3. வாழ்த்தும் விழா

vila may 2

பெண் படைப்பாளி வேதா இலங்காதிலகத்திற்கு பாராட்டு விழா

April 24, 2015

டென்மார்க்கில் வாழும் பிரபல பெண் கவிஞர், எழுத்தாளர் என்று பன்முக ஆற்றல் கொண்ட திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு ஓகூஸ் நகரத்தில் ஒரு பாராட்டுவிழா எதிர்வரும் 02.05.2015 சனிக்கிழமையன்று பகல் 14.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல் 

என்று நிகழ்ச்சிக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அலைகள் ஆசிரியர் அவர் தம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.

http://www.alaikal.com/news/?p=167314

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-a

anthimaalai vilamparam

கலைஞருக்கு மரியாதை

அன்புறவுகளே வணக்கம்.
நீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான   கவிதாயினி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும்  நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். “திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி” என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

“ஒன்றுபட்டு உயர்வோம்”

மிக்க அன்புடன்

 இ.சொ.லிங்கதாசன்  ஆசிரியர்   அந்திமாலை 

Vetha:-   ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.

http://anthimaalai.blogspot.dk/

9931287-page-rule-assortment-v

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 01, 2015 @ 02:09:38

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 2. தி.தமிழ் இளங்கோ
  மே 01, 2015 @ 14:08:16

  சகோதரி கவிஞர் வேதா இலங்காதிலகத்திற்கு பாராட்டு விழா என்னும் மகிழ்ச்சியான செய்தியை முன்பே படித்து இருந்தும் உங்கள் வலைத்தளம் பக்கம், உடன் வர இயலவில்லை. சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள். ஓகூஸ் தமிழ் ஒன்றியத்திற்கு நன்றி.

  மறுமொழி

 3. பிரபுவின்
  மே 01, 2015 @ 14:35:29

  அலைகள் உங்களைப் பற்றி பாராட்டியது உண்மையில் மிகவும் சிறப்பான தருணம் தான்.நன்றி சகோதரி.கடவுள் அனுக்கிரகம் உங்களுடன் இருப்பது வெளிச்சக் கூடு போன்று தெரிகின்றது.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  மே 01, 2015 @ 15:10:20

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: