனக்குத் தெரியவில்லை.

  மறுமொழி

 7. KILLERGEE Devakottai
  ஏப் 17, 2015 @ 07:16:51

  அருமையான கவிதை வரிகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: